வெள்ளி, 30 ஜனவரி, 2009

ஹிட்லரிடமிருந்து உலகை காத்த சோவியத் செஞ்சேனை 65-ம் ஆண்டு நிகழ்ச்சியில் மூத்த வீரர்கள் பெருமிதம்

ரஷ்யாவில் பனி நிறைந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு வெளியே திங்களன்று துப்பாக்கி குண்டுகள் சீறின. பீரங்கி குண்டுகள் பிராந்தியமே அதிரும் வகையில் முழங்கின. 2-ம் உலகப் போரின் போது, லெனின் கிராடு பகுதியை முற்றுகையிட்ட ஹிட்லரின் நாஜிப்படையை ஓட, ஓட விரட்டிய மார்ஷல் ஜார்ஜி சுகோவ் தலைமையிலான செஞ்சேனையின் வெற்றியை கொண்டாடும் 65-வது ஆண்டு தின நிகழ்ச்சியில்தான் இந்த குண்டுகள் முழங்கின.

ஹிட்லரின் நாஜிப்படையின் முற்றுகையை விரட்டியடித்த சோவியத் வீரர்களில் தற்போது உயிருடன் உள்ளவர்கள் உட்பட 4 ஆயிரம் பேர் இந்த அற்புத வெற்றியை நினைவு கூரும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற 350 பேர் ஜெர்மன் மற்றும் சோவியத் செஞ்சேனையின் சீருடைகளில் நாஜிப்படை முற்றுகையை முறியடித்த சாகசத்தை அருமையாக நிகழ்த்திக் காட்டினர்.

40 நிமிடம் நீடித்த இந்த நிகழ்ச்சி குறித்து, போரில் பங்கேற்ற 88 வயது மிக்கைல் குர்கின் கூறுகையில், சிறுவர்கள், வாலிபர்கள், இளம் வயதினருக்கு இத்தகைய நிகழ்ச்சி கட்டாயம் தேவை என்றார்.

பல பேருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் உலகப்போர் கால கட்டம் குறித்து தெரியவில்லை. வீரதீர காலங்கள் மரிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். 1941-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம்தேதியன்று லெனின் கிராடை ஹிட்லரின் நாஜிப்படை முற்றுகையிட்டது. அந்த நாசகரப் படை உணவு விநியோகப் பாதையை மூடியது. ஏறக்குறைய 15 லட்சம் மக்கள், உணவு கிடைக்காமல் பசிக்கொடுமைக்கு இரையாகினர்.

நாஜிப்படைக்கு பதிலடி தரும் நடவடிக் கையை சோவியத் செஞ்சேனையின் மார்ஷல் ஜார்ஜி சுகோவ் தலைமையி லான வீரர்கள் அதிரடியாக மேற்கொண் டனர். ரஷ்ய மக்களும், செஞ்சேனையும் ஹிட்லரின் நாஜிக்களை விரட்டியதை 81 வயது வாலண்டினா சிஸோயவா நினைவு கூர்ந்தார்.

நாஜிப்படை முற்றுகையின் போது அவருக்கு வயது 13. அந்த முற்றுகையின் போது உணவு கிடைக்காமல் தனது சகோதரி பிணமானதையும் அவர் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.

கருத்துகள் இல்லை: