மங்களூரில் இளம் பெண்களைத் தாக்கி மானபங்கப்படுத்திய ராம்சேனை குண்டர்கள் அனைவரும் (27 பேர்) ஜாமீனில் விடுவிக்கப் பட்டுவிட்டனர். மீண்டும் இது போல் செய் வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட தற்கு ’பெண்கள் அப்படி நடந்து கொண்டால் நிச்சயம் செய்வோம்’ என்று சர்வசாதார ணமாக கூறியுள்ளார்கள். அப்படி அந்த இளம் பெண்கள் என்னதான் செய்தார்கள்?
பப் ஒன்றில் தங்களுடைய ஆண் நண்பர் களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டி ருந்தார்கள். அது ஒன்றும் புதிதாக நடப்பதல்ல. தடை செய்யப்பட்டதோ அல்லது சட்ட விரோ தமானதோ அல்ல. அன்று அந்த பப்பிற்குள் நுழைந்த 40 சங்பரிவாரிகள், அந்த இளம் பெண்களை அடித்துத் துவைத்துவிட்டார்கள். கலாச்சார போதை தலைக்கேறிவிட்டது.
ஆனால், அதே பப்பில் இருந்த ஆண்கள் ஒருவரையும் அவர்கள் ஒன்றும் செய்ய வில்லை. அதாவது ஆண்கள் குடித்தால் தப்பில்லை. பெண்கள் குடித்தால் தப்பு. அவர் கள் தப்பு என்று நினைத்தால், அவர்கள் வீட் டுப் பெண்கள் குடிக்காமல் பார்த்துக் கொள் ளட்டும். யாரும் ஒன்றும் சொல்லப் போவ தில்லை. அதுவும் கூட, அவர்கள் வீட்டுப் பெண்கள் மீது கூட வன்முறையைப் பிரயோ கிக்கக் கூடாது. சட்டப்படி குற்றம். நாகரீகப்படி காட்டுமிராண்டித்தனம்.
இந்தக் காவிக்குண்டர்கள், யாரோ மது அருந்திய பெண்களை அடித்து உதைத்தது மட்டுமின்றி, ஆடையைக் கிழித்து மானபங் கப்படுத்தியிருக்கிறார்கள், இந்துத்துவ பண்பாட்டு அருஞ்சொற்களால் அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள். இது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிற வேலையில்லை. உண்மையில் இது கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலை.
இஸ்லாம், கிறிஸ்துவம், மற்றும் இன்னபிற மதங்களைச் சேராத பல கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்களை ஒரே கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர்களாக எப்படியாயினும் மாற் றினால்தான், அதாவது இந்துக்களாக மாற்றி னால்தான், பிற மதங்களால் இந்து மதத்திற்கு ஆபத்து என்று அச்சமூட்டி அவர்களைத் திரட்ட முடியும். கலவரம் நடத்த முடியும். அதற்காக அவர்கள் ’இந்துக்களையே’ தாக்கி வழிக்குக் கொண்டு வர முயற்சிப்பார்கள்.
பெண்கள் மது அருந்துவது பற்றி இவ்வ ளவு ஆரவாரம் செய்கிற சங்பரிவாரம், பூரண மதுவிலக்கு கோரி பெண்கள் நடத்திய இயக் கங்கள் எதிலாவது பங்கேற்றிருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.
மனுதர்மப்படி பெண்களுக்கு கடமைக ளும், தடைகளும் மட்டுமே உள்ளன. உரிமை கள் கிடையாது. பெண்கள் தனியே வாழக் கூடாது, கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், காதலிக்கக் கூடாது. பிள்ளைகளைப் பெற்றுப் போட வேண்டும். ஆனால், காமுறக் கூடாது. பொங்கிப் போட வேண்டும். ஆனால், உண்டி பெருக்கக் கூடாது. இந்தப் பட்டியல் இன்னும் நீளம்.
பெண்கள் குடிக்கக் கூடாது, காதலிக்கக் கூடாது, உண்டி பெருக்கக் கூடாது. ஆனால், குண்டு வைக்கலாம். மனிதர்களைக் கொல்ல லாம். தங்கள் ஆண்கள், பிற மதப் பெண்களை வெட்ட வெளியில் பாலியல் பலாத்காரம் செய்வதை (குஜராத்) கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தலாம்.
பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட் டும் கர்மவினைப் பயன் கோட்பாடு இன்னும் நம்மைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறையை விசாரிக்க வந்த தேசிய மகளிர் ஆணையத்தைச் சேர்ந்த நிர்மலா வெங்க டேஷ் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
அது தங்கும் விடுதி மட்டும்தான். அதற் குத்தான் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. தங்கு பவர்களுக்கு மட்டும்தான் பப்பில் ’உணவு’ வழங்கப்பட வேண்டும். இந்தப் பெண்கள் அங்கு ஏன் போனார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படிப் போனவர் களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது விடுதி நிர்வாகத்தின் தவறு என்றிருக்கிறார். அந்தப் பெண்களை அடிக்க முத்தாலிக் கும்ப லுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றோ, அடித்தது குற்றம் என்றோ, அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றோ அவர் ஆவே சப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடமே தப்பைத் தேடுகிறார்.
மற்றொரு பேட்டியில், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்திருக்க வேண்டும் என்றும், பப்புக்குப் போவதில் என்ன தப்பு என்றும் கேட்டிருக்கிறார். சங் பரி வாரம் உருவாக்கி வைத்திருக்கும் பீதியில் உண் மையைப் பேசவும் நடுங்குகிறார்கள் பலர்.
பப் கலாச்சாரத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார் கர்நாடக மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா. அதே கருத்தை எதி ரொலிக்கிறார் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் கெலாட்.
கெலாட் சொன்ன இன்னொரு கருத்துதான் மிக முக்கியமானது. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தராதான் (பெண்) பப் மற்றும் மால் கலாச்சாரத்தை ஊக்குவித்தவர், அவர் ஆட்சியில்தான் மாநி லத்தில் பப்களும், மால்களும் அதிகமாகின என்றுள்ளார். அதாவது, கர்நாடக பாஜக முதல் வர் எது தவறு என்கிறாரோ, அதை ராஜஸ் தான் பாஜகவின் முன்னாள் முதல்வர் செய் தார். அதுவும் வசுந்தரா என்கிற ஒரு பெண்.
எடியூரப்பா இத்தாக்குதல் குறித்து கருத்து கூறும் போது ``யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது’’ என்றிருக்கிறார். இதன் அர்த்தம் என்ன? பெண்கள் செய்தது குற்றம், ராம் சேனை செய்தது, அந்தக் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தது என்று ஆகிறது. ராம் சேனை குண்டர்கள், நாங்கள் இது போன்ற வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று தைரியமாகக் கூறியதற்கான காரணம் இப்போது புரிகிறது.
திங்கள், 2 பிப்ரவரி, 2009
கலாச்சார ரவுடிகள்
எம். அசோகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக