1948ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி காந்தி கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதுதான் கொலைகார நாதுராம் கோட்சேயின் கும்பல் காந்தியைக் கொல் வதற்கு நிர்ணயித்த தேதி. இதற்காக அவர்கள் கூட்டாகத் திட்டமிட்டனர் ஒத் திகை பார்த்தனர். பிர்லா மாளிகையில் வழக்கமாக காந்தி பிரார்த்தனைக் கூட் டம் நடத்தும் இடத்துக்கு அருகே ஒரு சிறிய வீடு இருந்தது. அது அங்கே வேலை செய்யும் ஊழியருக்கான வீடு. இந்த வீட்டில் குடியிருந்தவருக்கு பத்து ரூபாய் ` அன்பளிப்பு’ கொடுத்துவிட்டு, பொய்யான காரணம் சொல்லிக் கொண்டு அதற்குள் புகுந்துதான் ஒத்திகை பார்த் தது இந்தக் கொலைகாரக் கும்பல்.
மக்கள் கூடியிருக்கும் அந்த இடத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தின் சுவர் ஓரத்தில் சதிகாரர்களில் ஒருவனான மதன்லால், குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டினை வைத்து வெடிக்கச் செய்ய வேண்டும்; இது முடிந்த உடனே காந்திக்கு மிக நெருக்க இடத்திலே பாட்கே தூப்பாக்கியால் சுடவேண்டும். அதே சமயம் அந்த ஊழியர் வீட்டின் ஜன்னல் வழியாக கோபால் கோட்சே கையெறி குண்டுகளை வீசவேண்டும். கார்காரேயும் வெடிகுண்டுகளுடன் காந்திக்கு முன்னால் மக்களோடு மக்களாகக் கலந்திருக்க வேண்டும். மதன்லாலின் குண்டு வெடித்தவுடன் கார்காரேயும் காந்தி மீது குண்டினை வீசவேண்டும். இதெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதை கண்காணிப்பவர்கள் நாதுராம் கோட்சேயும், நாராயண் ஆப்தேயும். எந்த வகையிலும் காந்தி தப்பித்துவிடக் கூடாது என்பது இவர்களின் திட்டம்.
ஜனவரி 20ந் தேதி மாலையில் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கி யது. சதிகாரர்கள் அன்று காலையில் தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு ஏற்ப கூட்டத்தில் மதன்லாலின் டைம்பாம் வெடித்தது. மக்களிடையே பயந்தாலும் பீதியாலும், குழப்பம் ஏற்பட்டது; சிதறி ஓடினர். ஊழியரின் வீட்டுக்குள் தரையி லிருந்து 8 அடி உயரத்தில் இருந்ததால் ஜன்னல் வழியாக கோபால் கோட்சே யால் குண்டு வீச முடியவில்லை; மற்ற இருவராலும் சுடமுடியவில்லை. முதலா வது கொலை முயற்சியிலிருந்து காந்தி தப்பித்தார்.
ஆனால் கொலைச் சதியின் ஒரு பகுதியாக டைம்பாம் வெடித்த மதன்லால் மாட்டிக் கொண்டான். பிர்லா மாளிகையின் பின்புறத்தில் இருந்த ஒரு ஏழைத் தாய் ``அவன் தான்! அவன்தான்’’ என்று அலறி சத்தம்போட்டு அவரைக் - காவல் துறையிடம் அடையாளம் காட்டினாள். மதன்லால் கைது செய்யப்பட்டான்.
இதன் பிறகுதான் இரண்டாவது சதித் திட்டம் தீட்டப்பட்டது. இப்போது இந்தத் திட்டத்தைத் தானே நிறைவேற்றுவது என்று சதிக்கும்பல் தலைவன் நாதுராம் கோட்சே முடிவு செய்தான். இதற்காகக் கறுப்பு நிற பெரெட்டா துப்பாக்கியை வாங்கிக் கொண்டான். காந்தியை நெருங் கிச் செல்ல வசதியாக முஸ்லிம் பெண் ணைப் போல் பர்தா அணிந்து செல்வ தென்று முடிவு செய்தான். பர்தாவை வாங்கி அணிந்து பார்த்தான். ஆனால் துப் பாக்கியை அவசர அவசரமாக வெளியே எடுப்பதற்கு இந்த உடை சரியாக இருக் காது என்று, முடிவை மாற்றிக் கொண் டான். கடைசியாக காக்கி நிற கால் சட் டை; அதற்குமேல் தொள தொளப்பாக நீண்டு தொங்கும் மேலங்கியோடு பிரார்த் தனைக் கூட்டத்துக்கு செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. இந்த உடையில் தான் காந்தியைக் கொல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
1948 ஜனவரி 30ஆம் நாள் காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரும் வழியாக அவசர அவசரமாக அவரை நெருங்கி வணங்குவது போல் குனிந்து, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காந்தியின் நெஞ்சில் மூன்று முறை சுட்டு நாதுராம் கோட்சே கொலை வெறியைத் தீர்த்துக் கொண்டான்.
இப்படிப் பல ஆண்டுகள் பலபேரு டன் சேர்ந்து திட்டம் தீட்டி கொல்லும் அளவுக்கு காந்தி என்ன செய்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்; மதவெறி கூடாது என்று உரத்துக் கூறினார். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காந்தி, இதற்காக சுதந்திர தினத்தைக் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளாமல், அன்றைய தினத்தை மவுன விரதத்தோடு ராட்டையில் நூல்நூற்றுக் கழித்தார். ஆனால் பிரிவினை உறுதியானபின், இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலுள்ள இந்துக் கள் இந்தியாவுக்கும் தப்பிப் பிழைத்து வந்தனர். இவர்களுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பிடி வாதமாகக் கூறினார். பாகிஸ்தானுக்கு சேரவேண்டிய தொகையைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பாகிஸ் தானுக்குச் செல்ல திட்டமிருந்தார். பிரிவினையின் போது படுகொலைகள் பல நடந்த பாதையில் அவரது பாதங்கள் பயணத்தைத் தொடங்கும். அன்பு எனும் சக்தியால் மக்களிடையே பாலத்தை ஏற்படுத்திவிடலாம் என்பது அவரது கனவாக இருந்தது.
மதவெறி ஒன்றையே மனதில் கொண்ட ஆர்எஸ்எஸ் இந்துமகா சபா மூர்க்கர்களுக்கு காந்தியின் சமாதானம் பிடிக்கவில்லை. மதவெறி என்பது நேருக்கு நேர் மோதிக் கொல்வது மட்டுமல்ல; யாருக்கும் தெரியாமல் சதித் திட்டங்கள் தீட்டி, பழியை அடுத்தவர் மீது போட முயற்சிப்பதும்தான் என்பதை மகாத்மா காந்தியின் படுகொலை சம்பவத்தில் மட்டுமல்ல; மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் பார்த்தோம். போதிப்பது, மக்களிடம் மதவெறி விஷம் பரப்ப போலிச்சாமியார்; சந்தேகத்திற்கிடமில் லாமல் ஆயுதங்களும் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளும் வழங்க ராணுவ அதிகாரி என்றொரு வலைப் பின்னல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கார்க்கரே என்றொரு நேர்மையான காவல் துறை அதிகாரி மூலமே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரையும் கொன்றுவிட்டது பயங்கர வாத கும்பல். அவருக்கு அடுத்தபடியாக வந்துள்ள அதிகாரி, மாலேகாவ் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்து மதவெறியர்கள் தப்பித்துக் கொள்ள துணை போவதாக செய்திகள் வருகின்றன.
காவல் துறையினரின் இதுபோன்ற மெத்தனப் போக்கும், இந்து மதவெறியர் களிடம் மென்மையாக நடந்து கொள்வ தும் 1948-லும்-இருந்தது. காந்தியைக் கொல்வதற்கான முதலாவது சதித் திட்டத்தின் போது சிக்கிய மதன்லால். போலீஸ் `விசாரணை’’ காரணமாக நான்கே நாட்களுக்குள் முழு உண்மை யையும் ஒப்புக் கொண்டான். சதி செய்த கும்பல் பற்றிய முழு விவரத்தையும் தெரிவித்துவிட்டான்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த சஞ்சீவி என்ற அதிகாரி, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பூனாவில் நாதுராம் கோட்சேயும், நாராயண் ஆப்தேயும் நடத்தும் பத்திரிகை பற்றிய முழு விவரம் தரப்பட்டது. காவல் துறை கோப்புகளில் கார்காரே, ஆப்தே ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இவ்வளவு இருந்தும் காந்தியை ஏன் சதிகாரர்களின் கைகளில் எளிதாக ஒப்படைத்துவிட்டது அன்றிருந்த டில்லி, பூனா காவல்துறை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
`மக்களே போல்வர் கயவர்’ என்பதற் கேற்ப, மக்களோடு மக்களாகக் கலந்து மதவெறி விஷத்தைக் கலக்குவதும், சதித் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் தொடர்கிறது.
நல்லவர்கள் போல் நடித்து, நயவஞ்சக செயல் புரிந்து, கழுத்தறுக்கும் மதவெறி தான் அஹிம்சை ஒன்றையே ஆயுத மாகக் கொண்டு சத்தியாக்கிரகம், உண் ணாவிரதம் என்ற போராட்ட வடிவங்கள் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட காந்தியைக் கொன் றது. மதமோதல்கள் வெடித்துப் பிணங் கள் சிதறிக்கிடந்த இடத்துக்கும், ரத்த ஆறு ஓடிய பகுதிக்கும் வற்றிய உடலோடு ஒரு சிறிய கைத்தடியை மட்டும் துணை யாகக் கொண்டு நடக்கும் துணிவு காந் திக்கு மட்டுமே இருந்தது. சமாதானத் தை ஏற்படுத்தும் சக்தியையும் அவர் மட் டுமே கொண்டிருந்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசியவரையும் தண்டிக்காமல் விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் பெருந்தன்மை காந் திக்கு இருந்தது. அது அவரின் சொத் தாகவே இருக்கட்டும். ஆனால் இந்து மத வெறிக் கூட்டத்தையும், அதன் பண்டைய வரலாற்றையும் மறக்காமல், அதனை இந்திய அரசியல் அரங்கிலிருந்தே அப் புறப்படுத்துவதுதான் அண்ணல் காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி யாக இருக்க முடியும்.
இன்று மகாத்மா காந்தி நினைவு
மயிலைபாலு
2 கருத்துகள்:
காக்ரேயைக் கொன்றது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாத
கும்பல்.அதை மூடி மறைத்து எழுதும் நீ யார் பக்கம் இருக்கிறாய்? அந்த இஸ்லாமிய தீவிரவாத கும்பல் பக்கமா?
இந்த்துவத்தை எதிர்க்கும் உங்களைப் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக
வாயே திறக்கமாட்டீர்கள்.இஸ்லாமிய
தீவிரவாதம் இருப்பதை எழுதமாட்டீர்கள்.ஏன்?
உங்கள் கேள்வி எந்த அளவிற்கு நீயாம் இருக்கிறது என்பதை கொஞ்ச யோசிங்கள் மதத்தை பயன்படுத்தி எந்த அமைப்பு பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டாலும் கடுமையாக கண்டிக்கிற முதல் நபராக நாங்கள்தான் இருக்கிறோம். என்றைக்கு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தோ அன்றில் இருந்து இந்தியாவில் பெரிய அளவில் இஸ்லாமிய பயங்கிரவாதம் நடந்துவருகிறது. உங்கள் வீட்டை ஒரு 100 ஆண்டுகளுக்கு முன் வைத்து இருந்ததாக கூறி இடித்தால் நீங்கள் அவர்களுக்கு என்ன பரிவு அளிப்பீர்கள். சிந்தியுங்கள் அனானி நன்பரே
கருத்துரையிடுக