வெள்ளி, 23 ஜனவரி, 2009

அந்த 93 மைல் இடைவெளியில்...

இதுவரை உலகில் எழுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியான தாக்கு தலை தொடுத்திருக்கிறது ஒரு தேசம்... உலகில் 68 நாடுகளில் இன்றைக்கும் தனது நாட்டிலிருந்து சுமார் முப்பதாயிரம் மருத்துவர்களை அனுப்பி, மருத்துவம் செய்து கொண்டிருக்கிறது இன்னொரு தேசம்.. ஒரு சின்னஞ்சிறிய நாட்டின் அதி பரை கொல்வதற்காக “ஆபரேசன் பேமிலி ஜூவல்ஸ்” என்ற பெயரால் இதுவரை யிலும் 638 முயற்சிகளை செய்திருக்கும் குரூரம் ஒரு தேசத்தினுடையது. ஐம்பது ஆண்டுகளில் இவ்வளவு முறை என் றால், சராசரியாக மாதத்திற்கு ஒரு கொலை முயற்சி.. அனேகமாக அனைத்து அதிபர் களின் காலத்திலும் இத்தகைய கொலை முயற்சிகள் நடந்திருக்கும்... தனது நாட்டு அதிபரை இத்துணை முறை கொலை செய்யத் துடித்த அந்த ஏகாதிபத்திய நாட் டை 2005ம் ஆண்டு காத்ரீனா என்கிற புயல் தாக்கிய போது உடனடியாக பாதிக்கப் பட்ட மக்களுக்காக தனது நாட்டிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு மருத்துவர்களை அனுப்பி இலவசமாக சிகிச்சை அளித்த மனிதநேயம் மற்றொரு தேசத்தினுடையது.

தனக்கு அருகில் இருக்கும் அந்த சின் னஞ்சிறிய தீவை பொறுத்துக்கொள்ள முடியாமல் எப்படியாவது தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்பதற்கான வன்மத் தோடு 250 கோடி டாலர்கள் செலவில் ஒரு தனி வானொலியையே துவக்கி, இரு பத்து நான்கு மணி நேரமும் செய்யப்பட்ட எதிர் பிரச்சாரங்கள் ஒருபுறம்.. 2001ம் ஆண்டில் செப்டம்பர் 11 தாக்குதலின் போது பற்றி எரிந்து கொண்டிருந்த பகுதி களில் பணியாற்றிய போது விபத்துக்குள் ளான அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் தன் நாட்டிற்கு அழைத்து உயர்தர சிகிச்சைகள் அனைத்தும் அளித்து, தனது நாட்டு தீயணைப்பு நிலையங்களில் மரியாதை செய்து திருப்பி அனுப்பிய மனிதாபிமானம் மறுபுறம்.. உல கின் பல முனைகளில் தனது நாட்டு ராணுவத்தை நிறுத்தி, கோடிக்கணக் கான டாலர்களை செலவழித்து உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக் கும் மோசமான தேசம் ஒன்று.. ஆனால் 26 லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டும் சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு தன் செலவில் இலவசமாக கண்அறுவை சிகிச்சை செய்திருக்கும் உன்னத தேசம் மற்றொன்று...

பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொல்லி ஒரு நாட்டிற்குள் புகுந்து அந்நாட்டு அதிபரை கொன்று குவித்த நய வஞ்சகம் ஒருபுறம் எனில், உலகில் ஆயு தங்களை அழித்து சமாதானத்தை நிலை நாட்டுவோம் என்கிற ஆலோசனை யோடு அனைவரையும் ஆரத்தழுவும் அர சியல் பண்பாடு மறுபுறம். விழாவொன் றில் கால் இடறி ஒரு நாட்டின் அதிபர் விழுந்த காட்சியை உலகின் அனைத்து ஊடகங்களிலும் திரும்ப திரும்ப ஒளிபரப்ப வேண்டும் என கட்டளையிட்டு ஆர்ப்ப ரித்த காட்சி ஒருபுறம் என்றால், தான் வாங்கிய செருப்படி காட்சிகளை எங்குமே ஒளிபரப்பக்கூடாது என அதட்டி உத்தர விட்டதோடு அந்த செருப்பையும் கூட உடனடியாக அழித்த காட்சி மறுபுறம்...

பட்டியலிட்டால் தொடர்ந்துகொண்டே போகும் இத்தகைய முரண்பாடுகள்... இத்தகைய முரண்பாடுகளின் பூகோள இடைவெளி வெறும் 93 மைல் மட்டுமே. ஆனால் இந்த முரண்பாடுகள் தற்செயலா னது அல்ல.. இவைகளின் பின்னணியில் அதற்கான காரணமும சித்தாந்த அடை யாளமும் இருக்கிறது. ஒன்றின் பெயர் ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்கா... மற் றொன்று சோஷலிசம் அல்லது கியூபா... உலகின் அனைத்து தேச மக்களையும் தனது மக்களைப் போலவே பாவிக்க முடியுமென்றால் அதன் பெயரே சோசலி சம்.. தன் தேசத்து மக்களையும் கூட ஒரு அரசால் வெறுக்க முடியுமென்றால் அதன் பெயர் ஏகாதிபத்தியம்.

கொலை முயற்சிகள், பொருளாதார தடைகள், எதிர்ப்பிரச்சாரங்கள் என அனைத்தையும் தாண்டித்தான் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது கியூபா என்ற அந்த சோசலிச தேசம்... பொன்விழா கொண் டாட்டங்களின்போது மேற்கத்திய ஊட கங்கள் அந்நாட்டு மக்களிடம் கேட்டது... “உங்கள் பிடல் காஸ்ட்ரோ காலத்திற்கு பின்பு ஒருவேளை அமெரிக்கா உங்கள் மீது போர் தொடுத்தால் என்ன செய் வீர்கள்...? மக்கள் சொன்ன பதில்... “இறு திவரை சோசலிசம் அல்லது வீரமரணம்...” கியூப மக்களின் இந்த பதிலுக்கு நம் வீர வணக்கங்கள்... மக்களை நேசிக்கிற அனைவரும் சோசலிசத்தை நேசிப்பவர் களே.. கியூப புரட்சியின் பொன்விழா என் பது சோசலிசத்தின் பொன்விழா... உலக மக்களின் பொன்விழா... அதை உற்சாகத் தோடு கொண்டாடுவோம்...
- பத்ரி

2 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

கியூப மக்களின் இந்த பதிலுக்கு நம் வீர வணக்கங்கள்... மக்களை நேசிக்கிற அனைவரும் சோசலிசத்தை நேசிப்பவர் களே.. கியூப புரட்சியின் பொன்விழா என் பது சோசலிசத்தின் பொன்விழா... உலக மக்களின் பொன்விழா... அதை உற்சாகத் தோடு கொண்டாடுவோம்...
- பத்ரி///

பத்ரி
உணர்வில்
நானும்
கலந்து
கொள்கிறேன்..

தேவா.........

விடுதலை சொன்னது…

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி