ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இஸ்ரேலின் கொலைவெறி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பாலஸ்தீன மக்களின் உயிருக்கும் உடமைகளுக் கும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக காசாவை தாக்கி வரும் இஸ் ரேலியப் படைகள் சனிக்கிழமை இரவு முழுவதும் காசா மீது கொடூரத் தாக்குதல் நடத்தின. சனிக்கிழமை இரவில் இருளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தரைப்படை காசாவில் நுழைந்தது. ஏராளமான டாங்குகள் காசாவில் புகுந்தன. காசா நகரம், பெய்ட் லாஹியா மற்றும் பெய்ட் ஹானுன் நகரங்களைச் சுற்றி கடும் தாக்குதல் நடந்தது. மக்களுக்கு எரிவாயு வழங்கும் கிட்டங்கி தாக்கப்பட்டதில் பெருந்தீ பற்றி எரிந்தது.

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஹமாஸ் இயக்கத்தினர் கொல்லப்பட்டார்கள் என்று இஸ்ரேல் தரைப்படை கூறியது. ஒன்பது இஸ்ரேலியர் மடிந்ததாக ஹமாஸ் கூறு கிறது. காசா நகர் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள் ளது. கடும் தாக்குதல் நிலவுவதால், படுகாயம் அடைந்தவர் களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்திகள் அங்கு செல்ல முடியவில்லை.

ஏறத்தாழ பத்தாயிரம் இஸ்ரேல் படையினர் ஒட்டு மொத்த காசாவையும் சுற்றி வளைத்து போரில் ஈடுபட் டுள்ளனர். ஹமாஸ் பாதுகாப்பு அமைப்புகளை அழிப்பது டன், ஹமாஸ் தலைவர்களைக் கொல்லவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் திருப்பி அடித்தால் போர் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேலின் பிரதமர் வேட் பாளரும் தற்போதைய அயல்துறை அமைச்சருமான டிசிபி லிவ்னி மிரட்டியுள்ளார்.

இஸ்ரேல் விமானப்படைகள், 7 சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட 40 இலக்குகள் மீது தாக்குதல் தொடுத்தன. காசா நகரிலும், எல்லைப் பகுதிகளிலும் உள்ள மக்கள் வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கும் பிரசுரங்களை இஸ்ரேல் வீசியது. ஒரு ஹமாஸ் படைத் தலைவர், 4 குழந்தைகள் உள் ளிட்ட 16 பேர், விமானத் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 500ஐத் தாண்டி யுள்ளது.

கண்டன தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா

ஐ.நா.சபை, ஜன. 4 -

காசாவில் இஸ்ரேலின் தாக்கு தலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

காசா மீது இஸ்ரேல் தரை வழித்தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - பேர ணிகள் நடைபெற்று வரு கின்றன.

இந்நிலையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் வேண்டுமென்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட வேண்டுமென்று லிபியா வேண்டுகோள் விடுத்தது. இஸ் ரேலின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்துவரும் அமெரிக்கா இங்கும் தலையிட்டு, இஸ்ரேல் குறித்த அறிக்கையை தடுத்துவிட்டது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் ரகசியக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களில் எந்த வொரு முடிவையும் எடுக்கவிடாமல் அமெரிக்கா தடுத்தது என்று பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப் பினராக உள்ள ஒரே அரபு நாடான லிபியாவின் ஐ.நா.வுக்கான தூதர் கியாடல்லா எட்டால்ஹி கூறினார்.

சமரச அடிப்படையில் அறிக்கையில் கூர்மையைக் குறைக்கும் முயற்சிகளில் கூட கருத்தொற் றுமை ஏற்பட அமெரிக்கா அனு மதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: