செவ்வாய், 13 ஜனவரி, 2009

விப்ரோவுக்கு உலக வங்கி வர்த்தகத் தடை மொத்தம் மூன்று இந்திய நிறுவனங்கள்

உலக வங்கியுடன் நேரடி வர்த்தகம் செய்வதற்கு விப்ரோ மற்றும் மெகா சாப்ட் நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித் துள்ளது. சத்யம் நிறுவனத் தையடுத்து இவ்விரு இந்திய நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இத்து டன் உலக வங்கி வர்த்தகத் தடை விதித்துள்ள இந்திய நிறுவனங்கள் மூன்றாக உயர்ந்துள்ளன.


உலக வங்கி ஊழியர் களுக்கு முறையற்ற சலுகை கலை இவ்விருநிறுவனங் களும் வழங்கியுள்ளன. எனவே, இவை உலக வங்கியிடம் நேரடியாக ஒப்பந்தங்களைப் பெற 2011 முடிய தடை செய்யப்பட்டுள்ளன. இதே போல் மெகாசாப்ட் நிறுவனமும், 2007 முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

உலக வங்கியுடன் எதிர் காலத்தில் வியாபாரம் செய்ய இயலாமல் போனதால் எங்களுடைய வியாபாரமும் அதன் பயன்களும் பாதிக்கப்படமாட்டாது என்று விப்ரோ அறிக்கை குறிப்பிடுகிறது. உலக வங்கி விதித்த தடையால் வருமா னப் பாதிப்பு ஏற்படாது என்று மெகாசாப்ட் நிறுவ னமும் கூறியுள்ளது.

நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை மனதிற்கொண்டு உலக வங்கியின் நிறுவனக் கொள்முதலில் தடை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவதென்று உலக வங்கி முடிவு செய்துள்ளது என்று அது வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

சத்யம் 2008 செப்டம்பர் முதல் 8 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது. உலக வங்கி சத்யம் நிறுவ னத்தின் பெயரை வெளியிட்டதற்கு உலக வங்கி மன் னிப்பு கேட்க வேண்டும் என்றும் ‘பொருத்தமற்ற’ அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் சத்யம் கூறியது. இவ்விரண்டு கோரிக்கைகளையும் உலக வங்கி நிராகரித்துவிட்டது.

உலக வங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் / தனி நபர்களை தற்காலிக மாக அல்லது ஆயுட்காலம் வரை தடை செய்துள்ளது. குர்ப்ரீத் சிங் மாலிக், விக்ரம் தீபக் குர்சஹானி, கமல் சாரதா - சாரதா இம்பெக்ஸ் (யுகே லிமிடெட்) ஆகிய நைஜீரிய நிறுவனங்களும், லாப்சிங் ஜில், லாப்யுனி வர்சல், பிரதீப் மேனன், சிங் சங்கர் பிரி நாயர், பிரதீப் எஸ்.நாயர் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களும் மன்தீப் எஸ்.சந்து என்ற அமெரிக்க நபரும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளனர் என்று அதன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

RAMASUBRAMANIA SHARMA சொன்னது…

Companies or Individuals, who are banned from "THE WORLD BANK"... are supposed to be big shots...nothing will happen to them...they must be knowing all the routes to escape from the scandals...and to give "HALWA"... even to "THE WORLD BANK"...like they have been giving here...

RAMASUBRAMANIA SHARMA சொன்னது…

yes pl