செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

இந்துத்வா தலிபானிசம்’

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இந்துத்வா கும்பல், 2009 ஜனவரி 24 அன்று மங்களூரில் பொது விடுதி ஒன்றில் இருந்த இளம் பெண்கள் மீது காட்டு மிராண் டித்தனமான முறையில் தாக்குதல் தொடுத் திருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். ஸ்ரீ ராம் சேனை என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள இந்துத்வா அமைப் புகளில் ஒன்று இத்தாக்குதலைப் புரிந்திருக் கிறது. தாங்கள் அவ்வாறு இளம்பெண்கள் மீது தாக்குதல் தொடுக்கவிருப்பது தொடர்பாக அது தனக்கு சாதகமான தொலைக்காட்சி ஊட கத்திற்கும் முன்னமேயே தகவல் அளித்து, இவ்வாறு வெறிபிடித்த மதவெறித் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளையும் ஒளிபரப்பிட வகை செய்துள்ளது. காட்டு மிராண்டித்தனமான முறையில் சம்பவம் நடைபெற்ற அன்றே, ஸ்ரீ ராம் சேனையானது, தனியார் அலுவலகம் ஒன்றினுள் நுழைந்து, இதேபோன்று சில சாக்குப்போக்குகளைச் சொல்லி, அங்கிருந்தவர்கள் மீது கடுந் தாக்கு தலைத் தொடுத்திருக்கின்றன. இவ்வாறு நடைபெற்ற தாக்குதல் தொடர்பாகக் கிஞ்சிற் றும் மனவருத்தமோ மனச் சங்கடமோ அடைந்திடாதது மட்டுமல்ல, மாறாக இத னைப் பெருமையுடன் நியாயப்படுத்தும் வகை யில், ``எங்களது பையன்கள் சற்றே அதீதமாக நடந்து கொண்டிருந்திருக்கலாம், ஆயினும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே, இந்நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காகவே. அவர்கள் நடந்து கொண்ட விதம் இந்தமுறை வேண்டுமானால் விவாதப் பொருளாக மாறியிருக்கலாம். ஆனா லும் எங்கள் பையன்கள் நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்கு உளப்பூர்வமாக இருந்திருக்கிறார்கள்’’ என்று ஸ்ரீ ராம்சேனையின் தலைவர் திருவாய் மலர்ந் திருக்கிறார்.

இவரது கூற்றை, இந்துத்வா தலிபானிசத் தின் ஓர் அசிங்கமான வெளிப்பாடு என்று கூறுவதைத் தவிர, வேறென்னவென்று அழைத்திட முடியும்? தலிபான் இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் பள்ளிக் கூடத்திற்கு செல்லத் துணிந்த ஐந்து இளம் சிறுமிகளை உயிரோடு புதைத்த சம்பவத்தை நினைவுகூர்க. தலிபான், பெண்களின் ``பண் பாடு மற்றும் பாரம்பரியத்தை’’க் காப்பாற்று கிறோம் என்ற பெயரில் உடைகள் மற்றும் நடத்தை விதிகளை வகுத்திருக்கிறது. இதனை எவரும் மீறும் பட்சத்தில் அவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்படு வார்கள். இதே தொனியில்தான் ஸ்ரீ ராம் சேனையின் தலைவரும், ``எவரேனும் நம் ``பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை மீறும் பட்சத்தில், அதனை எதிர்த்திட நாங்கள் தயங்க மாட்டோம்’’ என்று கூறுகிறார்.

பாரம்பரியப் பண்பாட்டைக் காப்பாற்று கிறோம் என்ற பெயரில் இவ்வாறு நடத்தப் படும் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் மட்ட ரகமான காட்டுமிராண்டித்தனமே தவிர வேறல்ல. நவீன நாகரிக சமூகத்தின் அடிப் படைக் கூறுகள் மீதே அவர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அறுபதாம் ஆண்டில் அடி யெடுத்து வைக்கக்கூடிய சம யத்தில் இவ்வாறு பாசிஸ்ட்டுகளின் தாக்கு தல்கள் நடந்திருப்பதானது உண்மையில் வெட்கக் கேடாகும். ‘இந்தியாவின் கலாச்சாரத் தைக்’ காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இளம்பெண்கள் மீது காட்டுமிராண்டித்தன மாகத் தாக்குதல் தொடுத்திருக்கும் இவர் களுக்கு, நம் அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவின் வேற்றுமைப் பண்புகள் மற்றும் அதன் வளமான கலாச்சாரத் தன்மைகளைக் குறித்தும் கூட சிறிதும் அறிவு கிடையாது என்பதையும் இவர்கள் வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டிவிட்டனர். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மதவெறி பிடித்த சகிப்புத்தன்மை யற்ற பாசிச ‘இந்து ராஜ்ஜியமாக’ மாற்றி அதன்மூலம் ஏதேனும் கொஞ்சம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்ற நப்பாசை யுடன் இவ்வாறு மதவெறிக் கத்தியை பாசிச சக்திகள் கூர்மைப்படுத்திக் கொண்டிருக் கின்றன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, மக்கள் மத்தியில் கோபாவேசம் எழுந்ததையடுத்து, கர்நாடக மாநில அரசு நிர்வாகம், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட் டவர்களில் 31 பேரை இது வரை கைது செய்தது. (அவர்கள் அனைவ ரையும் பின்னர் விடுவித்தும் விட்டது.) ஸ்ரீராம் சேனையின் தலைவர் பிரமோத் முதலிக் என்ப வரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்படவில்லை. மாறாக தேவநாகரியில் மதவெறிச் செயல்களில் ஈடுபட்டது தொடர் பாக அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு மதவெறியர்கள் தாக்குதல் தொடுப்பதென்பது, தெற்கு கன்னடப் பகுதி யில் வழக்கமான நடைமுறையாக மாறிப் போயுள்ளது. பாஜக மாநில அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், இதுபோன்ற நிகழ்வுகள் குறைந்தது 14 இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய மத வெறி சக்திகள் தங்கள் காட்டுமிராண் டித்தனமான தாக்குதல்களைத் தொடர்வ தற்கு, ஆளும் பாஜக அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது மாநில முதல்வரும் உள்துறை அமைச்சரும் இச்சம் பவங்கள் தொடர்பாக அளித்துள்ள பேட்டிக ளும் அதனை மீண்டும் உறுதிப்படுத்து வதாகவே இருக்கின்றன. கயவர்கள் மீது ``கடும் நடவடிக்கை’’ எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தாலும், செய்தியாளர்கள் ``ஸ்ரீராம் சேனை தடைசெய்யப்படுமா’’ என்று கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக் காமல் மழுப்பிவிட்டார். பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டது குறித்தும், காட்டு மிராண் டித்தனமாக நடந்து கொண்டுள்ளது குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் பதிலளிக்கையில் ‘சங்கதிகளை செய்தியாளர்கள் மிகைப்படுத் துவதாக’ திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இந்நிகழ்வுகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பில் பேட்டியளித்தவர், ``பொது விடுதி களில் பெண்கள் இருப்பது, இந்திய கலாச் சாரத்திற்கு எதிரானது’’ என்று கூறி ஸ்ரீராம் சேனையினரின் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு இந்து மதவெறியர்களின் நடைமுறைகள், தலிபான் மதவெறியர்களின் நடைமுறைகளை கிட்டத் தட்ட அப்படியே ஒத்திருக்கின்றன. தலிபான் இயக்கத்தினர் அங்கே பாமியான் நகரில் புத்தர் சிலைகளை தரைமட்டமாக்கினார்கள் என் றால், இங்கே இந்துத்வா மதவெறியர்கள் பாபர்மசூதியை இடித்துத் தரைமட்டமாக் கினார்கள்.

பாஜக, கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் பல்வேறு அமைப்புகளும் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக் கின்றன. பொதுவாக, புதிது புதிதாகப் பல்வேறு தாவாக்களை கிளப்பிவிட்டு மக்கள் மத்தியில் மதவெறி உணர்வுகளை விசிறி விடுவதோடு மட்டுமல்லாமல், பஜ்ரங்தளம், விசுவ இந்து பரிசத், ஸ்ரீராம் சேனை, இந்து ஜன சக்ரிதி சமிதி மற்றும் பல்வேறு அமைப்புகள் மதச்சிறு பான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தங்கள் தாக் குதல்களைக் கூர்மைப்படுத்தி இருக்கின்றனர்.

பாஜக ஆட்சிப்பொறுப்பேற்றபின் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கூர்மையாக அதிகரித்திருக்கின்றன. 2008 செப்டம்பரில் மட்டும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லுமிருந்த தேவாலயங்கள் தாக்குதல் களுக்குள்ளாக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட் டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களை அடுத்து மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக் கிறது. ஆயினும் மாநில அரசு, ``கிறிஸ் தவர்களால் இந்துக்கள் ‘மதமாற்றத்தில்’ ஈடுபடுத்தப்படுவதால்தான் இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக’’க் கூறி அவற்றை நியாயப்படுத்துவது தொடர்கிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, ஆட் சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், தங்கள் ‘இந்து வாக்கு வங்கி’யை ஒருமுகப்படுத்திட, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமதவெறி அமைப்புகள், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் மற்றும் அதன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயரிய பண்புகளையும் தகர்க்கும் நடவடிக்கைகளில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றன என்பது தெளிவாகி இருக்கின்றன.

இவர்கள் தங்கள் நடவடிக்கைகளின் விளைவாக, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒரு மைப்பாட்டிற்கும், சமூக நல்லிணக்க உறுதிப் பாட்டிற்கும் மாபெரும் சவாலாக மாறிக் கொண் டிருக்கிறார்கள். நாட்டின் நலன்களையும், நாட்டு மக்களின் நலன்களையும் பாதுகாத்திட, மத்தியிலும் மாநிலங்களிலும் இத்தகைய இந்துத்வா தலிபானிச சக்திகள் வளர்வதை வேரறுக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப் பற்றுள்ள அனைவரும் ஒன்றுபட்டு நின்று இத்தகு சவாலை எதிர்த்து முறியடித்தி டுவோம்.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: