வியாழன், 19 பிப்ரவரி, 2009

தமிழர் பிரச்சனை: அனுபவங்களும் தீர்வும்

பி. சம்பத்

பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் நிலைமை மிகுந்த துயரம் அளிப் பதாக உள்ளது. தொடரும் இலங்கை இராணு வத்தின் பெருந்தாக்குதல் கவலையளிக் கிறது. மறுபுறம் எல்.டி.டி.இ. பல்லாயிரக்கணக் கான மக்களை தன் பிடிக்குள் வைத்திருப் பதாகவும், இலங்கை இராணுவம் - எல்.டி. டி.இ. ஆயுத மோதல் பகுதியில் சிக்கித் தவிக் கும் மக்களின் எண்ணிக்கை பற்றியும், குழப் பமான செய்திகள் வருகின்றன. எண்ணிக் கை எதுவானாலும் கணிசமான மக்கள் பாதுகாப்பான இருப்பிடம், போதுமான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான பால், அத் தியாவசிய மருந்துகள் போன்றவை கிடைக் காமல் அவதிப்படும் நிலை நீடிக்கிறது என் பதே உண்மை.

அவதியுறும் இம்மக்களுக்கு உடனடி யாகச் செய்ய வேண்டிய பணிகளையும், நிவார ணங்களையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டியது அவசரப்பணியாக உள்ளது. இலங்கை இராணுவமும், எல்.டி.டி.இ.யும் போர் முனையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை பாதுகாப்பான குடியிருப்புப் பகுதி களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். அப்பாவி மக்களைத் தாக்குவதோ அவர் களைக் கேடயமாக பயன்படுத்துவதோ மனித உரிமை மீறலேயாகும்.

இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். நீண்ட நெடுங்காலம், இலங் கை அரசின் பிடிவாதத்தாலும், எல்.டி.டி.இ.யின் தவறான அணுகுமுறையாலும் வீணடிக்கப் பட்டுவிட்டது. எனவே, உடனடியாக நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகளைத் தொடங்க வேண் டும். இதில் இலங்கை அரசின் பொறுப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ் மக்க ளுக்கு சமஉரிமை, கல்வி, தொழில், வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்புகள். தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு நிகரான சம அந்தஸ்து, வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி யுடன் கூடிய அதிகாரப்பகிர்வு போன்றவை நிரந்தரத் தீர்விற்கான அடிப்படை அம்சங் களாகும்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் பல லட்சக்கணக்கான தமிழர் கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாது காப்பான நிலையில் இருப்பதை உத்தரவாதப் படுத்தக்கூடிய அரசியல் தீர்வு அவசியம். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கான அமைப்புகள் பிரிந்து நிற் கின்றன. இத்தகைய சூழலில், இலங்கை அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும், எல்.டி.டி.இ.யின் தவறான நிலைபாடுகளுக் கும் எதிராக யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டன ஊர்வலம்- ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் தார்மீகப் பொறுப்பு

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையில் இந்திய அரசு இன்னும் வலுவாகத் தலையிட வேண்டும். இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த ராஜீய ரீதியில் முயல வேண்டும். இதற்கு இந்திய அரசு ஐ.நா. சபை யின் உதவியை நாட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஆலோசனை கூறி யுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் சில கட்சிகளும், அமைப்புகளும் எடுத்துள்ள நிலைபாடுகளும், நடத்தும் போராட்டங்களும், இனவெறிப்பேச்சுக்களும் எவ்விதத்திலும் இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க உதவாது. தீக்குளிப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளன. இத்தகைய தீக்குளிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் உணர்ச்சியைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் தீங்கானவையாகும்.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ம.க., மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை தனி ஈழம்- எல்.டி.டி.இ. ஆதரவு நிலை எடுத்துப் பேசி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் மோதல்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சொல்லொண்ணாத் துன்பத்தையும் எல்.டி.டி.இ.க்கு பின்னடைவையுமே தந்துள்ளன என்பது அனுபவம். இதனை மறந்து பேசுவது இலங்கைத் தமிழர் களுக்கு மட்டுமல்ல; இந்திய நாட்டுக்கும் நல்லதல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளிட்ட அரசியல் தீர்வு, இலங்கை துண்டாடப்படுவது ஏகாதிபத்திய சக்திகளுக்கே உதவும் என்ற சரியான கருத்தை தமிழ்நாட்டிற்கு வந்தபோது அழுத்தமாக பதிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இப்பின்னணியில் தமிழ்நாட்டில் அந்தக் கட்சி பழ.நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் எல்டிடிஇ ஆதரவு அமைப்புகளோடு கை கோர்த்துள்ளது புதிராகவே உள்ளது.

மறுபக்கம், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரில் திமுக தலை மையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. அஇஅதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் சுயேட்சையான நிலைபாட்டை எடுத்து விளக்கங்களையும், விமர்சனங்களை யும் முன்வைத்து வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்தில் எல்.டி.டி.இ.யின் அணுகுமுறையை நிராகரித்து, அதிகாரப் பகிர்வு-சுயாட்சி என்ற அடிப்படையில் அரசியல் தீர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது ஒரு முன்னேற்ற மான நிகழ்வாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்தே இப்பிரச்சனையில் சரியானதும், பொருத்தமானது மான நிலைபாட்டை எடுத்துவந்துள்ளது. இலங்கை அரசு தொடர்ந்து ராணுவத் தீர்வுக் கான முயற்சிகளைத் தொடருவதை ஏற்க முடியாது; அதே நேரத்தில் எல்.டி.டி.இ.யி லிருந்து அப்பாவித் தமிழ் மக்களை வேறு படுத்திப் பார்க்க வேண்டும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 12 இல் தமிழ் நாட் டில் மாவட்டத் தலைநகரங்களில் சக்தியான கண்டன இயக்கங்களை நடத்தியுள்ளது. இந்தியப் பிரதமரை தோழர்கள் சீத்தாராம் யெச் சூரி எம்.பி., டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேரில் சந்தித்து இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகா ணங்களில் மட்டுமின்றி அந்நாட்டின் பரவ லான பகுதிகளில் சிங்கள மக்கள் திரள் வலு வாக உள்ள பகுதிகளிலும் தமிழர்கள் லட்சக் கணக்கில் வசிக்கிறார்கள். எனவே, இலங் கைத் தமிழர்களுக்கு என ஒரு தனி நாடோ, அல்லது வடக்கு, கிழக்கு மட்டும் பிரித்து தனி ஈழம் கேட்பதோ அல்லது உருவாக்குவதோ தீர்வு ஆகாது என்பதை உணரவேண்டும். 30 ஆண்டுகால அனுபவங்கள் இதனை அழுத்த மாக பதிவு செய்துள்ளது.

எனவே, சமாதானம், சம உரிமை, சக வாழ்வு, முழுமையான ஜனநாயக உரிமைகள் என்ற கோரிக்கைகளையும் முழக்கங்களை யும் முன்வைப்பதும் அதற்கான முறையில் தலையிட இந்திய அரசை வலியுறுத்துவதும் தான் அல்லல்படும் இலங்கைத் தமிழர் களின் துயர் துடைக்க உதவும்.

இதற்கான முறையில் இந்திய - தமிழக அரசியல் இயக்கங்களும், ஜனநாயக அமைப் புகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன் வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: