வியாழன், 19 பிப்ரவரி, 2009

அமெரிக்காவின் நண்பர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங் களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

இடதுசாரிக்கட்சிகள் ஆதரவை விலக்கிக்கொண்டபின் இந்த ஆட்சி எப்படி நீடிக்கிறது? நம் நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பெரும்பான்மையைப் பெற்று, அதன் மூலமாக இந்த ஆட்சி நீடிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மை குடியரசுத் தலைவர் உரையில் காணப்படவில்லை.

நாங்கள் ஏன் இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டோம். இந்த அரசு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திலிருந்து விலகிச் சென்றதால் எங்கள் ஆதரவை விலக்கிக் கொண் டோம். குறைந்தபட்ச பொது செயல் திட் டத்தில் இல்லாத ஒன்றை, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவுடன் ராணு வக் கூட்டணிக்கு சென்றபோது, நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டோம். அந்த சமயத்தில் அரசுக்கு நாங்கள் ஓர் எச்சரிக் கையும் விடுத்தோம். நம் நாட்டின் சுயேட் சையான அயல்துறைக் கொள்கைக்கு ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி னோம். ஆனால் அதற்கும் ஆபத்து வந்த போது, நாங்கள் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதும் எச்சரித்தோம், இப்போ தும் எச்சரிக்கிறோம். எவரெல்லாம் அமெ ரிக்க ஜனாதிபதியின் நண்பர்களாக இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் சொந்த நாட்டில் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்று எச்சரித் தோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்று பல நாடுகளின் கதை இதுதான்.

குடியரசுத் தலைவர் உரையில் பெரும் பகுதி, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து குறிப்பிடுகிறது. நம் நாட்டின் பொருளாதாரத்தின் உண்மை நிலைமை என்ன? மாநிலங்களவை உறுப்பினர் அர் ஜூன் சென் குப்தா, பிரதமருக்கு அளித் திட்ட அறிக்கையில், நாட்டில் 78 சதவீ தத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் வாடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை ஒரு மாதத்திற்குக் கணக்கிட்டால் 600 ரூபாய் என்று வருகிறது. இதனை இன்றையதினம் திட்டக்கமிஷனும் ஒப்புக்கொள்வது போல், கிராமப்புறங்களில் மாத வருமா னம் 400 ரூபாய் என்றும், நகர்ப்புறங்களில் 600 ரூபாய் என்றும் கூறியிருக்கிறது. ஆனாலும் உலகுக்கு நாம் என்ன அறி வித்துக் கொண்டிருக்கிறோம்? உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட் டுள்ள சூழ்நிலையில் இந்நிலைமை இன் னும் மோசமாகும்.

மக்களின் சுகாதார நிலைமை எப்படி இருக்கிறது? ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் தண்ணீரால் பரவும் நோய் களால் மடிந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டின் குழந்தைகளில் 56 சதவீதத்தின ருக்கு தடுப்பூசிகள் போடப்படுவதில் லை. 40 சதவீதக் குழந்தைகள் எடை குறைவாக இருக்கின்றன. 70 சதவீதக் குழந்தைகள் ரத்தசோகையுடன் காணப் படுகின்றன. இவை அனைத்தையும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையி லிருந்துதான் மேற்கோள் காட்டுகிறேன். நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு, ரத்த சோகை யால் பீடிக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை உற்பத்தி செய்கி றார்கள். இதைப்பற்றியெல்லாம் குடியர சுத் தலைவர் உரை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மாறாக, பொருளாதாரத்துறையில் சாதனைகள் படைத்திருப்பதாக டமாரம் அடிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் சுமார் 70 கோடி பேருக்கு கழிப்பிட வசதி கிடையாது. மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு குடிநீர் வசதி கிடையாது. இதுதான் எதார்த்த இந்தியா வாகும். இந்தியாவின் இந்தப் பகுதி குறித்துத்தான் உண்மையில் நாம் கவலைப்பட் டிருக்கவேண்டும். ஆனால் இவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், இவ்வாறு ‘உழல்கின்ற இந்தியர்களைப்பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவில் ஒளிர்கின்ற இந்தியனைப் பற்றி குடியரசுத் தலைவர் உரை பீற்றிக்கொள்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதுக்கும் கீழான இளைஞர்கள். இவர்களின் உழைப்பின் மூலமாகத்தான் புதியதோர் இந்தியா வைப் படைத்திட வேண்டும். ஆனால் இவர்களை வலுவுள்ளவர்களாக, அல்லா மல், வலுவற்றவர்களாக, நலிவடைந்தவர் களாக மாற்றினோமானால் நாட்டின் எதிர் காலம் என்னவாகும்? இந்த முக்கியமான அம்சம் குடியரசுத் தலைவர் உரையில் பிரதிபலிக்கவில்லை.

ஆனால் மாறாக என்ன நடக்கிறது? ஒளிர்கின்ற இந்தியாவின் ஊழல்கள் தான் மின்னிக் கொண்டிருக்கின்றன. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல். எண்ணற்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஊழல்கள். ஸ்பெக்ட்ரம் டெலிகாம் ஊழல் என எண்ணற்ற ஊழல்கள்தான் மின்னிக் கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவர் உரை என்ன கூறுகிறது? நாம் உலகப் பொருளாதார நெருக்கடியை சமாளித்துவிட்டோம் என்று 55ஆவது பத்தியில் குறிப்பிட் டிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரை மட்டுமல்ல, இடைக்கால பட்ஜெட் மூலமாக நிதியமைச்சரும் நாட்டிற்குத் தவறான தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறார். அரசு அதிகாரிகளின் மதிப்பீட்டின்படியே, ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலையிழந்துள்ளார்கள். முறை சாராத் தொழிலாளர் எண்ணிக்கையில் இது பல கோடியாகும். சிறிய மற்றும் நடுத் தரத் தொழில்களைச் சார்ந்திருந்த கோடிக்கணக்கான அணிசேராத் தொழி லாளர்கள் வேலையின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் வைரத் தொழிலில் ஈடுபட்டி ருந்த 71 பேர், வேலையில்லாததால் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ் நாட்டில் நாமக்கல்லில் கைத்தறி நெச வாளர்கள் தங்கள் சிறுநீரகங்களை வாழ் வாதாரத்திற்காக விற்றுக்கொண்டிருக் கின்றனர். உலகப் பொருளாதார நெருக் கடியின் பாதிப்பு இவ்வாறு இருந்து கொண்டிருக்கிறது. இதனை அங்கீகரிக்க அரசு மறுக்கிறது.

இதனை எப்படி எதிர்கொள்வது? பொது முதலீட்டை அதிகப்படுத்தி, வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம்தான் இதனை சரி செய்ய முடியும். ஆனால் இது குறித்து குடியரசுத் தலைவர் உரையோ, இடைக்கால பட்ஜெட்டோ எதுவும் கூறவில்லை.

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்றால், தொழிலாளர்கள் வேலையிழப்பதைத் தடுக்க வேண்டும் என்றால், ஒரு மாற்று பொருளாதாரக் கொள்கை அவசியம். அது குடியரசுத் தலைவர் உரையில் இல்லை. ஆனால் அப்படி ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு இந்த ஆண்டு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் ஒருசில மாதங்களில் பதினைந்தாவது மக்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாற்று பொருளாதாரக் கொள்கையை நிறைவேற்றக்கூடியவர்கள் ஆட்சியில் அமர்வார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கருத்துகள் இல்லை: