பிரகாஷ் காரத்
காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒரே சமயத்தில் தங்கள் கட்சிகளின் தேசிய அமர்வுகளை நடத்தியிருக்கின்றன. பாஜக, தன்னுடைய தேசிய கவுன்சில் கூட்டத் தை ஆர்எஸ்எஸ் தலைமையிடம் உள்ள நாக்பூரில் நடத்தியுள்ள அதே சமயத்தில், காங்கிரஸ், தங்களுடைய வட்டார அளவி லான தலைவர்களின் சிறப்பு மாநாட்டை, டில்லியில் நடத்தியுள்ளது. அக்கூட்டங் களில் பங்கேற்ற அக்கட்சிகளின் தலை வர்கள், வரவிருக்கும் தேர்தல் பிரச்சார மேடைகளாக அவற்றைப் பயன்படுத்திக் கொண்டதைப் பார்த்தோம்.
ஆர்எஸ்எஸ் தலைமையிடம் உள்ள நாக்பூரில் தங்கள் கூட்டத்தை நடத்திய பாஜக-வினர், ‘‘அயோத்தியில் ராமர் கோயில்’’ என்னும் தங்கள் கோஷத்தை மீண்டும் எழுப்பி, ஆர்எஸ்எஸ் அமைப் பிற்குத் தாங்கள் விசுவாசமாக இருப்ப தைக் காட்டிக் கொண்டனர். இவ்வாறு இவர்கள் அறிவித்ததையடுத்து, தங்கள் பழைய மதவெறி நிகழ்ச்சி நிரலிலிருந்து தாங்கள் கொஞ்சமும் மாறவில்லை என் பதை வெளிப் படையாக வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர். பாஜகவின் பிரத மர் வேட்பாளராகச் சித்தரிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, மீண்டும் ஒருமுறை “மெய்யான மதச்சார்பின்மை”க்கும், “பொய் யான மதச்சார்பின்மைக்கும்” இடையி லான போராட்டத்தை விவரித்திருக்கி றார். கூட்டத்தில் பேசிய இந்துத்துவா சக்தி கள், பயங்கரவாதம் என்ற பெயரில் முஸ் லிம் மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. நரேந்திர மோடி, மும்பை தாக்குதலுக்குத் துணைபோன உள்ளூர் நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியிருக்கி றார். ஐமுகூ அரசாங்கமானது “சிறுபான் மையினரை முகஸ்துதி செய்கிறது” என் கிற தங்களுடைய வழக்கமான குற்றச் சாட்டுகளை, கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் மீண்டும் அரங்கேற்றினார்கள்.
பயங்கரவாதத்தை இவ்வாறு மதவெறிக் கண்ணோட்டத்தோடு அணுகியபோ திலும் அதனால் பெரிய அளவிற்கு ஆதா யம் அடையமுடியவில்லை என்பதை உணர்ந்தகொண்ட பின்னர் பாஜக, மக் களின் பொருளாதார நலிவிலும் கவனம் செலுத்த முயற்சித்தது. ஆனாலும், இப் போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து அதனால் ஒன்றுமே சொல்ல முடியவில் லை. ஏனெனில் நவீன தாராளமயக் கொள்கைகள் குறித்து ஐமுகூ அரசாங் கத்தின் கொள்கைகளுக்கும், பாஜகவின் கொள்கைகளுக்கும் அப்படி ஒன்றும் உண்மையான வித்தியாசம் எதுவும் இருப்பதாகச் சொல்வதற்கில்லை.
வலதுசாரி பொருளாதாரக் கண்ணோட்டத்தை முழுமையாகப் பெற்றிருப்பதன் விளைவாக, பாஜக தலைவர், தங்களுடைய பொருளாதார சிந்தனைகளுக்கு காந்தியத் தத்துவத்தின் வண்ணங் களைக் கலந்து தந்திருக்கிறார். காந்திஜி யின் கொள்கைகளுக்குப் பரம எதிரிக ளான ஹெக்டேவார் மற்றும் கோல்வால் கரின் சீடர்களான இவர்கள், காந்திய சிந் தனைகளை இப்போது வரிந்துகொண்டி ருப்பது உள்ளபடியே கோமாளித்தனமாக உள்ளன. உண்மையில் எல்.கே. அத் வானி, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர்தான், தான் கோல்வால் கரிடமிருந்து மதச்சார்பின்மை குறித்துக் கற்றுக்கொண்டதாக, ஒப்புக் கொண்டி ருக்கிறார்.
நாக்பூரில் தன்னுடைய அமர்வை நடத்திக் கொண்டிருக்கும் பாஜக-விற்கு, பரந்துபட்ட மக்கள் மற்றும் அரசியல் சக் திகளை வென்று, ஒரு தேசியக் கட்சி யாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடி யாத வகையில் அது கடைப்பிடிக்கும் இந்துத்துவா கொள்கை, அதனை முன்னேற முடியாமல் சகதியில் சிக்க வைத்திருக் கிறதென்றால், டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூத்தும் அக்கட்சி சகதியில் மாட்டிக்கொண்டு வெளிவர முடிய மல் அவதிப்படுவதை வெளிப்படுத்தியது.
வரவிருக்கும் தேர்தல் களத்தில் தங்கள் படையினரை அணிதிரட்டுவதற்காக காங்கிரஸ் இந்தச் சிறப்பு மாநாட்டை நடத்தியது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் இன்றைய நிலையில், அனைத்து விதமான பிரச்சனைகளும் நாட்டைச் சூழ்ந்துள்ளன. உலகப் பொரு ளாதார நெருக்கடியின் விளைவாக நம் நாட்டின் பொருளாதாரத்திலும் பல்வேறு சிக்கல்கள் - சிரமங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இந்து மதவெறி சக்திகளும் தங்களுடைய மதவெறி நடவடிக்கைகளை சிறுபான்மையினருக்கு எதிராகக் குறைத் துக் கொள்ளவில்லை. மதவெறியர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளி லும் மீண்டும் முளைத்திருக்கிறது. மன் மோகன் சிங் அரசாங்கமானது, இந்தியா வை அமெரிக்காவின் ராணுவ மற்றும் அதன் பொருளாதாரக் கூட்டாளியாகத் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண் மைக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் திற்கும் கேடு பயக்கும் பாதிப்புகள் ஏற்பட் டிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி மாநாட்டில், தாங்கள் சாமானிய மக்களின் துன்ப துயரங்களைத் துடைத்து விட்டோம் என்று பீற்றிக் கொண்டனர். வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சாமானிய மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. எனவே இவர்களது சாக சப் பேச்சுக்கள் எல்லாம் வெற்றுரையே என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. உலகப் பொருளாதார நெருக்கடி உருவாவ தற்கு முன்பேயே, நம் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயக் கொள் கைகளின் விளைவாக, நாட்டில் பெரும் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகி யிருக்கிறது.
மன்மோகன் சிங் அரசாங்கமானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டுப் பாடற்ற பாணியைப் பின்பற்றியது. இது, என்ரான் முதல் சத்யம் வரையிலான ஊழல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டிய லில் இந்தியப் பணக்காரர்களும் இடம் பெற்றுள்ளதுபோலவே, உலகில் உள்ள பரம ஏழைகளின் பட்டியலிலும் இந்தியாவில் உள்ள பரம ஏழைகள் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில், உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஸ்தாபனத்துறையில், பாரம்பரியத் தொழில்களில் மற்றும் சேவைத் துறை யில், இலட்சக்கணக்கான வேலைகள் காணாமல் போய்விட்டன. தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத் திய ஆய்வறிக்கை ஒன்றில், 2008இன் கடைசி மூன்று மாதங்களில் ஐந்து லட் சம் வேலைகள் பறிபோய்விட்டதாகக் கண்டிருக்கிறது. இதுவே குறைந்த மதிப் பீடுதான். 2009 மார்ச் வாக்கில் ஒரு லட் சம் வேலைகள் பறிபோய்விடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பொருளாதார நெருக்கடியின் கூர் முனை அதிக அளவில் விவசாயிகளையே தாக்கியிருக்கிறது. பணப்பயிர்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலும் வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், அவர்கள் மத்தியில் மீண்டும் தற் கொலைகள் அதிகரித்திருக்கின்றன. மோடி தலைமையில் உள்ள குஜராத் மாநிலத்தில் கல் மற்றும் வைர நகை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லா காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு பாஜக மற்றும் காங்கிரசின், நாக்பூர் மற்றும் டில்லி அமர்வுகள், நாட் டை ஆள்வதற்குத் தங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கோரும் அதே சமயத் தில், அதற்கு மக்கள் திருப்திப்படக்கூடிய வகையில் தங்கள் சாதனைகள் குறித்து எதுவுமே சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் கொள்கைகள் காலாவதியாகிப் போயுள்ளதைப் பார்க்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில்தான், காங்கிரஸ் அல்லாத அனைத்து மதச்சார்பற்ற கட்சி களையும் ஓரணியில் திரண்டு ஒரு பரந்த மேடையை அமைத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைத் திருக்கிறது. இத்தகைய பரந்த மேடையா னது மக்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல் மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இத்தகைய தோர் மாற்றை உருவாக்கும் பணியை இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் தொடங்கிவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக