சனி, 21 பிப்ரவரி, 2009

காவல்துறை அத்துமீறல் கறைபடிந்த அத்தியாயம் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் அத்துமீறல், கறை படிந்த அத்தியாயம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. 

கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வியாழனன்று (19.02.2009) நடந்தேறியுள்ள காவல்துறையின் எல்லை மீறிய தாக்குதல் நடவடிக் கைகளும் வன்முறை அரா ஜகமும், இதுவரை கண்டி ராதது மட்டுமல்ல; தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட் சியையும், நீதித்துறையின் செயல்பாட்டையுமே கேள்விக்குறியாக்கி விட்ட ஒரு கறைபடிந்த அத்தியா யமாகும்.

காவல்துறைக்குப் பொறுப்பான தமிழ்நாட்டின் முதலமைச்சர் தொடர்ந்து மருத்துவமனை யில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கடந்த சில தினங்களில் துரித கதியில் விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நடந் தேறியுள்ளன. இவற்றில் அரசு இயந்திரத்தை உறுதி யோடும், அவசர உணர் வோடும் அதே நேரத்தில் பொறுப்புணர்வுடனும் இயக்க வேண்டிய தலை மைப் பாத்திரத்தை முதல மைச்சர் தரப்பில் அமைச் சரவையின் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நிதி யமைச்சர் உள்ளிட்ட மற்ற மூத்த அமைச்சர்கள் செயல் படத் தவறியுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு காரண மாக முடங்கிக் கிடந்துள் ளன. அநீதி இழைக்கப் பட்டு பாதிப்புக்குள்ளாகும் குடிமக்களுக்கு ஒரே புகலி டமாக உள்ள நீதிமன்றம் முற்றிலுமாகச் செயலிழக்க வைக்கப்பட்ட இந்த நிலை மையை முடிவுக்குக் கொண்டு வர மாநில சட்ட அமைச்சரோ, நீதிமன்ற நிர்வாகமோ எந்த நடவடிக் கையும் எடுக்காமல் சும்மா இருந்துள்ளது என்பது கவ லைக்குரிய ஒன்று.

இந்த நிலையில், நீதிபதிகள் இருவர் முன்பாகவே ஒரு வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யமுற் பட்ட சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டது கண்ட னத்துக்குரிய சம்பவமாகும். இது தொடர்பான சட்டப்படியான நடவடிக் கைக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஒத்து ழைக்க மறுத்ததும் காவல் நிலையத்திற்குத் தீ வைக்கும் எல்லைக்குச் சென்றிருப் பதும் வழக்கறிஞர் சமுதா யத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும் செய்கை களாகும்.

ஆனால், நீதிமன்ற வளா கத்திற்குள் காவல்துறை யினர் நடத்தியுள்ள கொடூ ரத் தாக்குதல், எல்லா வரம் புகளையும் தாண்டிச் சென் றுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சில மாதங்களுக்கு முன்னர் நீதி மன்ற வளாகத்தை ஒட்டிய சட்டக் கல்லூரியில் மாண வர்களுக்கு இடையிலான மோதலைக் கைகட்டி வேடிக்கை பார்த்த இதே காவல்துறை, வியாழனன்று கடிவாளமற்ற குதிரையாக வெறியாட்டம் போட்டி ருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாகும்.

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் சிலர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரும் காவல் துறையினரின் தாக்குத லுக்கு இலக்காகியுள்ளனர். நீதிமன்ற நூலகம், வழக்கறிஞர் கூடம் மற்றும் அறைகள், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள வழக்கறிஞர் அலுவலகங்கள் ஆகியவற்றில் நுழைந்து காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். பத் திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு, அவர்களின் கேமராக்கள் நாசப்படுத்தப் பட்டுள்ளது. இது, பத்திரிகை சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதலாகும்.

தமிழக அரசு, உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் பல்வேறு வழக்கறிஞர் அமைப்பு களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி சுமூகமாக நடத்துவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது என்று அறிக்கையில கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: