வே. மீனாட்சிசுந்தரம்
இலங்கை அரசின் ராணுவமும் எல்டிடிஇ-யின் மனித குண்டுகளும் தமிழ் மக்களைப் போட்டி போட்டுக் கொல் வதை உலகமே கண்டிக்கிறது. எல்டிடி இ-யை ஆதரித்த கனடா, ஜப்பான், பிரிட் டன், நார்வே நாடுகளின் அரசுகளும், இன்று ஐ.நா .சபையின் தீர்மானத்தினால் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகாரப் பூர்வமாக கண்டிக்கும் நிலை எழுந்துவிட்டது. இப்பொழுது மவு னத்தைக் கலைத்து அவர்களே பேச்சு வார்த்தைக்குப் போக புலிகளையும் இலங்கை அரசையும் அறிவுறுத்துகின்ற னர். வெளிநாட்டில் வசிக்கும் இலங் கைத் தமிழர்களில் பெரும் பகுதியினர், புலிகளின் பாதை தவறானது என்று குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இவர்கள் ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க, பணத்தை வாரி இறைத்தவர்கள். இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமை யை நிலை நிறுத்த அங்கிருந்து உதவத் தயாராய் இருப்பவர்கள். தலைவாரி, சீரு டை அணிவித்துப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகளை குண்டுகளாக் கும் தொழிலை முக்கியத் தொழிலாக்க எல்டிடிஇ-க்கு உதவியாக முதலீடு செய் தது தவறு என்று உணரத் தொடங்கி விட்டனர்.
ஒருபக்கம் ராஜபக்சே “பிரபாகரன் குற்றவாளி, எனவே அவர் பிடிபடுகிற வரைக்கும் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை”, என்பதை ஏற்பதற்கில்லை. உள் நாட்டு யுத்தத்தைக்காட்டி இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தும் இலங்கைப் பத்திரிகைகளை, ஆளும் கும்பல் தாக்குவதை பார்க்கிறோம். இன அடையாளத்தை முன் நிறுத்தி ஒருவரை ஒருவர் அடித்துச் சாவதை விட சேர்ந்து வாழ, ஒருவரை ஒருவர் மதித்து வாழ, புத்தி தேவைப்படுகிறது. அந்தப் புத்திக் கொள்முதலுக்கு, ‘பொருளாதாரத்தை சீரழித்தது போதாதா?’ லட்சக்கணக்கில் உயிர்களையும் இளம் பிஞ்சுகளையும் விலை கொடுத்தது போதாதா? என்ற கேள்விக்கு விடை தேடும் கட்டத்தை இன்று இரு மொழி மக்களும் எட்டிவிட் டனர். அதன் அடையாளங்களே யாழ்ப் பாண மக்களின் எல்டிடிஇ எதிர்ப்பு ஆர்ப் பாட்டம்.
மறுபக்கம், தன் நாட்டு பிரதமரையும், இந்தியாவின் முன்னாள் பிரதமரையும் கொல்ல இளம் தமிழ்க் குழந்தைகளை குண்டுகளாக்கி உயிர்களைப் பறித்தக் கொடுமை, கடைசியாக ஏரியை உடைத்து தமிழ் மக்களை வெள்ளத்தில் தள்ளி விட்டு, வெள்ளப் பெருக்கால் விவசாயம் கெட்டு மீதமுள்ள “ஈழத்” தமிழனையும் பட்டினிப்போடும் புலிகளின் ராணுவயுக்தி ஆகிய வைகளை மனிதநேயப் பண்புள்ளவர்கள் கண்டிப்பர். தமிழ் உணர்வுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். இரண்டு ராணுவ சிப்பாய்களைக் கொல்ல 20 தமிழ் மக்களைக் கொன்றதையும், வாழவேண்டிய பிஞ்சுக் குழந்தையை வெடிக்கும் குண்டாக்கி எரித்ததையும் நினைக்கிற போதே நமக்கு நெஞ்சம் பதறுகிறது.
இன உணர்வும் அரசியலும்
இன உணர்வின் அடிப்படை என்ன? உயிரியல் அடிப்படையில் சொல்வதென் றால் தற்காப்பு என்ற இயல்புணர்வின் வெளிப்பாடே இன உணர்வாகும். மானுட மூளையின் ஒரு பகுதியின் அம்சமாகும். தன்னையும் தனது சந்ததியையும் மொழி யாலும் பண்பாட்டாலும் பாதுகாக்க இந்தத் தற்காப்பு உணர்வே அடிப்படையா கும். ஆதிகாலத்தில் பொருள் பற்றாக்குறை நிலவியது. அன்று மனித இனக் குழுக்கள் சண்டையிடாமல், ஒருவரை ஒருவர் அழிக்க முயலாமல் வாழ முடியாத நிலை இருந்தது. சங்க இலக்கியத்தை அலசி னால் போர் போற்றப்பட்டதற்கு அடிப் படை “மக்கள் உணவுப் பாதுகாப்பு” என் பது புரியும். ஒரு கட்டம் வரை இனக் குழுக்களுக்கிடையே இருந்த பகைமை, மக்கள் திரள் உலகெங்கிலும் பரவ வழி வகுத்தது . பொருள் உற்பத்தியில் உபரி ஏற் படவே இனக் குழுக்கள் இடையே வர்த் தக உறவு வளர்ந்தது. வர்த்தக உறவுகள் மொழிகளின் பரிமாற்றத்திற்கு வழிவகுத் தன; சண்டைகள் குறைந்தன. சக வாழ்வு பாதுகாப்பிற்கு அவசியம் என்ற புத்தி வந் தது. இந்த மாற்றத்திற்கேற்ப மாற மறுத்த இனங்கள் விலாசமிழந்தன. மொழியியல் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதென்ன? சக வாழ்வின் அருமையைப் போற்றி, பிற மொழிகளின் சொற்களின் வேர்களை தமிழ்ச் சொல்லாக்கும் ஆற்றல் நமது முன்னோர்களுக்கு இருந்ததால் தமிழ் வளர்ந்தது. ஆரியமொழி பேசிய இனம், இந்த ஆற்றலை இனத் தூய்மைக்கு ஆபத்து என்று கருதியதால் அம்மொழி வழக்கொழிந்தது. இனக் கலப்பில்லாமல் வாழ முயன்ற ஆரிய மொழி பேசிய மக்கள் அருகிப் போயினர். கருப்பின மக்களை கேவலப்படுத்திய வெள்ளை இன மக்க ளில் பெரும்பான்மையினரின் இனத்தூய் மை பற்றிய பார்வையையும் தாண்டி பாரக் உசேன் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி ஆனார். மானுட வரலாற்றில் ஒரு பக்கம் இனங்களின் சக வாழ்விற்கான முயற்சி யும், மறுபக்கம் ஒரு இனம் மற்றொரு இனத்தை அடிமைப்படுத்த அல்லது அழிப்பதற்கான முயற்சியும் பல ஆயிரம் ஆண்டுகள் நடந்தது. 20ம் நூற்றாண்டில் இரண்டு உலக யுத்தம் நிகழ்ந்தது மட்டு மல்ல, சமத்துவ சமுதாயம் காண, எல்லா இனங்களும் சேர்ந்து வாழ, அமைதிப் பூக் காடாக நாடுகளை ஆக்கும் முயற்சிக ளும் நடந்தன. இனங்களின் சிறைச் சாலையாக இருந்த ரஷ்யா, சோவியத் குடி யரசாகி இனங்களின் பண்பாடுகளை போற்றும் அமைதிப் பூக்காடாகியது. மறுபக்கம் இன, மத அடிப்படையிலான மோதல்கள், ஏழை நாடுகளை பயங்கரங் கள் நிறைந்த சுடுகாடாக்கின. இந்தியா-பாகிஸ்தான், பாலஸ்தீனம்-இஸ்ரேல், ஜார்ஜியா-ஒசாட்டியா, ஏழு துண்டாகி அமைதிக்கு நேட்டோ படைகளை நம்பி நிற்கும் யூகோஸ்லோவியா போன்ற நாடு களின் பயங்கரவாத பேயாட்டங்கள், ஜனநாயக ஆட்சிமுறைக்கு வழிமறிச் சான்றுகளாக மாறியுள்ளதைப் பார்க்க மறுக்கலாமா?
ஆனால் தமிழகத்தில், இலங்கைவாழ் மக்கள் படும் துயரங்கள் தீர வழி தேடா மல், உள்ளூர் அரசியலை முன்னிறுத்திக் குழப்புவது வேதனை அளிக்கிறது. இங்கே தீக்குளிப்புகளைத் தூண்டுகிற அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தற்கொலை செய்ய தூண்டுவோரை சட்டம் சும்மாவிடாது என்று சொல்ல மறுக்கும் அரசு. இவற் றைக் கண்டிக்காத அறிவுலகம் ஆகிய வற்றைக் காணுகிறபோது நெஞ்சு பதறு கிறது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் “ஈழம் பிரி யாமல் இலங்கையில் கால்வைக்க மாட் டேன்” என்கிறார். நானே நாளைய முதல் வர் என்றும் இன்னொரு தலைவர் “தமிழ் நாட்டு மக்களே நாடாளுமன்றத் தேர் தலைப் புறக்கணியுங்கள்” என்கிறார்.
அன்று பாரதி பாடினார். “எனப் பல பேசி இறைஞ்சிடப் படுவதாய் நாட்பட, நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து, பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழி கெனும் நோக்கமோ விதியே! விதியே! தமிழ்ச் சாதியை என செய நினைத்தாய்” என்று கேட்டார். பாரதியைப் போல் இன்று நமக்கும், “ஊடகங்களே! தமிழ்ப் பத்திரி கைகளே! ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களே! இனஉணர்வைச் சேறாக்கித் தமிழகத்தை நோய்க்களமாக்கும் நோக் கம் கொண்டீரோ? அவலை நினைத்து உரலை இடிப்பது சரிதானா? தீக்குளிப்பு களைத் தூண்டும் உணர்ச்சிப் பிரவாகம் எதற்கு? இலங்கை மக்களின் துயரம் போக்கவா அல்லது இங்கே அரசியலைக் கடையவா?”, என்று வினவத்தோன்றுகி றது. ஊடகங்களின் ஒரு தலைப்பட்ச மான பரபரப்புச் செய்திகள் தமிழ் நாட்டை அலைகழிக்கின்றன. இலங்கைவாழ் தமிழ் மக்கள் அமைதியாக வாழ ஒரு காலத்தில் புலிகளும் ஏற்ற தீர்வைத் தானே மார்க்சிஸ்ட் கட்சி வழி மொழி கிறது. உலக நாடுகளின் உதவியோடு அமைதியை நிலை நாட்டவே இந்திய அரசை வலியுறுத்துகிறது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.
7 கருத்துகள்:
seithi yai thirithu eluthukira vela cpm ku mattumea uriya kalai,, unga varuttham purikirathu,,, eela piracinaila neega ambalapattu pona varutham thanea?????
vijay fm tup,,
appuram sami JVP kooda aaalosanai panni eluthuneegala samy? kovai manatukku pamgalikalai kuupitabavea ungala ambalapattuthi erukkanum,
அனானி
செய்தியை திரிக்கிற வேலையை செய்ய வேண்டிய அவசியம் சிபிஎம்க்கு கிடையாது.
யார் செய்தியை திரிப்பது
யார் இனவாத அரசியலை உயர்த்திப்பிடிப்பது.
புலிக்கிட்ட யார் துட்டுவாங்கினது என சதாரான மக்களுக்கு நல்லாவே தெரியும் வேண்டும் என்றால் விசாரித்துபார்க்கலாம். மன்னிக்கவும் நீங்கள்தான் மக்களை சந்திப்பதே கிடையாதே.
எங்கள் வருத்தம் எல்லாம் அப்பாவி தமிழ்மக்கள் புலிகளாலும், சிங்கள இனவெறி அரசாலும் கொண்று குவிக்கப்படும். தமிழ்நாட்டில் அப்பாவி இளைஞர்கள் அரசியல் நாடகம் புரிந்துகொள்ளாமல் தவறான தற்கொலை முயற்சி செய்து மடிவதும் குறித்துதான்
i have a doubt...
for which purpose you had met the people and when....give an example
அனானி சொல்லப்பட்டுள்ள கருத்தில் விமர்சனம் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியமாக விவதிக்கலாம் உங்கள் கேள்விகள் பிரச்சனையின் மீது இருக்கட்டும் .வேறு கேள்விகள் வேண்டாம்.
everytime u ask to peoples that the party name, plan, address ... etc. But now you need the comment over issue. is it have any moral ...
இப்பொழுது மவு னத்தைக் கலைத்து அவர்களே பேச்சு வார்த்தைக்குப் போக புலிகளையும் இலங்கை அரசையும் அறிவுறுத்துகின்ற னர். வெளிநாட்டில் வசிக்கும் இலங் கைத் தமிழர்களில் பெரும் பகுதியினர், புலிகளின் பாதை தவறானது என்று குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இவர்கள் ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க, பணத்தை வாரி இறைத்தவர்கள். இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமை யை நிலை நிறுத்த அங்கிருந்து உதவத் தயாராய் இருப்பவர்கள். தலைவாரி, சீரு டை அணிவித்துப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகளை குண்டுகளாக் கும் தொழிலை முக்கியத் தொழிலாக்க எல்டிடிஇ-க்கு உதவியாக முதலீடு செய் தது தவறு என்று உணரத் தொடங்கி விட்டனர்.//
ethanai adippadaiyaaka vaithu intha karuthu? aathaarangal pls? statistic pls?
கருத்துரையிடுக