வியாழன், 26 பிப்ரவரி, 2009

எம்எல்ஏ-க்களுக்கு வாகனப்படி உயர்வு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு-வெளிநடப்பு

சட்டமன்ற உறுப்பினர் களுக்கு வாகனப்படியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் சிபிஎம் சட்டமன்றகட்சித் தலைவர் கே.பாலபாரதி கூறியது வருமாறு:

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஞானசேகரன், எம்எல்ஏ-களுக்கு வீடு வேண்டுமென்று கேட்டார். அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதனால் எம்எல்ஏக்களுக்கு ஜீப்புகள் வழங்குவ தாக முதலமைச்சர் அறிவித்தார். தற்போது அதனை மாற்றி எம்எல்ஏ-க்களுக்கு டீசல் அலவன்ஸ் வழங்கு வதாக அறிவித்துள்ளார்கள். அதாவது, 5ஆயிரமாக இருந்த வாகனப்படியை 20ஆயிரமாக உயர்த்தி உள்ளார்கள். இதன் மூலம் எம்எல்ஏ-க்களின் சம்பளம் 45ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் டன் கரும்புக்கு 2ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடுமை யான விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

முதியோர் பென்சன் பெற விண்ணப்பித்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என் கிறார்கள். இதனால் பல இடங்களில் மனுக்களைக் கூட வாங்க மறுக்கிறார்கள். இந்த விதியை தளர்த்த வேண்டுமென்று கோரினோம்.

கார் வைத்திருக்கும் எம்எல்ஏ-க்களுக்கு டீசல் செலவை பார்த்துக் கொள்ள தெரியாதா? இந்த வாகனப்படி உயர்வு தேவையற்றது. தமிழக அரசு மக்களுக்கு சேவை செய்யாமல், எம்எல்ஏ-க்களுக்கு செய்து கொண்டிருப்பது மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. நிதியமைச்சரின் பதிலுரையும் திருப்திகரமாக இல்லை. ஆகவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: