செவ்வாய், 3 மார்ச், 2009

இதுதான் மோடியின் குஜராத்!

அன்வர்
மோடியின் தலைமையில் குஜராத் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறுவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. சில கார்ப்பரேட் முதலாளிகள்மோடி தான் பிரதமருக்கு பொருத்தமானவர்என வக்காலத்து வாங்கினர். இதன் காரணமாக அத்வானிக்கு தூக்கம் பறி போய் விட்டது. பிரதமரின் கனவில் மோடி உலாவர அவரது மாநிலத்தில் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் அவலம் குறித்து தடுத்திட அவருக்கு சிந்தனையோ அல் லது நேரமோ இல்லாமல் போய் விட்டது.


அமெரிக்க பொருளா தார நெருக்கடி காரணமாக இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று வைரம் பட்டைத் தீட்டும் தொழிலாகும். குஜராத் மாநில சூரத் நகரில் மட்டும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் உள்ளனர். நெருக்கடி காரணமாக தீபாவளிக்கு மூடப்பட்ட தொழில் கள் இதுவரை திறக்கப்பட வில்லை.

வேலைப் பறிபோன கார ணத்தால் வறுமை இத்தொழி லாளர்களை வாட்டி வருகி றது. இதற்கு முதல் பலி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விதான். கல்விக் கட்ட ணத்தை கட்ட முடியாத பல தொழிலாளர்கள் தம் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதை நிறுத்த வேண்டிய தாயிற்று. இக்குழந்தை களின் கல்விக் கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுந்தன. மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மோடி அரசாங்கம் இணங் கியது.

இதற்கான படிவங்கள் வாங்க வந்த தொழிலாளர் கள் மற்றும் அவர் தம் குடும் பத்தினர் மீது மோடி அரசாங்கம் இரக்கமின்றி தடியடி நடத்தியது. பலர் இரத்தக் காயம் அடைந்தனர். இந்த தடியடி நடந்த பொழுதுதான் “உயிர்த் துடிப்புடன் பீடு நடை போடும் குஜராத்” எனும் நிகழ்ச்சியில் கார்ப்பரேட் முதலாளிகள் மோடிக்கு பிரதமர் கனவை உருவாக்கினர். அந்த கனவுலகத்தில் மிதந்த மோடிக்கு தடியடி என்பது கவலைப்படும் அள விற்கு ஒரு பெரிய பிரச்ச னையா என்ன?

கல்விக் கட்டணத்தை ரத்து செய்தாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்தனர் பெற்றோர்கள். காரணம் வறுமை! இறுதியில் தம் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தனர். இப்படி 71 தொழிலா ளர்கள் கடந்த இரு மாதங்க ளில் தற்கொலை செய்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

வறுமையில் இத்தொழி லாளர்கள் வாடிக் கொண்டிருக்கும் இதே வேளையில் வைர முதலாளிகள் தம் சொகுசு வாழ்வில் குறை வில்லாமல் மூழ்கி வருகின் றனர். இவர்களது வீட்டில் வருமானவரி சோதனை நடந்த பொழுது கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிக்கப்பட்டன.

குஜராத்தின் பல இடங்களில் இத்தொழிலாளர்கள் மரணத்தின் விளிம்பை நோக்கி சென்று கொண்டுள் ளனர். முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங் கும் மோடி தொழிலாளர்களுக்கு உதவிட முன்வர வில்லை. இன்னும் எத்தனை தற்கொலைகள் நிகழுமோ எனும் கவலை எழுந்துள்ளது.

எனினும் மோடியின் கவலை அது அல்ல! மனிதர்களின் மரணம் மோடியை எப்பொழுதும் பாதித்தது இல்லை! குஜராத் கலவரத் தில் 2000 சிறுபான்மையினர் கொல்லப்பட்ட பொழுது கவலைப்படாத மோடிக்கு இப்பொழுது எப்படி கவலை வரும்? அதுவும் பிரதமர் கனவில் உலா வரும் பொழுது!

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ங்கொய்யால இன்னைக்கி வேற ஒன்னும் டாபிக் கிடைகிலன்னு மோடிய கடிக்க வந்து விட்டீரோ

பெயரில்லா சொன்னது…

இந்திய தேசத்தின் அவமான சின்னம் தான் மோடி.

விடுதலை சொன்னது…

விவேக் அண்ணாத்த உங்க தலிவரு மோடிக்கும் உங்களுக்கும் கடிக்கிறது, வெட்டறதுதான் ரொம்ம புடிச்ச தொழில் எங்களுக்கு தெரியும்.