பதினைந்தாவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக் கிறது. தங்களுக்கும் நாட்டுக்கும் நல்ல முறையில் சேவகம் செய்யக்கூடிய விதத் தில் புதியதொரு அரசாங்கத்தைத் தேர்வு செய்திட வேண்டிய நிலையில் நாட்டு மக்கள் உள்ளார்கள்.
2004இல் நடைபெற்ற பொதுத் தேர்தலை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு - ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு - ஆதர வினை நல்கிடத் தீர்மானித்தது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திடுவதற்காகவும், மதவெறி சக்திகளிடமிருந்து வந்துகொண்டிருந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களிலிருந்து, நம் நாட்டில் வாழும் மதச்சிறுபான்மை யினரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பினை அளித்திடும் பொருட்டும் அவ்வாறு ஐ.மு.கூட்டணியை ஆதரித் தன. 2004 தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முழக்கங்களை முன்வைத்தது: ‘‘பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடித்திடுங்கள், மத்தியில் மதச்சார்பற்ற அரசை அமைத்திடுங்கள், நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்திடுங்கள்!.’’ அனைத்துத் தரப்பினரும் பெரு மகிழ்ச்சி கொள்ளும் வகையில் இவ்வனைத்துக் குறிக்கோள்களையும் மக்கள் மனதார நிறைவேற்றி வைத்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்கு, அதன் உறுப்பினர் எண்ணிக்கை 33லிருந்து 43 என்ற அளவிலும், இடதுசாரிக் கட்சிகளுக்கு அவற்றின் எண்ணிக்கை 43 இலிருந்து 61 என்ற அளவிலும் உயர்ந்தது.
தேர்தல் முடிந்தபின், 216 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தலைமையி லான ஐ.மு.கூட்டணிக்கு, பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு, 61 இடதுசாரி உறுப்பினர்களின் ஆதரவு அவசியத் தேவையானது. இடதுசாரிக் கட்சிகள், குறைந்தபட்சப் பொதுசெயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஐமுகூட்டணிக்கு ஆதரவினை நல்கியது. குறைந்தபட்சப் பொது செயல் திட்டம், நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் எண்ணற்ற திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், இடதுசாரிகளின் வற்புறுத்தலின் காரணமாக, இத்திட்டத்திலிருந்த சில உறுதிமொழிகளை, காங்கிரஸ் முகத்தைச் சுழித்துக்கொண் டாவது அமல்படுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டது. ஐமுகூ ஆட்சிப் பொறுப்பேற்றபின், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர வைப் பதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதுவும் பெயரளவில் ஒரு சில கிரா மங்களுக்கு அமல்படுத்தினர். வனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள் களின் மேல் பழங்குடியினருக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்குள் நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஐமுகூ அரசு தன் ஆட்சியின் அஸ்தமன ஆண் டில்தான் கடும் விவசாய நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விழிபிதுங்கிய விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்கள் இன்றளவும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுடன்தான் தொடர்ந்து கொண் டிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிமொழி குறித்து கூறியிருந்ததாக, இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறது. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், அவர்களின் நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால், இதனைக் கொண்டு வந்திருக்குமா? என்பது சந்தேகமே. காங்கிரஸ் கட்சிதான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நிலச்சீர்திருத் தங்கள் குறித்து முதலில் கூறியது. ஆயினும், அதன் தலைமையில் உள்ள எந்த மாநில அரசும், இதனைச் செய்திருக்கிறதா? இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மேற்குவங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள்தான் இவற்றை அமல்படுத்தி இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தங்கள் இல்லையென்றால், குறைந்த பட்சப் பொது செயல்திட்டத்தில் கூறப் பட்டிருந்த பல உறுதிமொழிகள் காகி தத்தில் மட்டும்தான் இருந்திருக்கும்.
ஐமுகூ அரசாங்கத்தை, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் கூறியுள்ள உறுதிமொழிகளில் ஒருசிலவற்றை அமல்படுத்திட இடதுசாரிகள் நிர்ப் பந்தித்தனர். (ஆயினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கும், 3 சதவீதம் பொது சுகாதாரத்திற்கும் செல விடுதல் போன்ற பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவிடல்லை.) அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவர முயன்ற பல் வேறு தாராளமய பொருளாதாரச் சீர்தி ருத்தங்களைக் கொண்டு வரவிடாமல் தடுத்ததும் இடதுசாரிக் கட்சிகள்தான். தற்போதைய, உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றிட இது பெரிதும் உதவியது. குறிப்பாக, இந்திய ரூபாயின் மதிப்பை முழுமையாக மாற்றவும், இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்வதற்கான உரிமைகள் அளிக்கவும், ஓய்வூதிய நிதியங்களைத் தனியாரிடம் தாரை வார்க்கவும், காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கவும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியுள் ளோம். இவ்வாறு நாம் தடுக்காமல் இருந் திருந்தால், உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் நம் நாட்டின் பொருளாதாரம் பேரழிவுக் குள்ளாகி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு படுவீழ்ச்சியுற்றிருக்கும்.
ஐமுகூ அரசாங்கமானது, தாராளமயப் பொருளாதார நிகழ்ச்சிநிரலை நிறைவேற்று வதிலேயே குறியாக இருந்ததன் காரண மாக, மதவெறி சக்திகளின் அட்டூழியங் களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியது. குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகள் மற்றும் கொலைபாதகத் தாக்குதல்கள் சிலவற்றின் மீது குற்றப்புலனாய்வுத் துறையினரின் (சிபிஐ) விசாரணைக்காக உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தபோதிலும் கூட, உருப்படியாக எதுவும் செய்யப் படவில்லை. விளைவு, முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக படுகொலைகளைப் புரிந்திட்ட மாநில அரசே மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமானது. மதவெறி சக்தி களிடமிருந்து சமூகத்தையும், ஆட்சி நிர்வாகத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்கான உளப்பூர்வமான உறுதிப்பாடு ஐமுகூ அரசிடம் இல்லை. இதனால், பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மீண்டும் ஆட் சிக்கு வர நேர்ந்தது. அதனை அடுத்து இப்போது பாஜகவும் மற்றும் அதன் மத வெறிக் கூட்டணிக் கட்சிகளும், மீண்டும் தங்களுடைய கொலைபாதக மதவெறி நிகழ்ச்சிநிரல் என்னும் தாயத்தைக் கட்டிக்கொண்டு, வரவிருக்கும் பொதுத் தேர்தலைச் சந்திக்கக் களம் இறங்கி யுள்ளன.
குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தினை முழுமையாக மீறியதுடன், ஐமுகூ அரசாங்கமானது, ஜார்ஜ் புஷ் தலை மையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்து டன் ஒரு கேந்திரக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இத்தகைய கூட்டணி யை மூடிமறைத்திடுவதற்கான ஒரு மூடுதிரைதான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும். இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. இவ்வாறு, இடதுசாரிக் கட்சிகள் ஐமுகூ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. அதனை அடுத்து, ஐமுகூ அரசு சிறுபான்மை அரசாக மாறியது.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எந்த அளவிற்குக் கேவலமான முறையில் அனைத்து அறநெறிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, குதிரைபே ரத்தில் ஈடுபட்டு ஐ.மு.அரசு பெரும்பான் மையைப் பெற்றதென்பது வெட்கக் கேடான வரலாற்றுப் பதிவாகும்.
எனவே, இப்போது நாட்டுக்குத் தேவை, ஐமுகூ அரசாங்கம் கடைப் பிடித்து வந்த கொள்கையைத் தீர்மானகர மான முறையில் மாற்றியமைக்கக்கூடிய சக்திகளை ஆட்சியில் அமர்த்துவதே மக்கள்முன் உள்ள கடமையாகும். இத்தகைய மாற்றானது, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை உயர்த்திப் பிடித்து, மதவெறி சக்திகளால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அபாயங்களை முறியடிக் கக்கூடிய அளவிற்கு இருந்திட வேண்டும்.
ஆயினும், ஐமுகூ அரசாங்கமானது, சமீபத்தில் சில மாநில சட்டமன்றத் தேர் தல்களில் பெற்ற வெற்றிகளை அடுத்து, மீண்டும் மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற கனவில் மிதப்பதாகவே தெரிகிறது. இது, சென்ற பொதுத் தேர்தலின்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டுகொண்டிருந்த கனவுலகத்தையே நினைவுபடுத்துகிறது. ‘‘இந்தியா ஒளிர் கிறது’’ என்கிற, அதன் முழக்கத்தின் பின் னணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றே நம்பிக்கொண்டிருந்தது. மயக்கத் திலிருந்த ஊடகங்களும், இன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அர சாங்கத்திற்கு செய்துகொண்டிருப்பதைப் போலவே அன்று பாஜகவின் பிரச்சாரங் களை எதிரொலித்தன. ஊடகங்களுக்கு, குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்க ளுக்கு, ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் அளித்தது. இவ்வாறு, அரசின் பிரச்சாரத்திற்கு எதிராக அவற்றைச் செல்லவிடா மல் தடுத்தன. இப்போதும், அதுவே தொடர்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைச் சற்றே உன்னிப்பாக ஆய்வுசெய்தோமானால், ‘‘மற்றவர்கள்’’-காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள்- குறிப்பிடத்தக்க சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதை அறிய முடியும். மத்தியப் பிரதேசத்தில், பாஜக 37.8 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட் சியை அமைத்திருக்கும் அதே சமயத்தில், மற்ற கட்சிகள் 21.6 சதவீத வாக்கு களைப் பெற்றிருக்கின்றன. ராஜஸ்தானில், காங்கிரஸ் 36.8 சதவீத வாக்கு களைப் பெற்று ஆட்சியை அமைத்திருக் கக்கூடிய அதே சமயத்தில், மற்ற கட்சிகள் 29 சதவீத வாக்குகள் பெற்றிருக்கின்றன. டில்லியில், காங்கிரஸ் கட்சி 40.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியை அமைத் திருக்கும் அதே சமயத்தில், மற்ற கட்சிகள் 23 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக் கின்றன. சத்தீஸ்காரில், பாஜக 40.6 சத வீத வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும்போது, மற்றகட்சிகள் 20.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. மிசோரத்தில், மற்றகட்சிகள் 30.1 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும், 38.9 சதவீத வாக்குகளைப் பெற்று காங் கிரஸ் ஆட்சியை அமைத்திருக்கிறது.
இவற்றிலிருந்து, தெரிந்து கொள்ளக் கூடிய அரசியல் செய்தி என்பது தெளிவாகிறது. மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சனை கள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கை களில் அநேகமாக எவ்வித வித்தியாசத் தையும் பார்க்கவில்லை. ஒரு சரியான மாற்று அரசியலின் அடிப்படையில் ஓர் அரசியல் மாற்று உருவானால், அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட, இத்த கையதோர் மாற்று அரசியல் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக மக்கள் நாளுக்குநாள் கடுமையான முறை யில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கமானது, உலகப் பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள, பன்னாட்டு வர்த்தக நிறுவனங் களைக் காப்பாற்றுவதில் ஆர்வம் காட்டக் கூடிய அளவிற்கு, பொதுமுதலீட்டை அதிகப்படுத்தி அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்திட முன்வரவில்லை. மக்களின் வாங்கும் சக்தி வலுப்பட்டால், அதனால் நாட்டின் பொருளாதாரமும் ஊக்குவிக்கப்படும். அரசாங்கத்தால் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள ஊக்குவிப்புத் திட்டங்கள் பெய ரளவிலான வைகளே. இவற்றால் நாட்டு மக்களின் வாழ்நிலைமைகளிலோ அல் லது நாட்டின் பொருளாதார மேம்பாட்டி லோ எவ்விதத் தாக்கமும் ஏற்படாது.
2004 தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் பாஜக சரியாக 1.6 சதவீத வாக்குகளை இழந்தன. காங்கிரஸ் 26.7 சத வீதமும், பாஜக 22.2 சதவீதமும் பெற்றன. ஆயினும், பாஜகவின் இடங்கள் 1999இல் 182ஆக இருந்தது, 2004இல் 138ஆகக் குறைந்தது. ஆனால் காங்கிரஸ் 114 லிருந்து 145 ஆக தன் இடங்களை உயர்த்திக்கொண்டது. இதன்பின்ன ணியில் உள்ள ரகசியம் இவற்றுடன் இணைந்திருந்த கூட்டணிக் கட்சிகள் தான். 1999இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் 118 இடங்களைக் கொண்டு வந்தன. ஆனால் அவையே 2004இல் வெறும் 51 இடங்களைத்தான் கொண்டு வந்தன. மாறாக, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் 74 இடங்களைக் கொண்டு வந்தன. மேலும் இதற்கு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் 61 பேரின் ஆதரவும் கிட்டின. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தட வை, காங்கிரஸ் அல்லாத, மதவெறி சக்திகள் அல்லாத, ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்பது முழுமையாகச் சாத்தியமே.
மதவெறி சக்திகளைப் பலவீனப்படுத் தக்கூடிய, மக்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை நாட்டின் அரசியல் இறையாண்மையைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில், சுயேட்சையான அயல் துறைக் கொள்கைகளை உள்ளடக்கிய ஓர் அரசியல் மாற்றே இன்றைய தேவை யாகும்.
நாட்டு மக்கள், தங்கள் முன் எழுந்துள்ள சவாலை எதிர்கொள்ள தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 2009 பொதுத்தேர்தல் நாட்டில் ஆட் சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளில் தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளை மக்கள், ஆட்சியில் அமர்த்திட வேண்டும். மக்கள் சக்தியால் மட்டுமே இதனைச் சாதித்திட முடியும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நாமனைவரும் இணைந்து செயல்படுவோம்.
திங்கள், 9 மார்ச், 2009
மக்கள் சக்தி கிளர்ந்தெழுக!
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
\\விடுதலையை அழிக்கும் ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை//
ஆனால் நந்திகிராமில் மட்டும் இடது கம்யுனிஸ்டுகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வாழ்க மக்கள் சக்தி! வளர்க நமது ஒற்றுமை!
எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்... தேர்தல் முடிந்த பிறகு காங்கிரச ஆதரிச்சு ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் வைப்பீங்க.. உலகவங்கி செயல்படுத்திய திட்டத்தையெல்லாம் உங்கள் நிர்ப்பந்தத்தாலதான் காங்கிரசு பண்ணிச்சும்பீங்க... நாலரை வருசம் கழிச்சு ஏதாவது நொட்டைன்னு சொல்லிட்டு மக்கள எழுச்சி கொள்ள சொல்வீங்க... ஏனுங்க நீங்க மக்கள அரசியல்படுத்திடுவீங்களோன்னு பயந்துட்டங்க... நல்லவேளை நீங்களே மாத்திட்டீங்க... அதென்னுங்க சதவீத கணக்கு அதுதான் மக்கள் மனசா அப்படின்னா மக்கள் ஓட்டுப் போடுறது கூட குறைஞ்சு போச்சே அத என்னாங்குறது..
//ஆனால் நந்திகிராமில் மட்டும் இடது கம்யுனிஸ்டுகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.//
உண்மைதான் நன்பர் விவேக் நந்திகிராமில் ,சிங்கூரில் பாசக, நக்சல்,மமதா கூட்டணி நடத்திய காட்டுமிராண்டி தனத்தையும், சீர் அழிவு நடவடிக்கையும் சிபிஎம் தோழர்கள் 52 பேர் படுகொலை செய்யப்பட்டததையும் நிச்சயம் மக்கள் தெரிந்து வைத்துஉள்ளார்கள் யார் நமது விடுதலைக்கான வழிகாட்டி யார் நமது எதிரி என்று .
நன்றி சதீசு குமார் அவர்களுக்கு சரியான வரலாற்றின் பாதையில் சிபிஎம் செல்வதால் நிச்சயம் வெற்றி உறுதி
//எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்... தேர்தல் முடிந்த பிறகு காங்கிரச ஆதரிச்சு ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் வைப்பீங்க.. //
அன்புள்ள அனானிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் வைக்கப்படாமல் இருந்தால்.
ஒருவேலை நீங்கள் இவ்வளவு அமைதியாக உங்கள் சீர்குலைவு வேலை செய்து இருக்கமுடியாது.
நீங்கள்வேலையில் இருப்பவர் என்றால் உங்கள் வேலை போய் இருக்கும் நீங்கள் எல்ஐசியில், வங்கியில் பணம் போட்டவர் என்றால் உங்கள் பணம் உங்களுக்கு கிடைத்து இருக்காது. இந்தியாவை நாசமாக்க கொணடுவரப்பட்ட 45 திட்டங்கள் அணுசக்தி திட்டம் தவிர்த்த மற்ற திட்டங்களை குப்பையில் போட்டது சிபிஎம்தான்.
குபசெ செய்யப்படாமல் ஒருவேலை விடப்பட்டு இருந்தால் மக்களுக்கு செய்யப்பட் அநிதியாகதான் இருந்து இருக்கும் .
நீங்கள் எதும் செய்யமாட்டியீர்கள் வாய் சவடால் மட்டும் அடிப்பீர்கள் நான் கூட உங்களைவிட அதிகமாக வாய்சவடால் அடிக்கமுடியும் என்பதை மறக்காதீர்கள். எந்த கொள்கையும் நடமுறைப்படுத்துகிற போது தான் அதன் முழுப்பரிணாமும் தெரியவரும் அந்தவேலை சிறப்பாக செய்துகொண்டு இருப்பது சிபிஎம்தான் சில தவறுகள் நடக்கலாம் அது வரலாற்றால் திருத்தப்படும்.
நான் என்ன சீர்குலைவு வேலை செய்தேன். இந்த அமைப்பு சீர்குலைந்து போவதில் ஆளும்வர்க்கம்தானே வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஏன் வருந்துகின்றீர்கள்...
நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தால் அதற்கு நீங்கள் ஐடி யூனியன் கூட சென்னையில் அமைக்கவில்லையே... அப்புறம் எப்படி உங்களாலதான் என்னோட வேலை காப்பாற்றப்பட்டதுன்னு புரியல. கொஞ்சம் விளக்குங்கள்...
அப்போ இப்போதைகக்கு எல்ஐசி பணம் ஷேர் மார்க்கட் ல விழலன்னுதான் நினைக்கின்றீர்களா ? விபரம் தெரியாத கருத்து இது... மூத்த தோழர்களிடம் கேட்டு எழுதுங்கள்... அப்படியும் கிடைக்காவிடில் ஆதாரம் தருகின்றேன்...
வங்கிப் பணத்தை நீங்கள் எப்படி காப்பாற்றினீர்க்ள் என விளக்கலாமே...
அணுசக்தி திட்டத்தை விடுங்கள்... எனரான் கம்பெனிக்கு நட்ட ஈடு நம்ம நாட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதில இருந்து தரப்பட்டுச்சாமே அதுக்கு என்னா பண்ணீங்க...
மெய்யாலுமே பிராகாஷ் காரத் முந்தா நேத்து புதிய பொருளாதார கொள்கை தேவை ன்னு சொல்லிருக்காறே.. அதுதான் உங்க கருத்தும்னா மேல நீங்க சொன்னத கொஞசம் சிரிக்காம படிங்க..
சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை சரி எனச் சொன்ன பழைய தத்துவங்களைப் புறக்கணித்து நடைமுறையை மாற்ற இவற்றை ஒன்றிணைப்பதுதான் மார்க்சியத்தின் தனித்தன்மை என எங்கோ படித்ததாக ஞாபகம். அவ்வித்தியாசம் சவடால் என்றால் எதனை மாற்றப் போகின்றீர்கள் முதலில் தேசத்தையா அல்லது உங்களையா
//இந்த அமைப்பு சீர்குலைந்து போவதில் ஆளும்வர்க்கம்தானே வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஏன் வருந்துகின்றீர்கள்...//
இந்த அமைப்பில்தான் நான் வாழ்கிறேன் நீங்கள் வாழ்கின்றீர்கள் என்பதை மறக்கவேண்டாம் .
இந்த அமைப்பு சீர் குலைந்து போகவேண்டும் என்ற உங்கள் விருப்பத்தின் முழு ஆசை என்ன இந்த அமைப்பில் உள்ள முதலாளிகள் சீர்குலைந்துபோய்விடுவார்கள் முதலாளித்துவம் சீர்குலைந்து அவர்களோடு போய்விடும் நாம் புரட்சி கொண்டுவந்துவிடாலம் என்பதா? முதலலில் இந்த அமைப்பில் 90 சதவிதம் ஏழை உழைப்பாளி , விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள் இந்த அமைப்பில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கபோவது இல்லை என்றாலும். முதலாளிகள் எப்படியும் தப்பித்துக்கொள்ளவார்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.
//இப்போதைகக்கு எல்ஐசி பணம் ஷேர் மார்க்கட்ல விழலன்னுதான் நினைக்கின்றீர்களா ? //
அனானி நான் அப்படி சொல்லவில்லையே. நாங்கள் குபசெ செய்து இருக்கவில்லை என்றால் இன்நேரம் இந்திய வங்கிகளும் எல்ஐசியும் தனியார் முதலாளிகளின் கையில் முழுமையாகபோய் இருக்கும் என்று தான் சொல்கிறேன்.
கருத்துரையிடுக