சனி, 14 மார்ச், 2009

மூன்றாவது அணிக்கு பெருகி வரும் ஆதரவு கலங்கும் காங்கிரஸ்; பயத்தில் பாஜக!

இடதுசாரிக் கட்சிகளின் முன் முயற்சியால் உருவாக்கப் பெற்று மாபெரும் சக்தியாக எழுந்துள்ள மூன்றாவது அணியால் காங்கிரசும், பாஜகவும் கலக்கம் அடைந் துள்ளன. இந்த அணியை எப்படி எதிர் கொள்வது எனத் தெரி யாமல் குழம்பிப் போயுள்ள இவ் விரண்டு கட்சிகளும், பல்வேறு மாநிலங் களில் தங்களது தேர்தல் வியூகங் களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள் ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகளும், அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளும் இணைந்து, காங்கிரசுக்கு மாற்றாக, பாஜகவுக்கு மாற்றாக ஒரு மாபெரும் மாற்று அணியை உருவாக்கியுள்ளன.

கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற மூன்றாவது மாற்று அணியின் துவக்க விழாவில் லட் சக்கணக்கான மக்கள் திரண்டு, இந்த அணியின் வெற்றி உறுதி என் பதை பறை சாற்றினர்.

இந்நிலையில், மூன்றாவது மாற்று அணியில் காங்கிரஸ் அல் லாத, பாஜக அல்லாத, வேறு சில கட்சிகளும் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், காங் கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் தங்களது உறுதி யான நிலைபாட்டை அறிவிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, காங்கிரசுடன், சரத் பவார் கட்சிக்கு உரசல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி, இந்த முறை ராகுல் காந்தியை பிரதமராக்கி விட வேண்டுமென்று திட்டமிடுகிறது. ஆனால், அதை எதிர்த்துள்ள சரத் பவார், இம்முறை மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு வருக்குத்தான் பிரதமர் பதவி அளிக் கப்பட வேண்டுமென்று காங்கிரஸ் அணியில் புது குண்டை வீசி யுள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை ஒரிசாவில் அக்கட்சியின் கூட் டணி நொறுங்கியதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அக்கட்சி பல மாநிலங்களில் தனித்து விடப்பட் டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக் கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே பாஜக அணியில் ஒட்டிக் கொண்டுள்ளன. இதில் மதச் சார்பற்ற கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் தொகுதி உடன்பாடு தொடர்பாக பாஜகவுடன் தொடர்ந்து மோதி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது. இந்த மோதல் தீவிரம் அடையும் பட்சத்தில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜக அணியை விட்டு வெளியேறும் நிலை ஏற் படக்கூடும்.

மொத்தத்தில் தேசிய அளவில் காங்கிரசும், பாஜகவும் ஓரிரு மாநி லங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத் தப்பட்டுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இச்சூழலில் மாபெரும் மக்கள் சக்தியாக மூன்றாவது மாற்று அணி உருவெடுத்துள்ளது. இந்த அணி யைப் பற்றி காங்கிரஸ் தலைமை யும், பாஜக தலைமையும் அலட் சியமாகவே கருத்துக்களை வெளி யிட்டுள்ளன.

பத்திரிகைகளில் வெளியி டுவதற்காக ஒப்புக்கு கருத்து கூறியிருந்தாலும், இரு கட்சிகளின் தலைமையும் மூன்றாவது அணி யின் சவால் குறித்து கலங்கிப் போயுள்ளன என்பதே உண்மை. இதுதொடர்பாக, டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், “மூன்றாவது அணியின் பலத்தை யாரும் நிராகரிக்கக் கூடாது; மக்க ளவையில் காங்கிரசுக்கோ, பாஜக வுக்கோ பெரும் சரிவு ஏற்படும் என்றால் அது மூன்றாவது அணி யால்தான் நிகழப் போகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தேர்தல் உத்தி களை வரையறை செய்யும் உயர் நிலைக்குழுவோடு நெருங்கிய தொடர்புள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “இதுவரையிலும் மூன்றாவது அணியைப் பற்றி நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கவில்லை. ஆனால், மூன் றாவது அணி என்பது, மிகப்பெரும் இருள் வெளியில் அசுர வேகத் துடன் பாய்ந்து ஓடி வரும் குதிரை என்பதை இப்போதுதான் உணர் கிறோம். இந்த அணி மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே கணிக்கப் பட்டுள்ள அரசியல் கணக்குகளை தவிடு பொடியாக்கப் போகிறது என்றே எனக்குப் படுகிறதுஎனக் குறிப்பிட்டுள்ளார்.

1998-ம் ஆண்டு மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்த ஐக்கிய முன்னணி அரசுக்குப் பின்னர் இடதுசாரிக் கட்சிகளும் இதர மதச் சார்பற்ற கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள மிகப்பெரும் கூட்டணி தற்போதைய மூன்றாவது மாற்று அணி என்று ஒப்புக் கொள் ளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு வட்டாரங்கள், இந்த முறை குறைந்தபட்சம் 200 மக்களவை தொகுதிகளில் காங்கிரசையும், பாஜகவையும் வீழ்த்தப் போகிற அணியாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன.

இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக முகாம்களை கலக்க மடையச் செய்துள்ளன. இடது சாரிகளின் கருத்தாகவே இருந்து வந்த காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அணி இவ்வளவு விரைவாக ஒரு தேசிய சக்தியாக உருவம் பெறும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என இரு தரப்பினருமே கூறுகின்றனர்.

பிரகாஷ் காரத்தையும், தேவகவுடாவையும் நாங்கள் உண்மையிலேயே குறைத்து மதிப்பிட்டு விட்டோம்என்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜக தலைவர் கூறுகையில், “சில மாநிலங்களில் சிறிய கட்சிகளை எப்படியாவது எங்களது அணிக்குள் கொண்டு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்என்று தெரிவித்தார்.

தும்கூரில் நடைபெற்ற மூன்றாவது மாற்று அணியின் துவக்க பொதுக்கூட்டத்தில் திரண் டிருந்த மக்கள் கூட்டம் உண்மை யிலேயே மிகப்பெரும் கூட்டம். அதைப் பார்த்த பின்னர்தான் எங்க ளது தேர்தல் உத்திகளை கிட்டத் தட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங் களில் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மூன் றாவது அணியின் சக்தி உண் மையிலேயே மிகப்பெரியது என்று எங்களது அணியில் உள்ள கட்சி கள் எண்ணத் துவங்கி விட்டனஎன்று பாஜக உயர்மட்டத் தலை வர்களின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய உறுப் பினர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, மூன்றாவது அணியில் உறுதியுடன் நின்று விட்டதால் அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் ஓரளவு தொகுதிகள் கிடைப்பது கூட சாத்தியமில்லை என்றே உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் வட்டாரம் கருதுவதாக ஐஏஎன்எஸ் செய்தி தெரிவிக்கிறது.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மூன்றாவது அணியால் பெரும்பாண்மை பெற முடியாது, அதேசம்யம் அந்த அணியால் தேர்தலுக்குப் பின் பாஜக வுடன் கூட்டுசேர்ந்து ஆட்சி அமைக்கவும் முடியாது. எனவே அது மீண்டும் காங்கிரஸ் கூடத்தான் சேரும் எனவே காங்கிரஸ் கலங்கவேண்டாம்.

விடுதலை சொன்னது…

//காங்கிரஸ் கூடத்தான் சேரும் எனவே காங்கிரஸ் கலங்கவேண்டாம்.//

அன்புள்ள அனானிக்கு காங்கிரஸ்க்கு இனி ஒருபோதும் இடதுசாரிகள் ஆதரவு தரமாட்டார்கள். ஏற்கணவே மதவாத பாசகவை அதிகாரத்திற்கு வராமல் தடுப்பதற்காவே காங்கிரஸ் கட்சியை குபசெ முன்னிறுத்தி ஆதரித்தது. அதனுடை விளைவு அமெரிக்காவிடம் இந்தியா அடகு வைக்கப்பட்டுவிட்டது. மிண்டும் ஆதரவு அளித்தால் இந்தியாவை விற்றுவிடுவார்கள் என்று இடதுசாரிகளுக்கு தெரியும் எனவே நிச்சயமாக காரங்கிரஸ், பாசக அல்லாத முண்றாவது மாற்று அணி ஆட்சி அமைக்கும் அது புதிய பொருளாதார கொள்கையோடும், வகுப்புவாத அரசியல் இல்லாமலும் இருக்கும்.

Sanjai Gandhi சொன்னது…

விடுதலை,
மூன்றாவது அணி ஒரு காற்றடைத்த பலூன். விரைவில் வெடித்து சிதறும். மாயாவதி தன்னை பிரதமராக அறிவித்தால் மட்டுமே 3வது அணியில் இடம் பெற முடியும் என அறிவித்துவிட்டார். மாயாவதியை பிரதமராக அறிவித்தால் ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்.

சரத்பவாருக்கு காங்கிரசை விட்டால் வழி இல்லை. சிவசேனாவை நம்பித்தான் அவர் காங்கிரசை முறைப்பது போல் நடித்தார். இப்போ அவர்களும் பாஜகவுடன் சேர்ந்துவிட்டார்கள்.

ஒருவேளை 3வது அணிக்கு வந்தாலும் தன்னைத் தான் பிரதமராக அறிவிக்க வேண்டும் என் சொல்வார். அவருக்கு அந்த ஆசை எப்போதும் உண்டு.

தேவகவுடாவை பற்றி சொல்லவே வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பார். சந்திரபாபு நாயுடு இவ்ளோ கஷ்டப் படறதே பிரதமர் பதவிக்காகத் தான்.

தேர்தலுக்கு பின்பு எந்த கட்சி பெரும்பன்மை பெறுகிறதோ அந்தக் கட்சிதான் பிரதமரை தீர்மானிக்கும். அதுவரை பிரதமரை அறிவிக்க மாட்டோம் என பிரகாஷ் கரத் சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா 3வது அணி பற்றி வாய்க் கூட திறக்கவில்லை. அவர் பாஜகவுடன் தான் சேர்வார்.

ஆகவே இந்த பேராசை கும்பலைப் பார்த்து காங்கிரஸ் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. 3வது அணியினர் அவர்கள் தோல்விக்கு அவர்களே வழி செய்துக் கொள்வார்கள்.

இருக்கும் கூட்டணிகள் எல்லாம் கழண்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக வேண்டுமானால் பயப்படலாம். அவர்கள் கூடாரத்திலேயே அத்வானிக்கு எதிராக முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் எல்லாம் வேலை செய்வார்கள். இப்போதே அருண் ஜேட்லி தேர்தல் கமிட்டி கூட்டத்தை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆக.. அடுத்ததும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான்.

-/சஞ்சய்காந்தி

Sanjai Gandhi சொன்னது…

//காங்கிரஸ்க்கு இனி ஒருபோதும் இடதுசாரிகள் ஆதரவு தரமாட்டார்கள்.//

தேர்தலுக்கு பின் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக 2 கம்யூனிஸ்டுகளுமே சொல்லி இருக்கிறார்கள் தோழரே.

( இந்த Word Verification எடுத்து விடுங்களேன். பின்னூட்டம் போட சிரமமாய் இருக்கிறது)

விடுதலை சொன்னது…

அன்புள்ள பட்டாம்பூச்சிக்கு
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் கடந்த 2004 தேர்தலில் மதவாத பாசகவை அதிகாரத்திற்கு வராமல் தடுப்பது. இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. என்ற பிரதான இலக்கை அடிப்படையாக வைத்துதான் தேர்தலை சந்தித்தது இடதுசாரிகளின் அணி. அது மிகப்பெரும் வெற்றிப்பெற்றது.

அதேபோல் 2009 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத பாசக அல்லாத முன்றாவது மாற்று அணி ஆட்சி அமைக்கும்.கடந்த கால அரசியல் வரலாற்றின் படிப்பினையில்தான் இந்த முன்றாவது மாற்று அணி . அதை அவ்வளவு எளிதாக யாரும் உடைத்துவிடமுடியாது. நிங்கள் சொல்வது போல் அது பலூன் அல்ல. அடுத்து அடுத்து நடக்கிற நிகழ்வுகள் உங்களுக்கு புரியவைக்கும்.

மீண்டும் கூறுகிறேன் எந்த இடதுசாரிகட்சி தலைவரும் மீண்டும் காரங்கிரஸசை ஆதரிக்கபோவதாக தெரிவிக்கவில்லை. ஒருவேலை முன்றவாவது அணியை காங்கிரஸ் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று உகங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். ஒருவேலை ஆட்சி அமைக்கமுடியவில்லை என்றால் எதிர்கட்சி வரிசையில் நிச்சயம் அமர்வோம் என்று தான் கூறியுள்ளார்கள்.

citizen சொன்னது…

//////இந்த முறை குறைந்தபட்சம் 200 மக்களவை தொகுதிகளில் காங்கிரசையும், பாஜகவையும் வீழ்த்தப் போகிற அணியாக இருக்கும் ////////
200 தொகுதியா ? எங்கு உள்ளது .கர்நாடகவிலா ? இங்கு பா.ஜ.க வலிமையாக உள்ளது . கேரளவில் இடது முன்னணியா ? இங்கு காங்கிரஸ் மீட்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது . மேற்கு வங்க இடது முன்னணியா ? இங்கு திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை பார்த்து மார்க்சிஸ்ட் கிரங்கிபோய் உள்ளது . ஆந்திராவில் சந்திரபாபுவா இங்கு மும்முனை போட்டி .
ஜெயலிதா ? யாரையும் பிரதமராக ஏற்க மாட்டார் தன்னைத்தவிர .
இந்த ஒட்டுமொத்த கட்சிகளின் சீட்டுக்கள் 100 ஐ தொடாது என்பது என்னுடைய எண்ணம் .பா.ஜ.க கூட்டணி 200 ஐ தொடாது .
ஆக.. அடுத்ததும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான்--- என்று ஒரு நண்பர் சொன்னாரே அதுதான் உண்மை .