புதன், 25 மார்ச், 2009

தற்கொலைப் பாதையில் பாஜக


-அசோகன் முத்துசாமி

இந்த தேர்தலிலும் இந்துத்துவத்தையே முக்கியப் பிரச்சனையாக முன் வைப்பதெனத் தீர்மானித்து அதை எப்படிச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தது. அதை அகில இந்திய அளவில் மையவிவாதப் பொருளாக வருண்காந்தி மூலம் சாதித்துக் கொண்டு விட்டது. பாஜகவின் இந்துத்துவ பிரச் சாரத் திட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் இப்போது அதுவால் சாமர்த் தியமாக (அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கிறது) களத்திற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. 

மீண்டும் ராமர் கோவில் என்று சொல்லி வைத்திருந்தது. ஆனால் அது ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வில்லை. ஒரு வேளை தேர்தலின் போக் கில் என்ன செய்வார்களோ தெரியாது. 

அடுத்ததாக, கிரிக்கெட். பொருளாதார ரீதியாக பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கணக்கு வழக்கின்றி லாபமும், அவை வீசி எறிகின்ற எலும்புத் துண்டிலேயே சில வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகிவிடக் கூடிய சம்பளமும் கிடைக்கக் கூடிய தொழில். ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பாஜகவிற்கு மதவெறி அரசியல் வளர்ப்பதற்கான ஒரு கருவி. தேசிய வெறியைக் கிளப்பிவிடுவதற்கான ஒரு வழி. பாஜகவும் ஊடகங்களும் இப் படியெல்லாம் செய்வது கிரிக்கெட்டின் பால் கோடிக்கணக்கான மக்கள் ஈர்க்கப் படுவதற்கும், அதன் மூலம் சம்பந்தப்பட் டவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்குமான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. 

எனினும், இப்போது தேசிய வெறி யையோ, மதவெறியையோ கிளப்ப வாய்ப் பில்லை. பல்வேறு நாட்டு வீரர்கள் பங் கேற்கும் ஐபிஎல் போட்டிகளை வைத்துக் கொண்டு எப்படி இந்து மதவெறியைத் துாண்ட முடியும்? ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்ப முடியுமே?

தேர்தல் நேரத்தில் இந்தப் போட்டிக ளுக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்திய மில்லை என்று மத்திய, மாநில அரசாங் கங்கள் தெரிவித்தன. போட்டியைத் தள்ளி வைக்குமாறு கோரின. முடியாது நாங்கள் வேறு நாட்டில் நடத்திக் கொள்கிறோம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு அடுத்தடுத்து நடக்கவிருக் கிற போட்டிகள் குறித்த பிரச்சனை மட்டு மின்றி, முக்கியமாக கோடிக்கணக்கில் விலை கொடுத்து வீரர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள். வர்த்தக நிறுவனங் களுடன் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டார் கள். போட்ட முதலையும், லாபத்தையும் எடுக்க வேண்டிய அவசரம். 

கேவலம் கிரிக்கெட் போட்டிக்கு பாது காப்பு வழங்கமுடியாது என்று மத்திய அர சாங்கம் சொல்வது உள்நாட்டுப் பாது காப்பு விஷயத்தில் அது தோல்வி யடைந் துள்ளதையே காட்டுகிறது என்கிறது பாஜக. 53 போட்டிகளையும் குஜராத்தில் நடத்துங்கள், நான் பாதுகாப்பு வழங்கத் தயார் என்று வீரவசனம் பேசுகிறார் நரேந் திர மோடி. சரி, சரி இங்கேயே நடக்கட்டும் என்று மத்திய அரசாங்கம் சொல்லட்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரிய வில்லை. இதன்மூலம் கிரிக்கெட் ரசிகர் களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் போலும். அல்லது தேர்தல் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டால் அப்போதும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்பலாம் என்று எண்ணுகிறார்களோ என்னவோ? அல்லது போட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போலீஸ் அனுப்பப்படும்போது தேர்தல் பாதுகாப்பில் ஏற்படக் கூடிய பலவீனத் தைப் பயன்படுத்தி தேர்தல் தில்லுமுல் லுகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் என்று திட்டமிடுகிறார்களோ என்னவோ? இவற்றில் ஏதோ ஒன்றாகவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம். 

எப்படியாயினும் உள்நாட்டுப் பாது காப்புப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டார் கள். அடுத்தடுத்து இந்துத்துவத்தையே தன்னுடைய தேர்தல் ’கூச்சலாக’ முன்வைக்கிறது. ஏனெனில், அதனிடம் வேறு சரக்கு இல்லை. கடந்த தேர்தலில் தோற் றதற்கான காரணங்களில் இந்துத்துவமும் ஒன்று என்றபோதும் பாஜக இதைத்தான் செய்கிறது. ஒரிசாவில் இந்துத்துவத்தை செயல்படுத்தியதால் பிஜு ஜனதா தளத்தின் நட்பை இழந்தது. இது போன்ற காரணங்களுக்காக ஏற்கனவே பல நண்பர்களை இழந்தது. ஆனாலும், பாஜக இந்துத்துவத்தை விடுவதாக இல்லை. பாஜக தற்கொலைப் பாதையில் மிக வேக மாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதுதான்.

4 கருத்துகள்:

Rajaraman சொன்னது…

\\பாதுகாப்பில் ஏற்படக் கூடிய பலவீனத் தைப் பயன்படுத்தி தேர்தல் தில்லுமுல் லுகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் என்று திட்டமிடுகிறார்களோ என்னவோ? இவற்றில் ஏதோ ஒன்றாகவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.//

மேற்கு வங்கத்தில் இத்தனை காலம் என்ன விதமான மோசடி செய்து ஆட்சியில் இருந்துள்ளீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அருமை.

BJP தற்கொலை பாதையில் செல்வது இருக்கட்டும். இடதுசாரிகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் கொடுக்கப்போகும் மரண அடியை அதுவும் முக்கியமாக உங்கள் கோட்டைகளான? WB, Kerala வில் பார்க்கத்தானே போகிறீர்கள்.

Rajaraman சொன்னது…

தமிழ்நாட்டில் புரட்சிதளைவியுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே அது என்ன பாதை என்று அப்படியே கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா.

உங்கள் கமண்டலிதிலிருந்து அவர் தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்தவுடன் அவர் Secular and Pro Labour ஆகிவிட்டாரா.

உங்களுக்கு ரெண்டு சீட் கொடுத்தால் பல்டி அடிக்க சொன்னால் கூட உங்கள் தலைகள் ரெடியாக இருக்கும் போலிருக்கிறதே.

விடுதலை சொன்னது…

நன்பர் ராஜாராமன் அவர்களுக்கு மோடி வேலை செய்து மோசடி செய்து ஆட்சியில் இருக்கவேண்டிய அவசியம் மார்க்சிஸ்ட்களுக்கு இல்லை சாதாரண அடித்தட்டு மக்களின் ஆரனாக இருப்பதும் மேற்கு வங்க மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக செய்துவரும் பணியும் . எந்த வித ஊழல் குற்றசாட்டும் இல்லாத அரசியல் கட்சியாகவும் இருப்பதும்தான் காரணமே தவிர உங்களின் அவதூறு பிரச்சாரத்தால் இடதுசாரிகளை ஒன்றும் செய்து விட முடியாது நன்பரே. நிச்சயம் மரண அடி பாசகாவிற்கு ஏற்கணவே விழுந்துவிட்டது. மே .16 ந்தேதி உங்களுக்கு தெரியும் .இடதுசாரிகளின் கோட்டைகள் இன்னும் வலுவாக உறுதிப்படுத்தப்படும்.

மேற்கு வங்க அரசின் வேறு எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகள் சில


மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்தங்கள் தீவிர மாக அமல்படுத்தப்பட்ட தன் விளைவாக 97.8 சத விகித குடும்பங்களை உள் ளடக்கிய சிறிய-மிகச்சிறிய நடுத்தர விவசாயிகளின் கைகளில் அம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 84 சத விகிதம் நிலம் இருக்கிறது.

இந்தியாவிலேயே அரிசி மற்றும் காய்கறி உற்பத்தியில் மிக அதிகமான சராசரி உற்பத்தி அளவை எட்டியுள்ள மாநிலம் மேற்குவங்கம்தான்.

மேற்குவங்கத்தில் முறைசாரா மற்றும் சிறிய, மிகச்சிறிய தொழில் நிறு வனங்களின் எண்ணிக்கை 27.5 லட்சம், இது நாட்டி லேயே மிக அதிகமானது. தேசிய அளவில் 15 சத விகிதம்.

மேற்குவங்கத்தில் தொழில் முதலீடுகள் பெருகியுள்ளன. 2007 ஜன வரி முதல் நவம்பர் வரை யிலான காலகட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்ட முன் மொழிவுகளை அம்மாநி லம் பெற்றுள்ளது.

2006ல் சிறார் மரண விகிதம் 1000 பிறப்புக்கு 57 என்று அகில இந்திய விகிதம் இருக்கையில், அது மேற்குவங்கத்தில் 38 ஆக குறைந்திருந்தது.

அகில இந்திய சராசரி வாழ்க்கை வயது ஆண் களுக்கு 61 ஆண்டு, பெண் களுக்கு 62.5 ஆண்டு என இருக்கையில், இது மேற்கு வங்கத்தில் ஆண்களுக்கு 64.5 ஆண்டு, பெண்களுக்கு 67.2 ஆண்டு என உயர்ந் திருக்கிறது.


மேற்குவங்கத்தில் மூடப்பட்ட தொழிற் சாலைகள் மற்றும் தேயி லைத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.750 உத வித்தொகை வழங்கப்படு கிறது.

முறைசாராத் தொழி லாளர்களுக்காக மேற்கு வங்க மாநில அரசு செயல் படுத்திவரும் வருங்கால வைப்புநிதித்திட்டத்தில் 12 லட்சத்திற்கு மேல் தொழி லாளர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் 9 லட்சத் திற்கு மேல் உறுப்பினர்கள்.

மேற்குவங்கம் ‘நிர்மல்’ கிராமப்புற சுகாதார மேம்பாட்டுச் செயல்திட் டத்தை வெற்றிகரமாக நடத் திக் காட்டியுள்ளது. 80 சத விகிதம் கிராமப்புறக் குடும் பங்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்திருக்கிறது.

விடுதலை சொன்னது…

தமிழ்நாட்டில் புரட்சிதளைவியுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே அது என்ன பாதை என்று அப்படியே கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா.

பாதை ஒன்று பாசக தமிழகத்திலும் எந்த அணியிலும் இடம் பெறக்கூடாது. அதன் மூலம் நாடு முழுவதும் அடுத்து பாசக ஆட்சிக்கு வரும் என்ற கருத்தை முதலில் ஏற்படுத்துவது.

தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியை முற்றாகத் தோற்கடிப்பது அவர்களின் பலத்தை முழுவதுமாக குறைப்பது. அடுத்து அவர்களை ஆட்சிக்கு வராமல் தடுப்பது