சனி, 4 ஏப்ரல், 2009

மீண்டும் அயோத்தி பிரச்சனை காஷ்மீர் அந்தஸ்தை ரத்து செய்ய திட்டம் தேர்தல் அறிக்கையில் விஷம் கக்கியது பாஜக

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீரு வோம் என்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் அமைப்புச் சட் டப் பிரிவு 370-ஐ ரத்து செய் வோம் என்றும், பாரதிய ஜனதா கட்சி தனது மத வெறி நிகழ்ச்சி நிரலை தேர் தல் அறிக்கையாக்கி வெளி யிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு, முஸ்லிம் மக் கள் மீது நடத்திய கொடூர இனவெறி படுகொலை யைத் தொடர்ந்து, உரு வாக்கப்பட்ட அச்சத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத் தில் மீண்டும் பாஜக ஆட் சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவ தும் குஜராத் மாதிரியை பின்பற்றுவது என பாஜக முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, ஒரிசாவில் கிறிஸ்தவ மக்கள் மீதும், கர்நாடகத்தில் சிறு பான்மை மக்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்திய பாஜக, ராமர் கோவில் கட் டுவோம் என்றும், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்தக்கூடாது என்றும், அந்தப் பணிக்காக ‘ராமர் பாலம்’ என்று இவர்களால் பெயரிடப்பட்டுள்ள மணல் திட்டை தோண் டக்கூடாது என்றும் கூறி, தனது மதவெறி நடவடிக் கைகளை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டு தேர்தல்களின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமைக் கட்சி என்ற முறையில் தேர் தல் அறிக்கையில் நேரடி யாக ராமர் கோவில் கட்டு வோம் என்று கூறாமல் இருந்த பாஜக, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகள் ஒவ் வொன்றாக வெளியேறிய நிலையில், மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையை தனது தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.


நாங்கள் ஆட்சிக்கு வந் தால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந் தஸ்து தரும் 370-வது பிரிவை ரத்து செய்வோம் என்றும், டில்லியில் வெள் ளியன்று தேர்தல் அறிக் கையை வெளியிட்ட அத் வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறினர். மேலும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என் றும் அவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

ஏற்கெனவே வருண் காந்தி போன்ற பாஜகவின் தலைவர்கள் மிகக் கொடூர மான முறையில் வெறித் தனமாக பேசியதை வர வேற்று ஆரவாரம் செய்து ஆனந்தப்பட்ட கட்சி பாஜக என்பது கவனிக்கத்தக்கது.

வருண் காந்தி மட்டு மின்றி, அத்வானி உள் ளிட்ட அக்கட்சியின் முக்கி யத் தலைவர்களும் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக சிறு பான்மை மக்களுக்கு எதி ராக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், ராமர் கோவில் கட்டுவதே இலக்கு என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப் பது, சிறுபான்மை மக்க ளுக்கு பகிரங்கமாக விடுக் கப்பட்டுள்ள மிரட்டலே என்று அரசியல் நோக்கர் கள் கூறுகின்றனர்.

மேலும், நாடு முழுவ தும் விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டிய நிலை யில், அரிசி, பருப்பு உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை மைக்கு பெருவாரியான இந்திய மக்கள் தள்ளப் பட்ட சூழ்நிலையில், அவர் களுக்காக சிறிதும் கவலைப் படாமல் இருந்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒன்றுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை தரு வோம் என்றும், அது கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்றும் படாடோப அறிவிப்பை யும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக கிலோ அரிசி 3 ரூபாய்க்கு தரப் போவதாக கூறியுள் ளது. இதற்கு பதிலடி என்ற பெயரில், பாஜக கிலோ அரிசி 2 ரூபாய் என்று அறி வித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

2 கருத்துகள்:

அருணாச்சலா சொன்னது…

BJP யாவது அதன் கொள்கையை வெளிப்படையாக சொல்கிறது, அதாவது உங்கள் பாஷையில் சொன்னால் விஷம் கக்குகிறது..

ஆனால் நீங்களோ சைலண்டாக சீனாவுக்கு வாழ் பிடித்துக்கொண்டு இந்திய தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறேர்களே..

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று உங்கள் போலிட்பீரிவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்க்கு சொந்தம் கொண்டாடும் சீனாவை கண்டிக்க யோக்கியதை உண்டா.

விடுதலை சொன்னது…

/சொன்னால் விஷம் கக்குகிறது../

அருனாசலம் அவர்களுக்கு பாசக விஷம் கக்குவது உண்மை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

/சைலண்டாக சீனாவுக்கு /

உங்களுக்கு அவதூறு அடிப்படை ஆதாரம் இல்லாத உங்க உலுத்துபோன இந்த டயலாக்க தவிர வேறு எதும் உங்களால் சொல்லமுடியாது. உங்கள் கூற்றில் துளி அளவாவது உண்மை இருக்குமா என்பதை உங்களையே ஒருமுறைகேட்டுக்கொள்ளுங்கள்.

//போலிட்பீரிவில் தீர்மானம் நிறைவேற்றி //

அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதியாக இருக்கும் .அதுகுறித்து உங்களுக்கு சந்தேக இருந்தால் பிரானப்முகர்ஜீயோ, அத்வானியையோ கேட்டுக் தெரிந்துகொள்ளுங்கள்