வெள்ளி, 10 ஏப்ரல், 2009

அம்மாடியோவ்....... அம்புட்டு பொட்டியா?

கருப்புப் பணம் கருப்புப் பணம் என்கிறார்களே அப்படின்னா என்ன? பணம் கருப்பா இருக்குமா? அல்லது செல்லாத நோட்டா? அப்படி ஒண்ணும் இல் லை. அரசாங்கத்துக்கு தெரியாம கணக்குல காட்டாம, வரி கட்டாம, திருட்டுத்தனமா ஒழிச்சி வச்சிருக்கிற பணம். அதாவது நேர்மையாக சம்பாதிக்காம, குறுக்கு வழியில திருட்டு வழியில லஞ்ச வழியில முறைகேடாக கொள்ளை யடிச்ச பணமுன்னு அர்த் தம்.

அத இங்க வச்சிருந்தா யாராவது கண்டுபிடிச்சிடு வாங்களோன்னு பயந்துகிட்டும்..... இங்க அத முதலீடு பண்ண முடியாததாலையும், ஏன்னா அது திருட் டுப்பணம்கிறதனால வெளிநாட்டு பாங்குகள்ல போட்டு வச்சிருக்காங்க. அதுக்கு வட்டியும் கிடைக் கும்.

சுவிட்சர்லாந்து பாங்குகள்லதான் இப்படிப்பணம் போட்டிருப்பாங்க. அவங்க எவ்வளவு பணம் போட்டிருக்காங்க, யாரு போட்டிருக்காங்க என்ற விபரத்த யாருக்கும் சொல்ல மாட்டாங்க. இன்னும் சொல்லப்போனா அக்கவுண்ட் நம்பர் கூட ரகசியமா இருக்கும். அதையும் கீச்செயின்லையோ அல்லது அந்த எதாவது சாதாரணமாக சந்தேகப்படாத பொருட்களிலி யோ அல்லது வாட்சியிலியோ கணக்கு நம்பர பொறிச்சு வச்சிருப்பாங்க.

சரி... சரி.. சஞ்சய் காந்தி விபத்தில் இறந்தவுடன் அந்த உடலை தேடுவதற்கு முன்னால் அவர் கைகடிகாரத்தை அவசரஅவசரமாக தேடி எடுத்ததாக அப்போது வந்த செய்திகளை இப்போது நினைச்சுப்பாருங்க. சரி... சரி.. அத விடுங்க. இப்பெல்லாம் உலக நெருக்கடி முற்றிட்டதால சுவிஸ் பாங்க் கணக்க எல்லா நாடுகளும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இடதுசாரிங்க குறிப்பாக சிபி எம், நாங்க ஆட்சிக்கு வந்தா சுவிஸ் பாங்க் பணத்த கணக்கு கேட்போம்னு சொல்லியிருக்காங்க. அது இருக்கட்டும், எவ்வளவு பணம் இருக்காம்?

1.4 ட்ரிலியன் டாலர் என்கிறார்கள். அதாவது 1000ஓ1000ஓ1000ஓ1000..... அதாவது 140000000 0000ஓ50 அதாவது 70 லட் சம் கோடி ரூபாய். ஒரு கோடி ரூபாயை அடுக்கி வைக்க ஒரு சூட்கேஸ் வேண்டும். 70 லட்சம் அல்ல... ஒரு கோடி அல்ல... 70 லட்சம் கோடி சூட் கேஸ் தேவை... அடுக்கி வைத்தால் அம்மாடியோவ்! இந்தியாவின் ஓராண்டு ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பைவிட கால் பங்கு அதிகம். இது வெளிய தெரிஞ்ச கணக்கு. உண்மை கணக்கு வயித்த கலக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பணம் எங்கே இருக்கு என்று கேள்வி கேட்கும் பொருளாதார புலிகளுக்கு இடதுசாரிகள் சுட்டிக்காட்டும் இடம் இதுதான். எடுப்பதற்கு தேவை அரசியல் உறுதி. அது இடதுசாரிகளிடம் மட்டுமே உண்டு. கருப்புப் பணம் என்கிறார்களே அப்படின்னா என்ன? பணம் கருப்பா இருக்குமா? அல்லது செல்லாத நோட்டா? அப்படி ஒண்ணும் இல் லை. அரசாங்கத்துக்கு தெரியாம கணக்குல காட்டாம, வரி கட்டாம, திருட்டுத்தனமா ஒழிச்சி வச்சிருக்கிற பணம். அதாவது நேர்மையாக சம்பாதிக்காம, குறுக்கு வழியில திருட்டு வழியில லஞ்ச வழியில முறைகேடாக கொள்ளை யடிச்ச பணமுன்னு அர்த் தம்.

அத இங்க வச்சிருந்தா யாராவது கண்டுபிடிச்சிடு வாங்களோன்னு பயந்துகிட்டும்..... இங்க அத முதலீடு பண்ண முடியாததாலையும், ஏன்னா அது திருட் டுப்பணம்கிறதனால வெளிநாட்டு பாங்குகள்ல போட்டு வச்சிருக்காங்க. அதுக்கு வட்டியும் கிடைக் கும்.

சுவிட்சர்லாந்து பாங்குகள்லதான் இப்படிப்பணம் போட்டிருப்பாங்க. அவங்க எவ்வளவு பணம் போட்டிருக்காங்க, யாரு போட்டிருக்காங்க என்ற விபரத்த யாருக்கும் சொல்ல மாட்டாங்க. இன்னும் சொல்லப்போனா அக்கவுண்ட் நம்பர் கூட ரகசியமா இருக்கும். அதையும் கீச்செயின்லையோ அல்லது அந்த எதாவது சாதாரணமாக சந்தேகப்படாத பொருட்களிலி யோ அல்லது வாட்சியிலியோ கணக்கு நம்பர பொறிச்சு வச்சிருப்பாங்க.

சரி... சரி.. சஞ்சய் காந்தி விபத்தில் இறந்தவுடன் அந்த உடலை தேடுவதற்கு முன்னால் அவர் கைகடிகாரத்தை அவசரஅவசரமாக தேடி எடுத்ததாக அப்போது வந்த செய்திகளை இப்போது நினைச்சுப்பாருங்க. சரி... சரி.. அத விடுங்க. இப்பெல்லாம் உலக நெருக்கடி முற்றிட்டதால சுவிஸ் பாங்க் கணக்க எல்லா நாடுகளும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இடதுசாரிங்க குறிப்பாக சிபி எம், நாங்க ஆட்சிக்கு வந்தா சுவிஸ் பாங்க் பணத்த கணக்கு கேட்போம்னு சொல்லியிருக்காங்க. அது இருக்கட்டும், எவ்வளவு பணம் இருக்காம்?

1.4 ட்ரிலியன் டாலர் என்கிறார்கள். அதாவது 1000ஓ1000ஓ1000ஓ1000..... அதாவது 140000000 0000ஓ50 அதாவது 70 லட் சம் கோடி ரூபாய். ஒரு கோடி ரூபாயை அடுக்கி வைக்க ஒரு சூட்கேஸ் வேண்டும். 70 லட்சம் அல்ல... ஒரு கோடி அல்ல... 70 லட்சம் கோடி சூட் கேஸ் தேவை... அடுக்கி வைத்தால் அம்மாடியோவ்! இந்தியாவின் ஓராண்டு ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பைவிட கால் பங்கு அதிகம். இது வெளிய தெரிஞ்ச கணக்கு. உண்மை கணக்கு வயித்த கலக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பணம் எங்கே இருக்கு என்று கேள்வி கேட்கும் பொருளாதார புலிகளுக்கு இடதுசாரிகள் சுட்டிக்காட்டும் இடம் இதுதான். எடுப்பதற்கு தேவை அரசியல் உறுதி. அது இடதுசாரிகளிடம் மட்டுமே உண்டு.

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

இந்தியா நல்லா இருந்தா என்ன...நாசமாய் போனால் என்ன?
தமிழனுக்கு ஆதரவு கொடுக்காத காங்கிரசை ஈமகிரியை செய்வோம்!

jchat சொன்னது…

நீங்களே ரிப்பீட்டா...