வியாழன், 9 ஏப்ரல், 2009

எங்கே செல்கிறது இந்தியா?


பிரகாஷ்காரத்

சுவிஸ் வங்கிகளிலும் இதர ரகசிய கணக்குகளிலும் முதலீடு செய்து வைத் துள்ள பெரும் தொகையை மீட்டு கொண் டுவர மத்திய அரசு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசிடம் வலியுறுத்தி வருகிறது. தேசத்திலிருந்து கடத்திச் சென்ற பணத்திற்கு சரியான கணக்கு இல்லையென்றாலும் இந்தியர்களின் இவ்வாறான முதலீடு நூற்றுக்கணக்கான கோடி டாலர் இருக்கும்.

வரி ஏய்ப்போர் இதுவரை சுவிட்சர் லாந்திலும், கேனரி தீவுகளிலும் அமைந் துள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் நிதி பற்றிய விபரங்கள் தெரிவது இயலாத விஷ யமாகவே இருந்தது. வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து வளர்ச்சி பெற்ற நாடு களுக்கு கொள்ளையடித்து கொண்டு செல்ல இவ்வாறான வரி ஏய்ப்புகளை ஊக்கப்படுத்தி வந்தன. ஏழ்மையான நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் ஊழல் பேர்வழிகளான ஆட்சியாளர் களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் செல்வந்தர்களுக்கும், அவர்கள் கொள் ளையடிக்கும் சொத்தினை உலகத்தில் பல்வேறு ரகசிய கணக்குகளில் முதலீடு செய்ய ஊக்கமளித்தனர்.

ஆனால்,உலக பொருளாதார நெருக் கடிகளும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற் பட்ட பின்பு, அமெரிக்காவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும் நிதி வளங்களுக்காக அலை யும் நிலை ஏற்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்து ரகசிய கணக்குகளில் முதலீடு செய்துள்ள தங்கள் நாட்டு பிரஜைகளிடம் அந்த ஒட்டுமொத்த தொகைகளையும் திருப்பி தங்களது நாட்டிற்கு கொண்டுவர கட்டாயப்படுத்தி வருகின்றன. பொருளா தார நெருக்கடி ஏற்பட்ட பின்பு முறை கேடான வழியில் கடத்தப்பட்ட முழுத் தொகைகளையும் திருப்பி கொண்டுவர வேண்டுமென்ற நிலையினை இந்த அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இரண்டு நிகழ்வுகளிலிருந்து மாறி விட்ட இந்த மனோநிலையை தெரிந்து கொள்ளலாம். மிகப்பெரிய சுவிஸ் வங்கி யான யுபிஎஸ்-லிருந்து அங்கு அமெரிக் கர்கள் முதலீடு செய்துள்ள ரகசிய முதலீ டுகளின் விபரங்களை பெற்றுக்கொள் வதில் அமெரிக்க அரசு வெற்றிபெற்றுவிட் டது. ரகசியங்களை வெளிப்படுத்த நிர் பந்திக்கப்பட்ட யுபிஎஸ் வங்கி, தங்களது தவறினையும் ஒப்புக்கொண்டது. கள்ளப் பணத்தை பாதுகாத்ததற்கு பெரும் தொகையை தண்டனை என்ற முறை யில் செலுத்தியும்விட்டது. சுவிஸ் வங்கி களின் ரகசிய ஏற்பாடுகளில் வந்த முதல் வெடிப்பு இதுதான்.

ஐரோப்பிய நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள், தங்கள் நாட்டு வரி ஏய்ப் பாளர்கள் நடத்தியிருக்கும் ரகசிய முத லீடுகளின் கணக்குகளை வெளிப்படுத்த வேண்டுமென்று சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுக்கொண்டதுதான் இரண்டாவது பெரும் நிகழ்வு. சுவிஸ் அரசு, இதுபற்றி பரிசீலிக்கலாம் என்று ஒப்புக் கொண் டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், நமது நாட்டி லிருந்து முறைகேடாக கடத்தப்பட்ட பணத்தை மீட்டுக்கொண்டுவருவதற் கான நடவடிக்கைகளின் முதல் நடவடிக் கையாக, இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றிய முழு விபரங்களையும் திரட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த பிப்ரவரியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு, மத்திய அரசிடம் வலியு றுத்தியது. சிபிஎம்-ன் தேர்தல் அறிக் கையிலும் இதுபற்றி தெரிவிக்கிறது- கறுப்புப் பணத்தை மீட்டெடுக்க நட வடிக்கைகளை துவங்கிடுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

நமது தேசத்திலிருந்து கடத்திச் செல் லப்பட்ட என்று கணக்கில் உட்படுத்தப் படாத சொத்துக்களை மீட்டுக்கொண்டு வர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலுவாக சொல்ல வேண்டியுள்ளது. 1980 களில் போபர்ஸ் விவாதம் உருவான போது, நாடு சுவிஸ் வங்கிகளில் ‘லோட் டஸ்’, ‘டுளிச்’, “மோண்டு பிளாங்க்” போன்ற ரகசிய கணக்குகள் பற்றி கேட்டது.

இந்தியாவிலிருந்துள்ள மூலதன முதலீடுகளுக்கு கட்டுப்பாடு இருந்த தால் 1990களின் ஆரம்பம்வரை வெளி நாடுகளிலிருந்த பணத்தின் பெரும் பகுதி யும் கள்ளத்தனமாக கடத்தப்பட்டது. வெளிநாடு ஒப்பந்தங்களின் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கிடைத்த ஊழல் பணம், பெரும் வர்த்த கர்கள் மற்றும் நிறுவனங்களின் கறுப்புப் பணம் மற்றும் முறைகேடான வழிகளில் பெற்ற சேமிப்புகள் போன்றவை வெளி நாடுகளிலுள்ள ரகசிய வங்கி கணக்கு களுக்கு சென்றது.

தாராளமயத்திற்கும் “மொரீஷியஸ் ரூட்” போன்ற வரியில்லா பாதைகள் நிறுவப் பட்டதற்கும் பின்பு வெளிநாட்டு மூலதன கசிவு மிகமிக அதிகரித்தது.

இரட்டை வரி தவிர்த்தல் ஒப்பந்தப் படியான மொரீஷியஸ் பாதைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும்.

வரி ஏய்ப்பாளர்களாக உள்ள முக்கிய மானவர்கள் தொடர்பான பட்டியலை மத்திய அரசு தயாரிக்க வேண்டுமென்றும், சுவிஸ் வங்கிகளோடும் முதலீட்டாளர் களின் விபரங்களை வெளிப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும்.

இதற்கு மன்மோகன் சிங் அரசு முன் வருமா என்பது தெளிவாக தெரியவில் லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லட்சக் கணக்கான டாலர் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. ராணுவ உடன்பாடு கள் மூலம் சேமித்த ஊழல் பணமும் கமிஷன்களும்தான் இதில் முக்கியமான தாக உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இஸ்ரேல் ஏவுகணை ஒப் பந்தத்தில் 600 கோடி ரூபாய் இடைநிலை யாளர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்ட தாக செய்திகள் வந்துள்ளன. பங்குச் சந்தையின் ஏற்ற நிலைக்கு தகுந்தவாறு கொள்ளை இலாபம் பெறும் பெரும் செல்வந்தர்கள், இந்த பணம் மொரீஷிய சில் கம்பெனிகள் பதிவு செய்து அங்கு மாற்றவும் இந்தியாவில் வரி கட்டுவதி லிருந்து விலக்குபெறவும் செய்கின்றனர்.

இவ்வாறான நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி-சுகாதார விஷயங்களுக்கும் ஒதுக்கீடு செய்தால் மக்கள் வாழ்க்கைநிலையை உயர்த்திட முடியும். பெரும் வர்த்தகர்களும் ஊழல் பேர்வழி களான அரசியல்வாதிகளும் அதிகாரி களுக்கும் இடையேயான இந்த நேர்மை யற்ற உறவிற்கு எதிராக செயல்படஅரசு தயாராக இல்லை.

தவறான முறையில் சேமித்து கடத் திய பெரும் தொகையிலான சொத்தினை மீட்டு கொண்டுவருவதற்காக இந்த கோரிக்கையை முன்வைத்து பெரும் மக் கள் எழுச்சிஇயக்கம் வளர்ந்து வர வேண்டும்.

தமிழாக்கம்: பொன்மனை வல்சகுமார்.

கருத்துகள் இல்லை: