செவ்வாய், 28 ஏப்ரல், 2009

பணபலத்தை முறியடித்து வெற்றிபெறுவேன்!

கோவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

இரண்டாவது முறையாக கோவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். உங்கள் வெற் றிக்கு சாதகமான அம்சங்களாக எவற் றைக் கருதுகிறீர்கள்? 


இந்த தேர்தலில் எனது வெற்றிக்கு அஇ அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்ட ணிக் கட்சிகளின் பலம் பிரதானமான பங்க ளிப்பைச் செய்யும்.கூட்டணிக் கட்சியினர் அல்லும், பகலும் அயராது உழைத்து வருகின் றனர். அவர்களின் உழைப்பு வெற்றியை ஈட்டித் தரும். 
இன்று மத்திய-மாநில அரசுகளின் மோச மான செயல்பாடுகளின் காரணமாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியும், கோபமும் எங்கள் அணிக்கு சாதகமான அம்சமாகும்.

கடும் மின்வெட்டு , அதனால் வேலை யிழப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ் நாட்டிலும், குறிப்பாக, தொழில் நகரமான கோவை மாவட்டம் முழுவதும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது வரையில் தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர் பிரச் சனை, ஏழை மக்களுக்கான குடிமனைப் பட்டா பிரச்சனை ஆகியவை பழைய நிலையி லேயே தீர்வு காணப்படாமல் தொடர்வது போன்றவை மக்கள் எண்ண ஒட்டத்தை மாற்றியுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படும் துயரத்துக்கு முடிவுகட்ட ஆட்சியாளர்கள் தவறியுள்ளதும் இங்கு மக் கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உங்களை எதிர்க்கும் திமுக - காங் கிரஸ் அணி வேட்பாளர் பண பலம் படைத்தவர். தேர்தல் களத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாகவே சில கோடிகளை இறக்கி விட்டிருப்பதாகப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிடு கின்றன. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் ?

காங்கிரஸ் வேட்பாளரின் பண பலம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் 

பணபலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது. கோவை மக்களிடையே பாரம்பரியமாக இடதுசாரிக் கொள்கைகள் மீது எப்போதுமே ஈர்ப்பு உண்டு. கோவை ஒன்றும் திருமங்கலமல்ல. இத் தொகுதியில் பணபலத்தை மக்கள் சக்தி நிச்சயம் முறியடிக்கும்.

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் மக் களுக்கான போராட்டக் களத்தில் கம்யூ 

னிஸ்ட் இயக்கம் 63 தியாகிகளை களப்பலி கொடுத்துள்ளது. அதன் காரணமாக எழுந் துள்ள மக்கள் ஆதரவை , வாக்கு பலத்தை, பணபலத்தால் ஒரு போதும் திசைதிருப்ப முடியாது.ஜனநாயக உணர்வு மிக்க கோவை மக்கள் பணபலத்தை முறியடித்து. மார்க்சிஸ்ட் கட்சிக்கே வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள்.

 கோவையில் ஏற்கனவே இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு செயல்பட்டிருக்கின் றனர். அவர்களின் செயல்பாடுகள்,தனைகள் உங்கள் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறீர்களா? 


பார்வதி கிருஷ்ணன், கே.ரமணி, பால தண்டாயுதம் மற்றும் கே.சுப்பாராயன் உள் ளிட்ட இடதுசாரிகள் ஏற்கனவே கோவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மத் தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைய வேண்டும் என்ற அறைகூவல் மக்களிடையே பெற்றுவரும் வரவேற்பும் எனது வெற்றிக்குப் படிக்கல்லாக அமையும். 

ஆரம்பக் கட்டத்தில் தனியார் பஞ்சாலை கள் நலிவடைந்து மூடப்பட்ட போது அவற் றை என்டிசி மூலம் ஏற்று நடத்தச் செய்ததிலி ருந்து, மில் முதலாளிகளின் அமைப்பான சைமாவிற்கு எதிரான தொழிலாளர் போராட் டங்களை வெற்றிக்கு வழி நடத்தியது வரை, இடதுசாரி எம்.பி.க்களின் பணி மகத்தானது. ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள்,சிறுவாணி குடிநீர்த் திட்டம், கோவை மாநகராட்சி, வேளாண் பல்கலைக் கழகம் என்று எண்ணற்ற பிரச் சனைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் இட துசாரி எம்.பி.க்கள். கோவையில் இன்ஜினி யரிங் தொழில் மேம்பாட்டுக்காக இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியால் இந்தியா விலேயே முதன்முறையாக பம்ப் கிளஸ்டர் அமைக்கப் பட்டு சிறப்பாகச் செயல்படுகிறது. அதே போல் கோவை மண்டலம் முழுவதும் பயன் பெறும் வகையில் பாஸ்போர்ட் மண்டல அலு வலகம் அமைக்கப்பட்டுள்ளது. 
பொருளாதார நெருக்கடி, ஆலை மூடல் பிரச்சனைகளுக்கு மத்தியில், இடதுசாரி களின் தொடர் முயற்சியால் என்டிசி மில்கள் தொடர்ந்து இயங்குகின்றன. அவற்றிலும் சிஐடியு உள்ளிட்ட இடதுசாரித் தொழிற்சங் கங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாகத் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. இவர் களின் வரிசையில் ஒருவனாகப் பணியாற் றும் வாய்ப்பை எனக்குக் கோவை வாக்காளர் கள் அளித்தால், மக்கள் நலப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்வேன்.


இந்த மக்களவைத் தொகுதி உள்ளிட்ட கோவை மாவட்ட மக்களின் எந்த பிரச் சனைகளுக்கு முன்னுரிமை கொடுத் துப் பணியாற்றுவீர்கள்?

சிறு மற்றும் குறுந்தொழில்கள் வளர்ச்சிக் கான வங்கிக் கடன் உள்ளிட்ட வசதிகள்செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பேன். அடுத்து சிறு-குறுந் தொழில்களின் உயிர்நாடி யான மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை வாய்ப்பு களைப் பெருக்கவும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், விவசாய விளை பொருட் களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். 


அனுபவம் மிக்க எம்.பி வேண்டுமா? அனுபவமில்லாத எம்.பி. வேண்டுமா?என்று ஐந்து முறை எம்.பி. யாக இருந் துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கேள்வி கேட்டிருக்கிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?


அனுபவமில்லாத, முதன் முறையாகப் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சி வேட்பா ளர்களுக்கும் இது பொருந்துமா? ராகுல் காந்தி எந்த முன் அனுபவத்தோடு அமேதி தொகுதி யில் எம்.பி. ஆனார்?. அரசியலுக்கே வராமல் விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தி எந்த முன் அனுபவத்தோடு பிரதமராக 

ஆனார்?. 1967ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மந்திரிகளான பலருக்கு முதல்தடவை யாக சட்டமன்றத்தில் இடம் கிடைத்தது. முன் அனுபவம் இல்லாத அவர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்கிறாரா பிரபு?. நான் கட்சியின் முழுநேர ஊழியராக 30 ஆண்டு களுக்கு மேலாக மக்கள் பணியாற்றியிருக் கிறேன். இந்த அனுபவம் எனக்கு நிறையக் கற்று தந்திருக்கிறது. இது எனக்குக் கை கொடுக்கும். இவரைப் ( பிரபு ) பற்றிய தொகுதி மக்களுடைய அனுபவம் என்ன என்று நீல கிரி மலையடிவாரத்தில் இருக்கிற மேட்டுப் பாளையம் மக்களிடம் சென்று கேட்டாலே தெரியும். 


 கோவை ஒரு காலத்தில் தென்னிந்தி யாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்று பஞ்சாலைத் தொழில் சிறந்த மாவட்டமாக விளங்கியது. இன்ஜினிய ரிங் தொழிலிலும் ஏற்றுமதி வர்த்தகத் தில் சாதனை படைத்த நகரமாக கோவை இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று பொருளாதார நெருக்கடி காரண மாக இவையாவும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதற்கு நீங்கள் என்ன செய்யக் கருதுகிறீர்கள்?


உலகமய நாசகர பொருளாதாரக் கொள் கையால் இன்று உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது இன்று இன்ஜினியரிங் தொழில் உட்பட பல் வேறு தொழில்களையும் கடுமையாக பாதித் துள்ளது. குறிப்பாக டெக்ஸ்டைல் துறை மிகப்பெரிய அடி வாங்கியிருக்கிறது. இந்த 

பாதிப்புகளில் இருந்து தொழில்களை மீட்டிட ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்து வோம். அதாவது ஏற்றுமதிக்கு மானியம் கொடுத்து, ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, இதர நாடுகளுக்கு இணையாக போட்டியாக வளர்வதற்கான உதவிகளைச் செய்ய முயற்சி எடுப்பேன். சிறிய நடுத்தர தொழில்கள் இதற்கான முயற் சியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளது, ஆகவே இதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். 

ஏற்றுமதியை ஊக்கப் படுத்த, ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தனி யாக நிதி ஒதுக்கிச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவேன். 

 உங்கள் அணியின் தேர்தல் பிரச்சார வியூகம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது?

நாங்கள் அரசியலில் மக்கள் பிரச்சனை களைத்தான் முன்வைத்து வருகிறோம். எங்களு டைய தேர்தல் அறிக்கையே இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களின் 

பிரச்சனை களையும் உள்ளடக்கி இருக்கிறது. இதனை மக்களிடம் விரிவாக கொண்டு செல்வோம். பேச்சாளர்கள் பயிற்சி முகாம் நடத்தி தெருமு னைப் பிரச்சாரம், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது என்ற முறையில்தான் எங்களது பிரச்சாரம் இருக்கும். கலைக்குழுக்கள், நாட கக்குழுக்கள் எங்களுடைய முக்கிய பிரச்சார வடிவங்கள். இத்துடன், அந்தந்தப் பகுதி மக்கள் பிரச்சனைகளில் எங்களின் தலை யீடுகளை எடுத்துச் சொல்வோம்.

அஇஅதிமுக பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.ரா.வரதராசன், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இத்துடன் அஇஅதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி களின்உணர்வு பூர்வமான ஈடுபாடும், உழைப்பும் எனது வெற்றிக்கு வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை: