சனி, 2 மே, 2009

உழைப்பவர் உரிமை காக்கும் அரசை அமைத்திடுவோம்!

-என்.வரதராஜன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

உலகம் முழுவதும் இருக்கும் கோடானுகோடி உழைப்பாளர்கள் உவந்து கொண்டாடும் உரிமைத்திருநாள் மே தினம் ஆகும். ஜாதி, மத, இன, மொழி, தேச வேறுபாடின்றி ஐந்து கண்டங்களிலும் பரவிக்கிடக்கும் தொழிலாளர்கள் ஒன்று பட்டு குரல் எழுப்பும் உரிமை தினம் இது.

மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வுகாண முடியாது. சோசலிசத்தால் மட்டுமே மனிதகுலம் சுபிட்சம் பெறும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துவங்கி இன்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உலுக்கிவரும் பொருளாதார நெருக்கடி, மார்க்சியத்தின் தேவையை மீண்டும் அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது. முதலாளித்துவ மூலதனத்தால் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என் பதும், மாமேதை மார்க்சின் மூலதன நூலே இந்த நெருக்கடிக்கு அருமருந்து என்ப தும், உலகம் முழுவதும் உணரப் படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மே தினம் கூடுதல் முக்கியத் துவம் பெறுகிறது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 15வது மக்களவையை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து மத்தியில் அமையப்போவது உழைப்பவர் உரிமையை மதிக்கும் அரசா? அல்லது காலில் போட்டு மிதிக்கும் அரசா? என்ற கேள்வி தேர்தல் களத்தில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத, மதச்சார்பற்ற மாற்று அரசு மத்தியில் அமைவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை உறுதி செய்ய வேண்டிய மகத்தான பொறுப்பு இந்திய, தமிழக உழைக்கும் மக்களுக்கு உண்டு.

மத்தியில் மதவெறி அரசு மீண்டும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தன. மக்கள் நலன் சார்ந்த சில திட்டங்களை இந்த அரசு நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் நிர் பந்தித்தன. பொதுத்துறை நிறுவனங் களை பேரழிவிலிருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத் திலும் இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடின. இதனால்தான் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பெருமளவு குறைந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

எனினும், குறைந்தபட்ச செயல்திட் டத்திற்கு மாறாக, சுயேட்சையான அயல் துறை கொள்கையை கைகழுவும் வகை யில் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்ட மத்திய அரசு, ஏகாதிபத்தியத்தின் இளைய கூட் டாளியாக நமது நாட்டை மாற்றும் வகை யில் கேந்திரக் கூட்டு அமைத்துக் கொண்டது. எனவேதான் இடதுசாரிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக் கிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆயுள்காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக் கவும், தொழிலாளர்களின் பென்சன், பி.எப். நிதியை தனியாருக்கு தாரைவார்க் கவும் மன்மோகன் சிங் அரசு முடிவு செய் தது. இது தொழிலாளர்களுக்கு எதிரான அப்பட்டமான துரோக முயற்சி யாகும்.

சில்லரை வர்த்தகத்தை உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு திறந் துவிட்டதன் மூலம் லட்சக்கணக்கான சிறுவியாபாரிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தியது மன்மோகன் சிங் அரசு. முன்பேர வர்த்தகம் எனும் மோசடி வர்த்தகத்தால் அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையும் கடுமை யாக உயர்ந்து வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 38 டாலர் அளவுக்கு குறைந்த போதும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை போதிய அளவு குறைக்க மறுக்கும் மத்திய அரசு, ஆகாய விமானத் திற்கு பயன்படுத்தப்படும் உயர்ரக பெட் ரோல் விலையை மட்டும் பலமடங்கு பல முறை குறைத்துள்ளது.

தனியார்மய பொருளாதாரக் கொள்கை யை பொறுத்தவரை பாஜகவுக்கும் காங் கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை . இரண்டு கட்சிகளுமே பெருமுதலாளி களுக்கு ஆதரவான கட்சிகள்தான். இரண்டுமே தொழிலாளர் வர்க்க விரோதக் கூட்டம்தான். எனவேதான் இந்த இரு கூட்டணியையும் ஒருசேர முறியடிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் முதன் முதலாக முழக்கம் எழுப்பினர். இந்த இரண்டு அணிகளுக்கும் மாற்றாக வலு வான மாற்று அணி தேர்தல் களத்தில் கம்பீரமாக நிற்கிறது. இந்த அணி வெற்றி வாகை சூடும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் காங்கிரசின் கூட்டாளி யாக உள்ள திமுக அரசும் பல்வேறு ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மின்வெட்டால் தமிழகத்தின் அனைத்துப்பகுதி மக்களின் வாழ்க்கை யும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு தொழில்கள், விவசாயம் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் பாய்கிறது. ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. இதற்கு மாநில தொழிலாளர் துறையும், காவல் துறையும் துணை நிற்கிறது. தொழிற் சங்கம் அமைக்கப்போராடும் தொழிலா ளர்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பட்டா கேட்டு பரித வித்து நிற்கும் மக்கள் பல்லாயிரக் கணக்கானோர். ஆனால் திமுக அரசு உச்சவரம்பு சட்டத்தை திருத்தி மிகப் பெரிய கல்விநிறுவனங்களும் அறக் கட்டளைகளும் வகைதொகையின்றி நிலங்களை வளைத்துப்போட வகை செய்கிறது.

41 சிறப்புப் பொருளாதார மண்டலங் களுக்கு மாநில அரசால் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக்கூட மாநில அரசு மக்களுக்கு தெரிவிக்கமறுக்கிறது. சட்டமன்றத்தில் தொழில்துறை ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக் கையை திமுக அரசு ஏற்க மறுக்கிறது. கடற்கரை மேலாண்மை திட்டம் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படுகிறது.

சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதலை கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து நீதிபதிகளையும் வழக்கறிஞர் களையும் கொடூரமாக தாக்கியது. உள் ளாட்சிமன்ற தேர்தலில் வரலாறு காணாத வன்முறை, கூட்டுறவுத் தேர் தலையே நடத்த முடியாத நிலை என நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்கு திமுக அரசு தொடர்ந்து இலக்காகி வருகிறது.

குடும்பத்தகராறில் தினகரன் அலு வலகத்தை சேர்ந்த மூன்று அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. தற்போது மதுரை உட்பட பல்வேறு தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் ஆளும்கட்சியின ரால் அப்பட்டமாக மீறப்படுகிறது. காங் கிரஸ் பாதையில் திமுக அரசும் தொழி லாளர் விரோத பாதையிலேயே நடை போடுகிறது.

ஆள்பவர்களுக்கு பாடம் புகட்ட, மத்தியில் மாற்று அரசு அமைய தொழி லாளர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்புதான் மே 13ம் தேதியாகும். தொழி லாளர் வர்க்கப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதியை நிலைநிறுத்த இந்த மே நன் னாளில் உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை: