வெள்ளி, 17 ஏப்ரல், 2009

வெட்கக்கேடான திமுக அரசு நிர்வாகம்

அராஜகம் தோற்கும்-அரசியலே வெல்லும்! -பி.சம்பத்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி! தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்து டன் இங்கு நடைபெறும் தேர்தல் பணி களைக் கவனித்துவரும் தொகுதியாக மாறியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் பாரம்பரியமாகப் போட்டியிட்டு பல முறை வெற்றிபெற்ற தொகுதி இது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொ. மோகன் 3வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மீண்டும் வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அஇஅதி முக, சிபிஐ, மதிமுக, பாமக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.

மாற்றுப்பாதையை முன்னிறுத்தி...

மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை யும், மதவெறி பிடித்த பாஜகவையும் வீழ்த்தி மாற்றுக் கொள்கைகளுடன் மதச்சார்பற்ற மாற்று ஆட்சியை அமைக்க முயலும் இடதுசாரிகளின் தேர்தல் வியூகம் நாடு தழுவிய அளவில் மதச் சார்பற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவை யும், மக்கள் மத்தியில் மகத்தான எழுச்சி யையும் உருவாக்கி வருவதைக் காண்கி றோம். தமிழ்நாட்டில் அதன் தாக்கமே அஇஅதிமுகவை முதன்மையானதாகக் கொண்டு உருவாகியுள்ள இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அணி வகுப்பு. தமிழக மக்கள் மத்தியில் ஜன நாயக ரீதியான பேரெழுச்சியை இந்த அணிவகுப்பு ஏற்படுத்தியுள்ளது என்ப தை எவரும் மறுக்க முடியாது. மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களத்தில் இதன் பிரதிபலிப்பை வலுவாக காண முடிகிறது.

காங்கிரஸ், திமுகவை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், குறைந்தபட்ச செயல்திட்டத்தை செயல்படுத்தத் தவறி கோடானுகோடி மக்களை வறுமைப் படுகுழியிலும், பெருகிவரும் வேலையில் லாத் திண்டாட்டத்திலும் ஆட்படுத்தி யதை எதிர்த்தும், அதோடு தேசத்தின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் பறிகொடுத்து அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கிய அணுசக்தி ஒப் பந்தத்தை எதிர்த்தும் விரிவான பிரச் சாரம் துவங்கியுள்ளது. கூடவே தமிழகத் தில் திமுக அரசின் கையாலாகாத்தனத் தையும், மின்வெட்டு காரணமாக தொழில் கள் நலிவடைந்து வருவதையும், ஸ்பெக்ட் ரம் புகழ் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் துவங்கி தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் கமிஷன், ஊழல் வரை யிலும் மக்களிடையே மார்க்சிஸ்ட் கட்சி யும் தோழமைக் கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழகம் முழுவதும் திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக் கையும் திமுகவினரின் அராஜகப் போக் கையும் மக்களிடையே அம்பலப்படுத்தும்போது பெரும் வரவேற்பை காணமுடிகிறது.

தயாரிப்புப் பணிகள்

மத்திய காங்கிரஸ்-திமுக ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசையும், தமிழக திமுக அரசையும் அம்பலப்படுத்தும் வகையிலும் மாற்றுக் கொள்கைகளை விரிவாக எடுத்துச் செல்வதை மேலும் பலப்படுத்தும் வகையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல லட்சக் கணக்கான அரசியல் துண்டுபிரசுரங் களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள் பற்றிய துண்டு பிரசுரங்களும் மக்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் உள்ளன. ஏப்ரல் 20ம் தேதி முதல் பல் வேறு கலைக்குழுக்கள் மதுரை தொகுதி யில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. தோழர்கள் பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார் உள் பட அகில இந்திய தலைவர்களும், தோழர் என்.வரதராஜன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் இத்தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தர உள்ளனர்.

ஏப்ரல் 23ம் நாள் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்போடு பிரம் மாண்டமான மாநாடு போல நடைபெற ஏற்பாடுகள் நடை பெறுகின்றன.

கடலலையாக செயல்வீரர்கள்

ஏப்ரல் 12ம் நாள் மதுரையில் நடை பெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கடல் மடை திறந்த வெள்ளம்போல் பல்லாயிரக் கணக்கான செயல்வீரர்கள் பங்கேற்றனர். மதுரை தொகுதியில் வார்டு வாரியாக நடைபெற்றுவரும் ஊழியர் கூட்டங்களும் மாநாடு போல எழுச்சியாக நடைபெற்று வருகின்றன. ‘இப்படை தோற்கின் எப் படை வெல்லும்’ என்ற ஆரவாரமே எல்லா ஊழியர் கூட்டங்களிலும் காண முடிகிறது. ஊழியர் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பணிக்குழுக்கள்

நாடாளுமன்ற தொகுதிக்குழு, சட்ட மன்ற தொகுதிக்குழு, வார்டு வாரியான குழுக்கள், வாக்குச்சாவடி வாரியான குழுக்கள் என வலைப்பின்னல் போன்ற ஸ்தாபன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. தோழமைக் கட்சி ஊழியர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சி வேட் பாளர் பொ.மோகன் வெற்றிக்காக பம்பரம் போல சுறுசுறுப்புடனும் எழுச்சியுடனும் பணியாற்றி வருகிறார்கள். மதுரைத் தொகுதி மக்களிடையே மோகன் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்ற உணர்வு மேலோங்கத் துவங்கிவிட்டது.

அரசியல் திராணியற்ற திமுக

இவ்வாறு மதுரை தேர்தல் களம் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு சாதக மாக மாறிவரும் சூழலில் இதனை அரசி யல் ரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்ற திமுக தலைமை, வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளது. அரசியல் பிரச்சாரத்தில் வலு வாக களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர், திமுகவினரின் இத்தகைய அத்துமீறல் களையும் எதிர்கொண்டு பணியாற்றி வரு கின்றனர்.

திருமங்கலம் பாணியில் எப்படியா வது பணம் கொடுத்தும், வன்முறை மூலமும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கனவு காண்கிறது. பணம் கொடுப்பதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு கண்டு கதிகலங்கிப்போன திமுகவினர், மார்க்சிஸ்ட் கட்சி, அதிமுக, சிபிஐ, மதிமுக தோழர்களைத் தாக்குவது, சில திமுக தேர்தல் காரியாலயங்களுக்கு தாங்களே தீ வைத்துவிட்டு எதிரணியி னர் மீது பொய்வழக்கு போட்டு ஊழியர் களையும், பணிகளையும் முடக்குவது என்ற தரம் தாழ்ந்த பணியில் இறங்கி யுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன் மாறன் மீது புதனன்று இரவு திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள னர். ஒரு சட்டமன்ற உறுப்பினரையே தாக்கும் அளவுக்கு திமுகவினர் சென்றுள் ளது அராஜகத்தின் உச்சகட்டம் ஆகும்.

தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக் கும் வகையில் ஜெய்ஹிந்த்புரத்தில் மிசா பாண்டியன் மற்றும் அடியாட்கள் ரகளை யில் ஈடுபட்டு, தோழர்களை கத்தியால் குத்த முயன்றுள்ளார். போலீஸ் அதிகாரி கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதி முகவினர் மீது போலீசார் பொய் வழக்கு தொடுத்துள்ளனர். குதிரை கீழே தள் ளியது மட்டுமின்றி குழிபறித்த கதையாக உள்ளது.

வெட்கக்கேடான அரசு நிர்வாகம்

இதில் அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயல்பாடு வெட்கக்கேடான தாகும். மார்க்சிஸ்ட் கட்சியும், தோழமைக் கட்சிகளும் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகர காவல் துறை ஆணையாளரும் திமுகவினர் கொடுத்த பொய்ப்புகார்கள் மீது வரிந்து கட்டிக்கொண்டு எடுபிடிபோல நடவடிக் கை எடுத்து பொய் வழக்குகளை புனைந்து வருகின்றனர். இந்த மாவட்ட ஆட்சித்தலைவரும், மாநகர காவல்துறை ஆணையாளரும் தேர்தல் காலத்தில் பதவியில் நீடித்தால் தேர்தல் ஜனநாயகப் பூர்வமாகவும் நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பு இல்லை எனவும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றம் செய்து நேர்மையான அதிகாரி களை அப்பொறுப்புகளில் நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும்.

திமுகவினரின் இந்த அராஜகங் களைத் தாண்டி மக்கள் அரசியல் ரீதியாகச் சிந்தித்து மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மோகனை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

cpm behaved like this rowdism to peoples of nandhigram and singure... nowdays dmk play your's previos role thats alll

"murbagal seiyn birpagal vilayum"
"every action have an equal and opposite reacton"

விடுதலை சொன்னது…

அனானிக்கு
வன்முறையில் சிபிஎம் கட்சிக்கு என்றைக்கும் உடன்பாடு அல்ல .ஊடங்கள் எப்போதும் இடதுசாரிகட்சிகளுக்கு எதிரான கருத்துளை பரப்புவதில் உறுதியாக இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 250 மேற்பட்ட சிபிஎம் தோழர்கள் மமதா- நக்சல் திவிரவாதிகளால் படுகொலை செய்யது பற்றி உங்களுக்கு தெரியாது. கேரளாவில் 6 சிபிஎம் தோழர்கள் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதை பற்றி தங்களுக்கு தெரியாது.வன்முறையின் மீது சிபிஎம் கட்சிககு எந்த உறவும் இல்லை