வெள்ளி, 17 ஏப்ரல், 2009

புத்திரபாசம்- போகட்டும் விட்டு விடு!

மொட்டவிழும் அதிகாலை நேரம்

சிணுங்கியது செல்பேசி...


எப்போதும் மென்மையாய்ப் பேசும் ஒரு

மூத்த தோழர் கொதித்துப் பேசினார்

அன்று காலை முரசொலித்த கவிதை

அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டதைச்

சொல்லிச் சொல்லிக் குமுறினார்.“வருந்தாதீர்கள் தோழரே!

தோல்விப் பள்ளத்தாக்கில்

உருண்டு விழும்போது

பயத்தில் பிதற்றுகிறார்...

பாவம் பெரியவர்! விட்டுவிடுங்கள்!”

-என்று நான்

கூறிய சமாதானத்தால்

கொஞ்சமும் சமாதானமாகாமல்

தொடர்ந்தார் தோழர்:


“இல்லை தோழா இல்லை!

சேற்றை வாரி இறைப்போருக்கு

தக்க பதில் சொல்க!” என்றார்.“தோழரே! நானென்ன சொல்வது

அண்ணாவே அன்று பகர்ந்துள்ளார்;

‘மருமகள் மீதுள்ள கோபத்தில்

மல்லாக்கப் படுத்துக்கொண்டு

சாணிக் கரைசலை வாயில் ஊற்றிக்கொண்டு

வானத்தை நோக்கி காறி உமிழ்கிற

மதியிலியின் செயல் என்று’;

இதற்கும் மேல் என்ன சொல்ல?

அண்ணாவின் மோதிரக் கை

குட்டுக்குப் பின்னும் அவர்கள்

தரமிழந்து தடம்புரண்டு

அவதூறு மழை பொழிவாரெனில்-முன்பொரு நாள்

கவியரசு கண்ணதாசன்

எழுதிய ‘வனவாசம்’

‘நாத்திகம்’ பழைய ஏடுகள்

தேடி எடுக்கலாம்தான்!


‘அபூர்வ ராகங்கள்’,

‘தப்புத் தாளங்கள்’

சிலருக்கு சினிமா

சிலருக்கு வாழ்க்கை.

‘குட்டி உறவு தாய் பகை’

என்பதெல்லாம்

நினைவுக்கு வரத்தான் செய்யும்.

எனினும்,

அரசியல் பண்பாட்டின்

எல்லைகள் மீறுவது

நமக்குப் பழக்கமில்லையே!


தோல்வியில் பிதற்றுகிறார்

போகட்டும் விட்டுவிடுங்கள்.”

-கவிராயர் பொதிகையார்

கருத்துகள் இல்லை: