திங்கள், 25 மே, 2009

படிப்பினைகளை கற்று முன்னேறுவோம்

-பிரகாஷ் காரத்

நாடாளுமன்ற மக்களவைத் தேர் தல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை, காங் கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க, வழிவகுத்திருக்கிறது. காங் கிரஸ் கட்சி 205 இடங்களில் வென்றிருக் கிறது. அது தன்னுடைய கூட்டணிக் கட் சிகளுடன் சேர்ந்து 262 இடங்களைப் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது முன்பிருந்ததைவிட 61 இடங்களைக் கூடு தலாகப் பெற்று தன்னுடைய வலுவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஐ.மு. கூட்டணியில் அங்கம் வகித்த தன்னு டைய முன்னாள் சகாக்களின் ஆதரவு டன் காங்கிரஸ் கட்சியானது இம்முறை மிகவும் வசதியான முறையில் ஆட்சியை அமைத்திடவிருக்கிறது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இரண்டாவது முறை அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுக்கப்பட் டிருக்கிறார்கள். பாஜக 116 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது அவர்கள் பெற்றிருந்த எண்ணிக்கையைவிட 22 குறைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது முன்பு பெற்றிருந்த தைவிட 18 குறைவாகும். காங்கிரஸ் அல் லாத, பாஜக அல்லாத கட்சிகள் மொத்தத் தில் 78 இடங்களைக் கைப்பற்றியிருக் கின்றன.

தேர்தல் முடிவின் பொருள்

தேர்தல் முடிவின் பொருள் என்ன? இதனை எப்படிப் புரிந்துகொள்ள வேண் டும்? முதலாவதாக நாம் குறித்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை என்னவெ னில், நாட்டின் சில பகுதிகளில் காங்கி ரஸ் ஆதரவு மனோபாவம் இருந்தது என் பது உண்மை என்றபோதிலும், ஒட்டு மொத்த அளவில் நாடு முழுமையும் அவ் வாறிருந்ததாகக் கூறுவதற்கில்லை என் பதேயாகும். வாக்கு சதவீத அடிப்படை யில் பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சி யானது 2004இல் பெற்றதைவிட வெறும் 2 சதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற் றுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் தரப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படை யில், காங்கிரஸ் கட்சியானது 28.55 சத வீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2004ல் அதற்கு 26.53 சதவீதம் கிடைத்திருந்தது. காங்கிரசுக்கு கேரளம், ராஜஸ்தான் மாநி லங்களில் பெரும் வெற்றி கிடைத்திருக் கிறது. பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத் தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநி லங்களில் தன் நிலையினை மேம்படுத் திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரிசா, ஜார்கண்ட், அசாம், குஜராத், சத் தீஸ்கார், கர்நாடகா போன்ற மாநிலங் களில் காங்கிரஸ் தன்னுடைய தளத்தை இழந்துள்ள நிலையுடன் ஒட்டுமொத்த மாகப் பரிசீலனை செய்து பார்க்கையில், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்திந்திய அளவில் பெரிய அலை வீசியதாகக் கூறு வதற்கில்லை. இம்மாநிலங்களில் எல் லாம் காங்கிரசின் வாக்கு சதவீதம் மற்றும் இடங்கள், 2004இல் இருந்ததைவிடக் குறைந்திருக்கின்றன. ஆந்திராவில் அதன் இடங்கள் அதிகரித்திருந்தபோதிலும், அதன் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.

மற்றொரு முக்கிய அம்சம் என்னவெ னில், காங்கிரஸ் 2 சதவீதம் வாக்கு சத வீதத்தை அதிகரித்துள்ள அதேசமயத் தில், பாஜக சுமார் 3 சதவீத அளவிற்கு வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது. பாஜகவின் இழப்பு, காங்கிரசுக்கு ஆதாயமாக அமைந் திருக்கிறது. ஆயினும் ஒட்டுமொத்த அள வில் இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத மும் அவை 2004இல் பெற்ற அளவி லேயே அநேகமாக இருக்கின்றன. 2004ல் இரு கட்சிகளும் சேர்ந்தே 48.69 சதவீத அளவிற்குத்தான் வாக்குகளைப் பெற்றி ருந்தன. உண்மையில் 2009இல் இது 47.35 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2004 தேர்தலைவிட தற்போது காங்கிர சும் பாஜகவும் கூடுதலான இடங்களில் போட்டியிட்டபோதும் அக்கட்சிகளின் வாக்குகளின் சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் பெற்று வந்த வாக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலை என்பது தொடர்கிறது.

பாஜக நிராகரிக்கப்பட்டிருக்கிறது

தேர்தல் முடிவின் மூலமாக இரண்டா வது நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பது, பாஜக மற்றும் அதன் அரசியல் அணி தோல்வியடைந்திருப்ப தாகும். தங்களால்தான் நல்லதோர் அர சாங்கத்தை அமைத்திட முடியும் என்றும், தங்களால்தான் நாட்டைப் பாதுகாத்திட முடியும் என்றும் பாஜக கூறிவந்ததை மக் கள் நிராகரித்திருக்கிறார்கள். பாஜக தன் னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச் சனைகளையும் மதவெறி அடிப்படை யில் அணுகியதை மக்கள் பார்த்தார்கள். வருண் காந்தியின் வெறுக்கத்தக்க மத வெறிப் பேச்சுக்களும் இந்தியாவின் எதிர் காலத் தலைவராக நரேந்திர மோடியை சித்தரித்ததையும் மக்கள் பார்த்தார்கள். உயர்ந்துவரும் விலைவாசி, வேலையில் லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய நெருக்கடி ஆகிய எதனையும் பாஜக முன் னிலைப்படுத்தத் தவறிவிட்டது. இதன் காரணமாக பாஜக மக்களால் மிகவும் ஆழமான முறையில் நிராகரிக்கப்பட்டு விட்டது. தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே பீகாரில் நன்கு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பாஜக காரணம் அல்ல. மாறாக, நிதிஷ் குமார் அரசாங்கத் தின் மீது மக்களுக்கிருக்கும் நல்லெண் ணமும், நிதிஷ்குமார் பாஜகவின் மதவெறி அணியிலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக் கொண்டிருப்பதும் காரணங்களாகும்.

பாஜக ஒரிசா மாநிலத்திலும் முற்றிலு மாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தேர்த லுக்கு இரு மாதங்களுக்கு முன்புதான் பாஜக-விடமிருந்து பிஜூஜனதா தளம் தன்னை துண்டித்துக் கொண்டது. ஆனால் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியானது மொத்தம் உள்ள 145 இடங் களில் 103 இடங்களைப் பெற்று மகத் தான வெற்றி பெற்றுள்ளது. 2004இல் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பிஜூஜனதா தளம் - பாஜக கூட்டணி யானது 93 இடங்களை மட்டுமே வென்றி ருந்தது. இவ்வாறு, பிஜூஜனதா தளமா னது, தன்னை பாஜகவிடமிருந்து துண் டித்துக் கொண்டபின் தன் நிலையினை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் வெற்றிக்கான காரணங்கள்

தேர்தல் முடிவின் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது அம்சம் என்னவெனில், காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின்பால் பிரேமை கொண்டிருந்தபோதிலும், அது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக் கள் மத்தியில் நல்லதோர் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளன. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தியது, பழங் குடியினர் வன உரிமைகள் சட்டம், அரிசி மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆத ரவு விலை (ஆiniஅரஅ ளுரயீயீடிசவ ஞசiஉந)யை அதி கரித்திருப்பது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளை குறிப்பிடலாம். இவற்றில் பல இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டு வரப்பட்டவைகளாகும். விவசாய நெருக்கடி தொடர்ந்திட்டபோதிலும் மேற்படி நடவடிக்கைகள் கிராமப்புற மக்க ளுக்கு ஓரளவுக்கு நிவாரணத்தை அளித் தன. இவற்றுடன் பல மாநில அரசுகளும் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஆந் திராவில் அரிசி ஒரு கிலோ 2 ரூபாய்க் கான திட்டம், தமிழ்நாட்டில் அரிசி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ திட்டம் மற்றும் சில சமூக நல நடவடிக்கைகளை கூறலாம். ஒரிசாவிலும் கூட, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கான திட்டம் நவீன் பட்நாயக் அரசாங்கத்திற்கு ஆதரவினை அதி கரிப்பதற்கு ஒரு காரணமாகும். அதே சம யத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யின் உயர் வளர்ச்சி விகிதமானது நாட்டின் வளங்கள் மற்றும் வருமானங்களைச் சரி யான முறையில் மறு விநியோகம் செய்த தாகக் கூறுவதற்கில்லை. மாறாக, நாட் டில் மக்களுக்கிடையே பொருளாதார ஏற் றத்தாழ்வு கூர்மையாக அதிகரித்திருக் கிறது. இது காங்கிரசின் தளம் விரிவுபடுவ தையும் சுருக்கியிருக்கிறது.

சிறுபான்மையினர் மத்தியில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதில் உறு தியாக இருந்ததும், அவர்களை காங்கிர சுக்கு ஆதரவாக மாற்றியதற்குக் காரணங் களாகும். நாட்டின் பல பகுதிகளில் காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சி களை, இவர்கள் ஒரு வலுவான மாற்றாக பார்த்திடவில்லை. காங்கிரசுக்கு சிறு பான்மையினர் ஆதரவு இடம்பெயர்ந்த தற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒன்று பட்டு எதிர்த்திட வேண்டும் என்றும், மத வெறி அச்சுறுத்தல் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்திடும் என்றும் மக் கள் நினைத்ததும், காங்கிரசுக்கு ஆதாய மாக மாறியுள்ளது.

இடதுசாரிகளுக்குப் பின்னடைவு

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஏற் பட்ட இழப்புகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் கேரளாவில் இடதுஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 20 இடங்க ளில் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு 18ஐப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைக்கூட பெறவில்லை. ஆனால் இந்தமுறை இடங்கள் குறை யக்கூடும் என்று இடதுசாரிகள் எதிர் பார்த்திருந்தபோதிலும், இந்த அளவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதவில் லை. மேற்கு வங்கத்திலும் கூட இந்தத் தடவை காங்கிரசும் திரிணாமுல் காங்கிர சும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதாலும், அனைத்து கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்திருப்பதால் சில இடங்கள் குறையலாம் என்று எதிர் பார்க் கப்பட்டது. ஆனால் இவ்விரு மாநிலங் களிலும் ஏற்பட்டிருக்கும் தோல்வியிலி ருந்து இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 இடங்களே கிடைத்துள்ளன. இதுவரை மக்களவையில் இவ்வளவு குறைவான இடங்களை கட்சி பெற்றதில்லை. இத் தகைய பின்னடைவு ஏற்பட்டிருப்பதற் கான காரணங்களை ஆழமாகப் பரி சீலனை செய்ய வேண்டியது அவசியமா கும். இத்தகைய பின்தங்கிய நிலைக்கான காரணிகளைக் கண்டறிய சுய விமர்சன ரீதியில் பரிசீலனை செய்யப்பட்டாக வேண்டும். தேசிய அளவில் உள்ள காரணி களையும், மாநில அளவில் உள்ள காரணி களையும் - இவ்விரு அளவிலான காரணிகளையுமே - ஆய்வுக்குட்படுத்தி யாக வேண்டும். கட்சியால் தேசிய அள வில் வகுக்கப்பட்ட தேர்தல் உத்தி மற்றும் நாடு தழுவிய அளவிலான அரசியல் சூழ் நிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்துடன் மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள பிரத் யேகமான காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2009 மே 18 அன்று நடைபெற்ற அரசியல் தலை மைக்குழுக் கூட்டத்தில், விரிவான பரி சீலனை செய்யப்பட வேண்டும் என்றும் இதனை ஜூன் மாதம் நடைபெறவுள்ள மத்தி யக்குழுக் கூட்டத்தில் இறுதிப் படுத்திட வேண்டும் என்றும் பணித்துள் ளது. தோல்விக்கான காரணங்களை அடையாளம் கண்டபின், தவறுகளை யும் பலவீனங்களையும் களைந்திட, தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை கட்சி எடுத்திடும். இதன் அடிப்படையில், கட்சி மற்றும் இடதுசாரி அணியிலிருந்து விலகிச் சென் றுள்ள மக்கள் ஆதரவை வென்றெடுப் பதற்கு தளராது விடாமுயற்சியுடன் செய லாற்றிடும். கட்சியின் அகில இந்திய மாநாடு வகுத்தளித்துள்ள ஸ்தாபனக் கடமைகளின் அடிப்படையில் கட்சியை வலுப்படுத்துவதற்கும் அதன் வெகுஜன செல்வாக்கை விரிவு படுத்துவதற்கும் இத் தகைய சுயவிமர்சன ரீதியிலான பரிசீ லனை வழிவகுத்திடும்.

மூன்றாவது மாற்று

அரசியல் தலைமைக்குழுவில் நடை பெற்ற விவாதங்களின்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணி ஒன்றை, தேர்தலுக்கான மூன்றாவது மாற்றாக அமைத்திட வேண்டுமென்கிற கட்சியின் முயற்சி குறித்து பூர்வாங்கமான முறையில் பரிசீலிக்கப்பட்டது. 2009 ஜனவரியில் கொச்சியில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில், இதற்கான தேர்தல் உத்தி வகுக்கப்பட்டு, “இடதுசாரிக் கட்சிகள் மற்ற மதச்சார் பற்ற கட்சிகளுடன் இணைந்து, காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற் றை ஓர் எதார்த்தபூர்வமானதாக மாற்ற செயல்படும்” என்ற திசைவழியைத் தந் தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண் டது. கர்நாடகாவில் தொகுதி உடன்பாடு கண்டது. தேர்தல் சமயத்தில் இம்மாநி லங்களில் ஏற்பட்ட தேர்தல் உடன்பாடு களின் அடிப்படையில், நாம் அவற்றை, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு தேசிய அளவிலான மாற்றாக மக்கள் மத் தியில் சித்தரிக்க முயற்சித்தோம். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரி கள் தோல்வி, ஆந்திராவிலும் தமிழ்நாட்டி லும் இடதுசாரிகள் வைத்திருந்த கூட் டணி பெரும்பான்மையான இடங்களைப் பெறாதது, தேசிய அளவில் “மூன்றாவது மாற்று” வலுவான முறையில் அமைந்திட வாய்ப்பளிக்காமல் செய்துவிட்டது. இவ் வாறு பல்வேறு மாநிலங்களிலும் அமைந்த கூட்டணிகள், தேசிய அளவில் ஒரு நம் பகமான (உசநனiடெந) மற்றும் உறுதியான (எயைடெந) மாற்றாக அமைந்திடவில்லை. மேலும், மாநிலங்களில் அமைந்திட்ட இத்தகைய கூட்டணிகளால், தேசிய அளவிலான கொள்கைத் திட்டம் எதையும் அளித்திட முடியவில்லை.

இவ்வாறு மூன்றாவது மாற்றை முன் வைத்ததன் மூலமாக இரு அனுகூலங் கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணியா னது, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சேர்மானத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசாவில் குறிப்பிடத்தக்க அள விற்கு கூட்டணியினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, மதச்சார்பற்ற காங்கிரஸ் அல்லாத சேர் மானமானது 21 சதவீத வாக்குகளைப் பெற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னால் அதன் அகில இந்திய மாநாட்டில் வகுக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப் படையில் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்பதற்கான வல்லமையைப் பெற் றிருக்கிறது. அதாவது, தேர்தல் கூட்டணி யாக மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்து முற்றி லும் தனித்தன்மை வாய்ந்த மாற்றுக் கொள்கைகளுக்காக, இயக்கங்கள் மற் றும் போராட்டங்கள் மூலமாக இணைந்த கட்சிகளின் கூட்டணியாக அது விளங்கியது.

பண பலம்

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அள விற்கு, பணபலம் பயன்படுத்தப்பட்டது, மிகவும் மோசமானதோர் அம்சமாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு சட்டவிரோதமாக வந்த பணம் புகுந்து விளையாடியது.

பணபலம் மிகவும் கேவலமான முறை யில் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தமிழ் நாட்டில் மதுரைத் தொகுதி மிகவும் மோச மானதோர் உதாரணமாகும். மற்ற மாநிலங் களிலும் கூட, இத்தகு போக்கு வளர்ந்து வருகிறது. இது ஜனநாயகப் பண்புகளை மாசுபடுத்திடும். வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காகப் பல கட்சிக ளும் ஏராளமாகப் பணத்தைப் பெற்றிருக் கின்றன. இத்தகைய போக்கானது ஒட்டு மொத்த ஜனநாயக நடைமுறைக்கே ஓர் அச்சுறுத்தலாகும். குறிப்பாக இதுபோன்று கேவலமான முறையில் பணபலத்தைப் பயன்படுத்துவது இடதுசாரிகளின் நலன் களுக்கும் எதிரானதாகும்.

இடதுசாரிகளின் பங்கு

உலகப் பொருளாதார நெருக்கடியா னது இந்தியப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணத் தில், மன்மோகன் சிங் அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பொறுப்புக்கு வருகிறது. மிகப் பெரிய அளவில் வேலை யிழப்புகள், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்பிரிவுகள் மூடல், கிராமப்புற மக்களை வாட்டி வதைத் திடும் விவசாய நெருக்கடி ஆகியன தொடர்கின்றன. மக்களை மேலும் மேலும் சொல்லொண்ணா அவலத்திற் குத் தள்ளவிருக்கும் நவீன தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த் திட, மக்களின் நலன்களைப் பாதுகாத் திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து விழிப்புடன் இருந்துவரும். அதே சமயத் தில், மத்திய அரசு சுயேட்சையான அயல் துறைக் கொள்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்திற்காகவும், பொருளாதார இறையாண்மையைப் பாது காத்திடுவதற்காகவும், மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடும். இடதுசாரிக் கட்சிகளின் ஒற் றுமையை வலுப்படுத்துவதற்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படும். மக்கள் பிரச்சனை களின் பால் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன், கட்சி தன்னுடைய ஒன்று பட்ட நடவடிக்கைகளையும் ஒத்துழைப் பையும் தொடர்ந்திடும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், மேற்கு வங்கத்தில் கட்சியின் மீதும் இடது சாரிக் கட்சிகள் மீதும் தாக்குதல்கள் அதி கரித்துள்ளன. மே 16க்கு முன்னர், 26 தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், அலுவல கங்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல் லங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள் ளன. கட்சி ஊழியர்களை மிரட்டி, அடக்கி மக்கள் மத்தியில் அவர்களது செயல்பாடு களை முடக்கிட முயற்சிகள் மேற்கொள் ளப்படுகிறது. மக்களின் உதவியுடன் இத் தகைய ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை கட்சியும் இடது முன்ன ணியும் உறுதியாக தடுத்து நிறுத்திடும்.

இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட் டுள்ள தோல்வியினால், குதூகலமடைந் துள்ளவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்று கருதுவார்களேயானால் அது முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்படும். கடந்த காலத்திலும் பல சிரமமான சூழ் நிலைகளை எதிர்கொண்டு படிப்பினை களை அனுபவமாக்கி, உழைக்கும் மக் களுக்கான போராட்டங்களை சமரசமின்றி நடத்திக் கொண்டே பிற்போக்கு சக்திகள் மதவெறி சக்திகள் மற்றும் ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் போராடிய வரலாறு கட் சிக்கு உண்டு. இந்த மக்களவைத் தோல் வியால் கிடைத்துள்ள படிப்பினையும் மீண்டும் வீறுகொண்டு எழுந்து கட்சியை வலுவானதாக்க பயன்படும் என்பது உறுதி.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: