செவ்வாய், 26 மே, 2009

வெற்றுக்கூச்சல்

15வது மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க இடதுமுன்னணி அரசுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளதால், அந்த அரசு கட்டாயம் வெளியேற்றப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா தனது ஆயுள் கால ஆசையை இப்படியாவது பூர்த்தி செய்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார். 

மம்தா கூறுவது போல் மக்களவைத் தேர்த லில் பின்னடைவைச் சந்தித்த கட்சிகள் மாநில ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என் றால், எத்தனை தடவை காங்கிரஸ் மற்றும் பார திய ஜனதா கட்சிகள் தனது மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கூறுவது எவ்வித அரசியல் நெறி முறைக்கும் ஏற்புடையதல்ல. மம்தா இதே மேற்கு வங்கத்தில் மிகக்கடுமையான தோல்வி களைச் சந்தித்த போது மக்கள் எங்கள் கட்சியை நிராகரித்து விட்டார்கள். இனி நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று ஒதுங்கி விட்டாரா? இல்லையே! 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து மொத்தம் 1 கோடியே 90 லட் சத்து 70 ஆயிரத்து 604 வாக்குகள் (45.67 சத விகிதம்) பெற்றுள்ளது. அதேசமயம் பின்ன டைவைச் சந்தித்த நிலையிலும் இடது முன் னணி 1 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 157 வாக்குகளை (43.3 சதவிகிதம்) பெற்றுள்ளது. அதாவது 5 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் (2.37 சதவிகிதம்) மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளது. 1977 முதல் தொடர்ந்து வந்த அத்தனை சட்ட மன்றத் தேர்தல்களிலும் இடதுமுன்னணிக்கு மக்கள் மகத்தான ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய அளவிலான காரணிகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாநில அரசை கலைக்குமாறு கோருவது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்கு ஆகும்.

வங்க மக்களின் நம்பிக்கையை இடது முன் னணி இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சொல்வது மிகைப்படுத்திய மதிப்பீடு ஆகும். இடது முன்னணியை மக்கள் அடியோடு நிரா கரிக்க வேண்டும் என்று கம்யூனிச எதிர்ப் பாளர்கள் தங்களது மன ஆசையை மக்கள் கருத்தாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்து கின்றனர். இதன்மூலம் மேற்கு வங்க இடது முன் னணியை மட்டுமல்லாது, தேசிய அளவில் இடதுசாரிகளின், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை பின்னுக் குத் தள்ள வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பின்னடைவுக்கான கார ணங்கள் குறித்து அந்த மாநில இடது முன்னணி தற்போது சுய பரிசோதனை அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் குறைபாடுகளைக் களைந்து மேம்படுத்தவும், மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய திட்டங்களில் இன்னும் தீவிரமாக செயல்படவும் தீர்மானித்துள்ளனர். 

இந்த தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், “இந்த தோல்வியைப் பயன்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக முடிவுரை எழுத லாம் என்று நினைப்பவர்கள் முற்ற முழுமை யாகத் தோல்வி அடைவார்கள்.” என்று கூறியி ருக்கிறார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளின் கூக்குரலைப் புறந்தள்ளி, இடதுசாரிகள் புத்தெழுச்சி பெற்று முன்னேறுவார்கள் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை: