வெள்ளி, 12 ஜூன், 2009

எஸ்என்சி லாவாலின் வழக்கு உண்மை நிலை என்ன?

-கி. வரதராசன்

கேரள மாநில ஆளுநர் கவாய் என்பவர் பிறப்பித்துள்ள சமீபத்திய உத் தரவு இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதையேத் தொழிலாகக் கொண்டுள்ள பலருக்கு இப்போது இது ஒரு பெரும் ஆயுதமாகக் கிடைத்திருக் கிறது. கம்யூனிஸ்ட்டுகளும் லஞ்சம் வாங் குகிறார்கள், எனவே எல்லாக் கட்சிகளும் ஒன்றுதான் என்றும் எழுதுகிறார்கள். ஏதோ இதுகாறும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இருந்தது போன்றும், இப் போது இந்தக் குற்றச்சாட்டு கண்டு அதிர்ந்துபோனது போன்றும் ஏராளமாக எழுதித் தள்ளுகிறார்கள். தொலைக் காட்சியிலும் பிரச்சாரம் தூள் பறக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி தர வேண்டும் என்று மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), கேரள மாநில அரசிடம் கோரியிருந்தது. கேரள மாநில அரசு, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையைப் பெற்றபின், வழக்குத் தொடரத் தேவையில்லை என்ற முடி வுக்கு வந்து, அதை ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, ஆளுநர் மாநில அரசின் ஆலோசனையை ஏற்றுக்கொள் ளவில்லை என்பது மட்டுமல்ல, அவரா கவே சிபிஐயுடன் தொடர்புகொண்டு, மேலும் சில விவரங்களைப் பெற்று அதன் அடிப்படையில் கேரள அரசின் பரிந்து ரைக்கு மாறாக உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் இருக்கும் அரசாங்கம், மத்திய புலனாய்வு அமைப்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பது நாடறிந்த சங்கதிதான். முலாயம்சிங் யாதவ் சம்பந்தமாகவும், மாயாவதி சம்பந் தமாகவும், இதே சிபிஐ அவர்கள் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் இருக்கிறது என்று ஒருமுறையும், போதுமான ஆதா ரங்கள் இல்லை என்று இன்னொரு முறையும் நீதிமன்றத்தில் தெரிவித்ததை யும் அனைவரும் அறிவோம். இவ்வாறு சிபிஐ மாற்றி மாற்றிச் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், மேற்படி கட்சி கள், மத்தியில் ஆட்சியிலிருக்கிற காங் கிரஸ் கட்சியோடு எந்த அளவிற்கு உற வோடு இருக்கிறது அல்லது எதிர்த்து நிற் கிறது என்பதைப் பொறுத்தே அமைந் திருக்கிறது என்பதை நாடே பார்த்து ரசித்தது, சிரித்தது.

இன்றைக்கு இதே மத்திய புலனாய்வு அமைப்பை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கேரள ஆளுநர் மூலமாக மார்க் சிஸ்ட் கட்சிக்கு எதிராகத் திருப்பி இருக் கிறது என்பது வெள்ளிடைமலை. ஆளு நர் மற்றும் சிபிஐயின் நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்த வழக்கு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கேரளாவில் பள்ளிவாசல் (1940-41), செங்குளம் (1954-55), பன்னியார்(1963-64) என்னும் நீர்மின் திட்டங்கள் மூலம் (சுருக்கமாக பிஎஸ்பி திட்டங்கள் மூலம்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரு கின்றன. அவை கட்டப்பட்டு வெகு ஆண் டுகள் ஆகிவிட்டதாலும், அவற்றைப் பரா மரிப்பதற்கான செலவும் அதிகரித்திருப்ப தாலும், அவற்றை முழுமையாக உபயோ கப்படுத்த முடியவில்லை. எனவே 1995இல் கேரளாவில் ஆட்சியிலிருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங் கம், அங்கே இருந்த எந்திரங்களை அப் புறப்படுத்திவிட்டு, பதிலாக நவீன எந்திரங்களைப் பொருத்திட தீர்மானித் தது. இதற்காக சர்வதேச டெண்டர் எதையும் விடுவதற்குப் பதிலாக, புரிந் துணர்வு ஒப்பந்தம் (ஆடிரு-ஆநஅடிசயனேரஅ டிக ருனேநசளவயனேiபே) ஒன்றிற்கு அது ஏற்பாடு செய்தது.

அதன்படி கனடாவைச் சேர்ந்த ‘எஸ் என்சி லாவாலின்’ என்கிற நிறுவனத் துடன் 1995இல் கேரள மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. ஆயினும் அதன் பணிகள் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.

1996இல் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபோது, கேரளாவில் மின்சார உற்பத்தி மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது. வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரமும், தொழில் நிறு வனங்களுக்கு 95 சதவீதம் வரையிலும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது. கேரள மாநில மின்வாரியமும் நிதி நெருக் கடியில் சிக்கி மிகவும் திணறிக் கொண்டிருந்தது. இத்தகு சூழ்நிலையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், மேற் படி திட்டங்களை போர்க்கால அடிப் படையில் முடித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டது. மேலும் புதிய திட்டங் களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன் விளைவாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியி லிருந்தபோது வெறும் 14 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி அதி கரித்தது. இந்த நிலையில் மின் உற்பத்தி, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிப் பொறுப்பு 2001 மே மாதத்தில் நிறைவுறும் சமயத்தில், 1083.6 மெகாவாட் அளவிற்கு அதிகரித்தது. இடது ஜனநாயக முன்ன ணியின் ஆட்சி நிறைவுறும் சமயத்தில் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப் பட்டது. மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக கேரளா மாறியது.

இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத் துத் திட்டங்களும் மிகவும் வெளிப்படை யான அணுகுமுறையுடனேயே மேற் கொள்ளப்பட்டன. எந்த ஒரு திட்டமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (ஆடிரு-ஆநஅடிசயனேரஅ டிக ருனேநசளவயனேiபே) மூலமாகவோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலமா கவோ மேற்கொள்ளப்படவில்லை. இடது ஜனநாயக முன்னணியால் துவக்கப்பட்ட அதிரப்பள்ளி நீர் மின் திட்டம் (163 மெகா வாட்), குட்டியாடி கூடுதல் விரிவாக்கத் திட்டம் (100 மெகாவாட்) ஆகியவற்றிற்கு வெளிப்படையான முறையில் டெண்டர் கள் கோரப்பட்டன. கோழிக்கோடு அனல் மின் திட்டத்திற்கும் கூட வெளிப் படையாக டெண்டர் கோரப்பட்டு ‘பெல்’ நிறுவனத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில் என்ன நிலைமை? தற்போது பிரச்சனைக்கு உட்படுத்தப்பட் டுள்ள பிஎஸ்பி திட்டங்கள் உள்பட ஒரு திட்டம் கூட வெளிப்படையான டெண் டர் மூலம் நடைபெறவில்லை. மேலும் இத்திட்டங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களிடமே ஒப்பந்த அடிப்படை யில் ஒப்படைக்கப்பட்டன.

தற்சமயம் பிரச்சனைக்குரிய பிஎஸ்பி திட்டங்களைப் பொறுத்தவரை, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டது மட்டுமல்ல, எஸ்என்சி லாவா லின் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தமும் கையெழுத்துச் செய்துள்ளது. ஏதேனும் தாவா எழுந்தது என்றால் இந்த ஒப்பந் தத்தின் ஷரத்துக்களின்படி, பாரீசில் உள்ள சர்வதேச வர்த்தக சபை (ஐவேநசயேவiடியேட ஊாயஅநெச டிக ஊடிஅஅநசஉந)யில்தான் முறையிட முடியும். எனவே இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இடது ஜனநா யக முன்னணி அரசாங்கமானது ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஏற் படுத்தியிருந்த நடைமுறையின்படியே செல்வதெனத் தீர்மானித்தது.

இடது ஜனநாயக முன்னணி மீது வைக்கப்படுகிற மாபெரும் குற்றச்சாட்டு, ஐக்கிய ஜனநாயக முன்னணி, எஸ்என்சி லாவாலின் நிறுவனத்துடன் வெறும் ஆலோசனை ஒப்பந்தம் (உடிளேரடவயnஉல யபசநநஅநவே)தான் செய்து கொண்டது என்றும், ஆனால் இடது ஜனநாயக முன் னணி, விநியோக ஆர்டர் (ளரயீயீடல டிசனநச)க்கு சர்வதேச டெண்டர் கோராமல் கையெழுத் திட்டுவிட்டது என்பதாகும். உண்மை யில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில் 1996 பிப்ரவரி 24 அன்று கேரள மாநில மின்வாரியத்திற்கும் எஸ்என்சி லாவாலின் நிறுவனத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட சர்வ தேச ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்ப சேவை (கூநஉாniஉயட ளுநசஎiஉநள) அளிப்பதோடு, கனடிய பொருள்கள் மற்றும் சேவைகளுக் கும் (ஊயயேனயைn படிடினள யனே ளநசஎiஉநள) சேர்த்தே தான் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனத்துடன் புதிதாக எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட வில்லை.

இடது ஜனநாயக முன்னணி செய்த காரியம் எல்லாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி செய்திட்ட ஒப்பந்தத்தில் எந்த அளவிற்கு செலவினத்தைக் குறைக்க முடியும் என்று பார்த்தது. இதற்காக முதலமைச்சர் இ.கே. நாயனார் தலைமையில் மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில மின்வாரியத்தின் அதிகாரிகள் 1996 அக்டோபர் மாதத்தில் கனடா சென்று, எஸ்என்சி லாவாலின் நிறுவனத்துடனும் கனடா அரசாங்கத்தின் ஏஜென்சிகளுட னும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

அதன் விளைவாக, (1) இத்திட்டத்திற் கான வெளிநாட்டு மூலப்பொருள்களின் விலையை 188 கோடி ரூபாயிலிருந்து 149 கோடி ரூபாயாகக் குறைத்தது, (2) எஸ் என்சி லாவாலின் நிறுவனத்துடனான ஆலோசனைக் கட்டணத்தை (உடிளேரடவயnஉல கநந) 24.4 கோடி ரூபாயிலிருந்து 17.88 கோடி ரூபாயாகக் குறைத்தது, (3) கடனுக் கான வட்டிவிகிதத்தை 7.8 சதவீதத்திலி ருந்து 6.8 சதவீதமாகக் குறைத்தது, மற் றும் (4) கூடுதலாக 43 கோடி ரூபாயிலி ருந்து 98 கோடி ரூபாய்க்கு ஒரு நன்கொடை திட்டத்தையும் (உடிஅயீடநஅநவேயசல பசயவே உடிஅயீடிநேவே) ஏற்படுத்தியது.

நான்காவதாகக் கூறப்பட்ட திட்டத் தின்படி, மலபாரில் நவீன புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு எஸ்என்சி லாவாலின் நிறுவனத்தால், கனடா உதவி ஏஜென்சி நிறுவனம் ஒன்று வழங்கிய நன்கொடை மூலம், ஏற்பாடு செய்யப் பட்டது. பின்னர் 1998 ஜூலை 6 அன்று 1996 பிப்ரவரியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அட்டவணை பி-இல் இரு பிற்சேர்க்கையாக, ஏற்கனவே நிர் ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலின்படி கனடா மூலப்பொருள்களும் மற்றும் உதிரிப்பாகங்களும் விநியோகம் செய்திட ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வாறு ஐக்கிய ஜனநாயக முன்னணி ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தில்கூட மூலப்பொருள்கள் மற்றும் சேவைகளின் செலவினத்தைக் குறைத்திட இடது ஜனநாயக முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.

நிறைவாக, கனடா உதவி ஏஜென்சி மூலமாக வழங்கப்படும் நன்கொடையிலி ருந்து அமைக்கப்பட விருக்கும் மலபார் புற்றுநோய் மையம் தொடர்பாக எழுந் துள்ள பிரச்சனையை ஆராய்வோம். கனடா மற்றும் சில வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளுடன் தங்கள் நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களால் செய்து கொள்ளப்படும் வணிக ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதற்காக சில தர்ம காரியங் களையும் மேற்கொள்ளும். 1991-96இல் ஐக்கிய ஜனநாயக முன்னணி குட்டியாடி திட்டத்தை இறுதிப்படுத்திய சமயத்தில், இதேபோன்று ஒரு கொசுறு திட்டத்திற் கும் ஏற்பாடானது. அதன்படி மலபாரில் மின்விநியோகத்தை வலுப்படுத்த அத் திட்டம் பயன்படுத்தப்படும் என்று கூறப் பட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம், பிஎஸ்பி திட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததிலி ருந்தே இதுபோன்ற நன்கொடைத் திட்டம் குறித்தும் விவாதம் நடைபெற்று வந்தது. அதன்படி இத்திட்டம் நிறைவேற்றப்படக் கூடிய பகுதியில் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் (பிரதான திட்டத்தில் 30 சதவீத அளவில்) கல்வி/சுகாதாரம்/சுற் றுப்புறச் சூழலுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் ஒரு நன் கொடைத் திட்டத்திற்கு முன்மொழியப் பட்டது. 1996 அக்டோபரில் நடைபெற்ற அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைகளின்போது, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, மலபாரில் கனடிய நன் கொடை மூலமாக ஒரு புற்றுநோய் மருத்து வமனை அமைப்பது எனத் தீர்முடிவு மேற் கொள்ளப்பட்டது.

மலபார் புற்றுநோய் மையம் இப்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள் ளது. ஏனெனில் உறுதி அளித்திட்ட கனடா உதவி ஏஜென்சி முழுமையாக உதவிட வில்லை. மருத்துவமனை அமைக்கும் திட்டப்பணிகள், எதிர்பாராத விதமாக பொக்ரான் அணுகுண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இருப்பி னும், சுமார் 15 கோடி ரூபாய் கனடா நிறு வனத்திடமிருந்து பெறப்பட்டு, முதல் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற் றிருக்கின்றன.

பின்னர் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அது இத்திட்டத்தை, பல்வேறு அரசியல் காரணங்களால், தொடர்ந்து மேற்கொண் டிட ஆர்வம் காட்டவில்லை. முன்பு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் தை புதுப்பித்து மீண்டும் ஓர் ஒப்பந்த மாக மாற்றாமல் அதை காலாவதியாக விட்டுவிட்டது.

ஆளுநர் பதவி என்பது மத்திய அரசால் நியமிக்கப்படும் ஓர் அரசியல் நியமனப்பதவிதான். ஆளுநர் பதவி பல சமயங்களில் மத்தியில் ஆட்சியில் உள் ளோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டி ருக்கிறது என்பது அனைவரும் நன்கு அறிந்ததுதான். ஆனால் 1991 கர்நாடக முதல்வர் பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திட்ட வரலாற்றுப்புகழ் தீர்ப் புரைக்குப்பின், மத்திய அரசு, மாநில அரசு களை டிஸ்மிஸ் செய்வது என்பது இல் லாமல் ஒழிந்துவிட்.டது. ஆயினும் ஆளு நர் அலுவலகமானது மத்தியில் ஆட்சி யில் உள்ளோரால், தங்களுக்குப் பிடிக் காத மாநில அரசுகளைத் துன்புறுத்திட, எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தப்படு வது தொடர்கிறது. இதற்கு, அவை மத்திய புலனாய்வுக் கழகத்தினை மிகவும் கேவ லமான முறையில் பயன்படுத்திக்கொள் கின்றன. மத்தியப் புலனாய்வுக் கழகம் கிட் டத்தட்ட காங்கிரசின் அரசியல் ஆயுத மாகவே மாறிப்போயுள்ளது. பினராயி விஜயன் வழக்கிலும் ஆளுநரும் மத்தியப் புலனாய்வு அமைப்பும் மிகவும் இழிவான முறையில் இணைந்துள்ளனர்.

இவர்களின் இத்தகு இழிந்த கூட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்த்து முறியடித்திடும்.

2 கருத்துகள்:

ஹரிகரன் சொன்னது…

கம்யூனிஸ்ட்கள் நேரிமையானவர்கள் என்பதில் ஐயமில்லை. பினராயி விஜயன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்றால் அதை எதிர்கொண்டு தான் நேர்மையானவர் என நிரூபித்தால் மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும் தானே.

மடியில் கணமிருந்தால் தானே வழியில் பயம்.

விடுதலை சொன்னது…

ஹரிகரன் அவர்களுக்கு தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கம்யூனிஸ்ட்கள் மீது போலியான வழக்குகள் போடும் போது மட்டுமே ஊடங்கள் காட்டுகத்தலாக கத்தும். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அதைப்பற்றி ஒருவரி கூட எழுதமாட்டார்கள். அதுதான் நமது ஊடங்களின் உண்மையான குணம் . அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.