செவ்வாய், 16 ஜூன், 2009

அரக்கத்தனமான அரசியல்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீதான கொலைபாதகத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலமாக திரி ணாமுல் காங்கிரசின் ஜனநாயக விரோத நட வடிக்கைகள் உச்சத்தை அடைந்திருக்கின்றன. மத்திய அரசில் அங்கம் பெற்ற அடுத்த கணமே, திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தாபானர்ஜி, தங்கள் கட்சியின் சார்பான மத்திய அமைச்சர்கள், வங்கத்திலேயே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்வார்கள் என்றும், அதில் இரு நாட்கள் மட்டும் அமைச் சரவைப் பொறுப்புக்களைக் கவனிப்பார்கள் என்றும் தெரிவித் திருக்கிறார். இவ்வாறு, திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் அரக்கத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட, மத்திய அமைச்சர்கள் என்ற முறையில் கிடைத் துள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தி டவும், இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சேவை செய்வதற்காகத் தாங் கள் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பைத் தட்டிக் கழித்திட இருப்பதும் தெளிவாகிறது.

‘அயிலா’ என்னும் புயல் மேற்கு வங் கத்தை கடுமையாகத் தாக்கியுள்ள இத்தரு ணத்தில், அதனால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு, எவ்விதமான மனிதாபிமான உதவியும் அளித்திட மாநில அரசுக்கு உதவிடக்கூடாது என்று மத்திய அரசை திரிணாமுல் காங்கி ரசின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய அணுகுமுறையானது ஜனநாயக விரோதமான ஒன்று மட்டுமல்ல, மனிதாபி மானமற்றதுமாகும். இத்தோடு அவர் நின்று விடவில்லை. நிவாரண உதவிகளை தேர்ந் தெடுக்கப்பட்டு ஆட்சியிலி ருந்துவரும் மாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசு, அனுப் பிடக் கூடாது என்றும் மாறாக நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிட வேண் டும் என்றும் கோரியிருக்கிறார். இத்தகைய கோரிக்கையும் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சித் தத்துவத் தையே நிராகரிக்கும் செயலாகும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பது தொடர்பாக மாநில அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க மறுத்தி ருப்பதிலிருந்தும் அதன் ஜனநாயக விரோத குணம் வெளிப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு நிதி ஒதுக் கீடு தொடர்பாக, 93ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட சமயத்தில், பஞ்சாயத்துக்களுக்கு நிதியை நேரடியாக அனுப்பி வைப்பது தொடர்பாக நாடு முழுவதும் கடும் விவாதங்கள் நடைபெற்றன. அப்போது மத்திய அரசிடமி ருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசுகளையும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வரையும் புறந்தள்ளிவிட்டு, நேரடியாக மாவட்ட ஆட்சியர்களிடமே நிதியை அனுப்பி டலாம் என்று காங்கிரஸ் பரிந்துரைத்தது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கருதப்பட்டு, நாடு அதனை முற்றி லுமாக நிராகரித்துவிட்டது. இப்போது அதே போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை புறந்தள்ளிவிட்டு, நேரடியாக மாவட்ட ஆட்சி யர்கள் மூலம் உதவிகளைச் செய்திட வேண் டும் என்று திரிணாமுல் முயற்சித்துக் கொண் டிருக்கிறது. தங்களுடைய சொந்த அரசியல் லாபத்திற்காகவும் தேர்தல் அனுகூலத்திற் காகவும் திரிணாமுல் காங்கிரஸ் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தையும், நாடாளு மன்ற ஜனநாயகத்தையுமே கேலிக் கூத்தாக் கிட தயாராகிக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி ஊழியர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத் திருப்பதிலிருந்து அதன் ஜனநாயக விரோத குணம் தெளிவாக வெளிப்படுகிறது. பதினைந் தாவது மக்களவைப் பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 40 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களையும், 2 பார் வர்ட் பிளாக் ஊழியர்களையும் கொலை செய் திருக்கின்றனர்.

தற்சமயம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத் தில் நந்திகிராமம் மற்றும் கெஜூரியில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள் ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடனேயே, அத்தொகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே, நந்திகிராமமும், கெஜூரியும் 48 மணி நேரத்திற் குள் ‘‘மார்க்சிஸ்ட்டுகளிடமிருந்து விடுவிக் கப்பட வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார். திட்டமிட்ட தாக்குதல்களின் மூலமாக மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர் கள் நந்திகிராமத்தில் பல கிராமங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். சந்தோஷ் பர்மன் என்னும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் சடேன் கபாரி கிராமத்தில் கொல்லப் பட்டிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள், தங்கள் பதவி களை ராஜினாமா செய்துவிட்டு, ஓடிவிட வேண்டும் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஜூன் 8 காலையிலிருந்தே, ஆயுதபாணிக் கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிள்களில் வந்து கெஜூரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலு வலகங்களைத் தாக்கி இருக்கிறது. அங்கிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களின் வீடுகளில் புகுந்து பொருள்களைக் கொள்ளை யடித்தபின், வீடுகளைத் தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். இத்தாக்குதல்கள் 36 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த, மார்க் சிஸ்ட் கட்சியின் அனைத்து அலுவலகங்க ளும் நன்கு திட்ட மிட்டு கொள்ளையடிக்கப் பட்டு, சூறையாடப் பட்டிருக்கின்றன. நூற்றுக் கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொடுங்காயங்களைப் பெற்றிருக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் கொள்ளை யடிக் கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டா யமாக விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. ஜூன் 9 அன்று, கெஜூரிக்குச் சென்ற மாநில அமைச்சர்களை, உள்ளே விடா மல் திரிணாமுல் காங்கிரசார் தடுத்திருக் கின்றனர். பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப் பாளரிடம் பேசுவதற்குக் கூட அவர்கள் மறுத்துவிட்டனர். மாநில அரசுடன் ஒரு மோதலை உருவாக்கி, அதனால் ஏற்படும் நிகழ்ச்சிப் போக்குகளை அடுத்து, ‘‘சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகக்’’ கூறி மாநில அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என்பது தெளிவு. அக்கட்சி யின் தலைவர், மாநில அரசுக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டம் 355ஆவது பிரிவை பிரயோகிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூப்பாடு போடத் துவங்கிவிட்டார்.

ஈயத்தைப் பார்த்து, இளித்ததாம் பித்தளை என்ற பழமொழிக்கு இதைவிடச் சிறந்ததோர் உதாரணம் கிடையாது.. முதலில் கொலை பாதகச் செயல்களில் ஈடுபடுவது, பின்னர் குய்யோ முறையோ என்று கத்தி, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை கெட்டுவிட்டதாகக் கூப் பாடு போடுவது, மத்திய அரசு தலை யிடவேண்டும் என்பது. இதுதான் திரிணா முல் காங்கிரசின் அரசியலாகும்.

1970களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியாலும் பிற்போக்கு சக்திகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரை பாசிச அரக்கத்தனத்தை எதிர்த்து, முறிய டித்துத்தான் வளர்ந்திருக்கிறது. அப்போது நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக் கான தோழர்களை நாம் பலிகொடுத்துள் ளோம். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். 1972இல் நடைபெற்ற மோசடித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் இத்தகு அரைப் பாசிச அரக்கத்தன நடவடிக்கை களை மேலும் தீவிரப்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை உறுதியுடன் எதிர்த்து, சமர்புரிந்து, வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியது. 1977இல் அவசரநிலைத் தோல்வி யடைந்ததை அடுத்து அரைப் பாசிச அடக்கு முறையும் முடிவுக்கு வந்தது. நாட்டில் ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர், இதுநாள்வரை, இடது முன் னணி அரசாங்கத்தை மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

இப்போதும் திரிணாமுல் காங்கிரசும் மற்ற பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து நின்று, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் இடது சாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல் களைத் தொடுத்து, மீண்டும் ஜனநாயகத்தைக் கவிழ்த்து, கடந்த முப்பதாண்டு காலமாக அமைதியாகவும் ஸ்திரத்தன்மையுடனும் இருந்து வரும் மேற்கு வங்கத்தை சீர்குலைத் திட விரும்புமானால், அன்று அரைப் பாசிச அரக்கத்தனம் எவ்வாறு முறியடிக்கப்பட் டதோ அதேபோன்று இப்போதும், அத்தகு அரைப்பாசிச அரக்கத்தனம் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடிக்கப்படும்.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: