புதன், 24 ஜூன், 2009

பின்னடைவிலிருந்து படிப்பினை கற்று முன்னேறுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜூன் 20, 21 தேதிகளில் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட் டுள்ள அறிக்கை வருமாறு:-

தேர்தல் பரிசீலனை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியின் மத்தியக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டது. தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவிய காரணிகளில், மத்தியில் ஒரு நிலையான மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்ற மக்களின் விருப்பமும் ஒன்று. மேலும் பாஜகவின் பிளவுவாத மதவெறி அரசியலையும் இந் துத்துவா கொள்கையையும் மக்கள் நிராகரித்ததின் பலனும் காங்கிரசுக்கு சென்றது.

4 ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்துவந்த ஆதரவும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு கவுரவத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தித்தந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு புதிய தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றியது. இதன் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன; விவசாய நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு முற்றிலும் தவறியது. ஆனாலும் கூட, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், விவசாயிகளுக்கு கடன் நிவா ரணம், பழங்குடி மக்களின் வனஉரிமை பாதுகாப்புச் சட்டம், உணவுதானியங்கள், இதர தானியங்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையில் ஏற்பட்ட உயர்வு போன்ற நடவடிக்கைகள், அரசுக்கு ஆதரவான விளைவை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைகள், இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தின் விளைவா கவே அரசால் நடைமுறைப்படுத்தப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதி களின் உச்சகட்ட தாக்குதலானது, மக்க ளிடையே ஒற்றுமைக்கான சிந்தனை யை அதிகப்படுத்தியது; இது, மக்களை பிரிக்க முயற்சி செய்யும் பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்கு எதிராக மக்களின் மனதை ஆட்கொண்டது.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி யில் மிகப்பெரும் பலன்களை அனுபவித்த இந்த நாட்டின் பெரும் முதலாளி களிடமிருந்தும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை பெற்றது.

பாஜகவின் தோல்வி

இந்த தேர்தலில் பாஜகவின் தோல்வி குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், இரண்டாவது தொடர்ச்சியான தேர்த லில் அக்கட்சி வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முக் கிய காரணம் என்னவென்றால், அதன் மதவெறி அடித்தளத்தை மக்கள் நிரா கரித்துவிட்டார்கள் என்பதே. தேர்தலின் போது பாஜகவின் மதவெறி நடவடிக்கை களை வருண்காந்தியின் மிக மோச மான வெறிப் பேச்சுக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. இதே போன்ற வெறி பிரச்சாரத்தை அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் நடத்தினர். மிக மோசமான வெறித்தனம் கொண்ட இந் துத்துவா கட்சியான பாஜகவின் எதிர் கால தலைவராக நரேந்திர மோடி முன் னிறுத்தப்பட்டார் என்பதும் கவனிக்கத் தது. மேலும், எதிர்க்கட்சி என்ற முறை யில் பாஜகவின் செயல்பாடுகளும் மோசமானதாகவே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் மிக முக் கிய பிரச்சனைகளான விவசாய நெருக் கடி, விலைவாசி உயர்வு மற்றும் வேலை யின்மை பிரச்சனை போன்றவற்றை பற்றியெல்லாம் விவாதிக்க விடாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர் குலைப்பதிலேயே அக்கட்சி கவனமாக இருந்ததும் மக்களின் ஆதரவை இழக்க காரணமாக அமைந்தது.

மேலும், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத இடதுசாரிகள் உள்ளிட்ட கட் சிகளின் அணி சேர்க்கையும் பாஜக வின் தோல்விக்கு ஒரு பங்களிப்பு செய் துள்ளது; இந்த அணிச் சேர்க்கையின் விளைவாக, ஆந்திரப்பிரதேசம், தமிழ் நாடு மற்றும் ஒரிசா போன்ற மாநிலங் களில் தனக்கு உதவும் விதத்திலான எந்தவொரு கூட்டணியையும் பாஜக வால் அமைக்க முடியவில்லை என்ப தை மத்தியக் குழு சுட்டிக்காட்டுகிறது.

ஐ.மு.கூ அரசுக்குஆதரவு வாபஸ்

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு தொடர்பான பிரச்சனையில் கடந்த 2008 ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது சரி யான முடிவே என்று மத்தியக் குழு உறுதியான கருத்தினை தெரிவிக்கிறது. இது, அமெரிக்காவுடன் ஒரு நீண்டகால இராணுவ கூட்டை ஏற்படுத்திக் கொள் வதற்கெதிரான இடதுசாரிக் கட்சிகளின் உறுதியான நிலைபாட்டின் ஒரு அம் சமேயாகும்.

காங்கிரஸ் அல்லாத,பாஜக அல்லாத மாற்று

தேர்தலில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணிக்கும், பாஜக தலைமை யிலான கூட்டணிக்கும் எதிராக காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்றை உருவாக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அழைப்பு விடுத்தது. இது ஒரு சரி யான நடைமுறை உத்தியே ஆகும். இத்த கைய முயற்சிகளின் விளைவாக ஆந்தி ரப்பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சில பிராந்திய கட்சிகளுக்கும் இடதுசாரி கட்சிகளுக்குமிடையே ஒரு தேர்தல் புரிந்துணர்வு ஏற்பட்டது. எனினும், இத் தகைய தேர்தல் புரிந்துணர்வு என்பது இடதுசாரிகள் தலைமையிலான மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகியவற்றை தவிர்த்து, மேற்கண்ட நான்கு மாநிலங் களை தாண்டி விரிவாக்கம் பெற இயல வில்லை. எனவே, இது தேசிய அளவில் ஒரு சாத்தியமான மற்றும் நம்பகத்தன் மையை ஏற்படுத்துகிற மாற்றாக ஆக முடியவில்லை.

இதுகுறித்து விமர்சனப்பூர்வமாக ஆய்வு செய்த பின்னர், ஒரு மாற்றை உருவாக்க வேண்டுமென்று விடுத்த அழைப்பை, ஒருமாற்று அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அழைப்பாக விரிவுபடுத்தி இருக்கக் கூடாது என்று மத்தியக் குழு உணர்கிறது. நாடு தழுவிய ஒரு அணியை அமைக்க இயலாத நிலையில், ஒரு பொதுவான கொள்கை யை முன்வைக்காத நிலையில், ஒரு மாற்று அரசை உருவாக்குவோம் என்ற அறைகூவல் எதார்த்தமானதாக இல்லை.

எனினும், மூன்றாவது மாற்றை உரு வாக்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டு மென்று மத்தியக் குழு மீண்டும் வலி யுறுத்துகிறது. அதுவரையிலும், தேவைப் படுகிற பொருத்தமான நிலைமைகளில், ஒத்தக் கருத்துடைய காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர் தல் புரிந்துணர்வு மற்றும் கூட்டணியை கட்சி ஏற்படுத்திக் கொள்ளும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு

மக்களவைத் தேர்தலில் கட்சி கடு மையான பின்னடைவை சந்தித்திருக் கிறது. 16 இடங்களை மட்டுமே கட்சி பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் 9 இடங்கள், கேரளத்தில் 4, திரிபுராவில் 2, தமிழ்நாட்டில் 1 ஆகிய இடங்களை கட்சி பெற்றுள்ளது. இத்தேர்தலில் கட்சி 5.33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 5.66 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான இழப்பே ஆகும். மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் கட்சியின் செல்வாக்கு தளத்தில் அரிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து கவலை கொள் கிற அதே நேரத்தில், மேற்குவங்கத்தில் இடது முன்னணி சுமார் 1.85 கோடி வாக்குகளை பெற்றுள்ளது என்பதையும், கேரளத்தில் இடது ஜனநாயக முன் னணி 67.17 லட்சம் வாக்குகளை பெற் றுள்ளது என்பதையும் மத்தியக் குழு சுட் டிக்காட்ட விரும்புகிறது. சில இடங்க ளில் செல்வாக்குத் தளம் அரிக்கப்பட்டி ருந்தாலும், இந்த இரண்டு மாநிலங்களி லும் பொதுவாக, கட்சியின் ஆதாரத் தளம் வலுவாகவே இருக்கிறது.

கட்சி செயல்பாடு குறித்த ஆய்வு

தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து மாநிலக் குழுக்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மத்தியக் குழு மிகவும் ஆழமான பரிசீலனையை நடத்தியது. திரிபுராவில் கட்சி மிகச் சிறந்த வெற் றியை பெற்றுள்ளது. 61.69 சதவீத வாக்கு களை பெற்று இரண்டு தொகுதிகளை யும் இடது முன்னணி கைப்பற்றியுள்ளது.

அகில இந்திய அளவிலான அம்சங் களை தவிர, மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் கடுமையான இழப்பு ஏற்பட காரணமாக இருந்த குறிப்பான நிலைமைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு ஏற்பட்ட பின்ன டைவுக்கு அரசியல், அரசு நிர்வாக மற் றும் ஸ்தாபன காரணங்கள் இருக்கின் றன என்று ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற மற் றும் நகர்ப்புற ஏழை மக்கள் பிரிவினரி டையேயும் மத்தியதர வர்க்கத்தினரின் சில பிரிவினரிடையேயும் கட்சியின் செல்வாக்கு தளத்தில் சற்று சரிவு ஏற்பட்டிருக்கிறது என்றும் அந்த அறிக் கை குறிப்பிடுகிறது. மேலும் பொருத்த மான வர்க்க கண்ணோட்டத்தின் அடிப் படையில் அரசு, பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் செயல்படுவதில் குறை களும் இருந்துள்ளன. மக்களின் வாழ்க் கையோடு நேரடியாக தொடர்புடைய பல்வேறு திட்டங்களை முறையாக அமல்படுத்துவதில் அரசின் தரப்பில் இருந்த பலவீனத்தால் இந்த நிலைமை ஏற்பட்டது. மேலும் நிலம் கையகப்படுத் துதல் தொடர்பாக ஏற்பட்ட கருத்துக்க ளும் விவசாயிகளில் சில பிரிவினர் தனிமைப்பட்டுப்போக காரணமாக இருந்தது.

ஸ்தாபன அடிப்படையில், சில குறிப்பிட்ட தவறான போக்குகளும், செயல்பாடுகளும் மக்களுடன் உள்ள உறவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த குறைகளைக் களைய ஸ்தாபன அளவிலும், அரசு நிலையிலும் மேற் கொள்ள வேண்டிய நெறிப்படுத்தும் நட வடிக்கைகளை மேற்குவங்க மாநிலக் குழு ஆலோசித்து முன்வைத்துள்ளது. அவற்றை மத்தியக்குழு அங்கீகரிக்கிறது.

கேரளாவில் தேர்தலில் ஏற்பட் டுள்ள பின்னடைவுக்கான காரணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி மற்றும் கட்சி தலைமையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை யின்மை மக்களிடையே கடுமையான, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளது; இடதுஜனநாயக முன்னணிக்கு எதிராக கிறிஸ்தவ மக்களின் வாக்கு களை ஒன்றுதிரட்டுவதில் தேவாலயங் கள் தீவிரமாக செயல்பட்டன; மக்கள் ஜனநாயக கட்சியுடனான உறவு குறித்து மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது; எஸ் என்சி லாவாலின் வழக்கு தொடர்பாக ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஊட கங்களும் மேற்கொண்ட தீவிரப்பிரச்சார மும் தாக்கத்தை ஏற்படுத்தியது; மேலும் கட்சி ஸ்தாபனத்திற்குள் சில குறிப் பிட்ட தவறான போக்குகள் ஏற்பட்டிருப் பதும் பாதகமான விளைவை உரு வாக்கியது.

இந்நிலையில், கட்சியின் கேரள ஸ்தாபன விவகாரங்கள் குறித்து குறிப் பாக விவாதிக்க ஜூலை 4, 5 தேதி களில் அரசியல் தலைமைக்குழு கூடு வது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் இதர பகுதிகளில் தேர்த லில் கட்சியின் ஒட்டுமொத்த செயல் பாடு குறித்தும் மத்தியக்குழு ஆய்வு செய்தது. சுயேட்சையான பணிகளை மேலும் விரிவுபடுத்துவதில் உள்ள ஸ்தாபன பலவீனங்கள், உள்ளூர் பிரச் சனைகளில் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்துவது மற்றும் வெகுமக் கள் ஸ்தாபனங்களை மேலும் வலுவாக கட்டுவது ஆகியவற்றில் உள்ள பலவீ னங்களை மத்தியக்குழு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடர் பாக மாநிலக்குழுக்கள் ஆய்வு செய்த அடிப்படையில் இலக்குகள் நிர்ண யித்து செயல்படுத்த வேண்டுமென மாநிலக்குழுக்களை மத்தியக்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்த தேர்தல் பின்னடைவிலிருந்து ஒட்டுமொத்த கட்சியும் படிப்பினை களை கற்றுக்கொள்ளும் என்று மத்தியக் குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. கட்சி யின் அரசியல் நிலைபாட்டை முன்னெ டுத்துச் செல்வதில் உள்ள குறைபாடு களை களைந்து கட்சி முன்னேறும்; ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பலவீனங் களை கண்டறிந்து அவற்றை உரிய முறையில் களைவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். மேற்குவங் கத்திலும் கேரளாவிலும், பல்வேறு கார ணங்களால் கட்சியிலிருந்து தனிமைப் பட்டுள்ள மக்கள் பிரிவினருடன் மீண் டும் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ள மத்தியக்குழு உறுதியேற்கிறது. கட்சி தலைமை யிலான மாநில அரசுகள், மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக தேவையான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும்.

இடதுசாரி ஒற்றுமையை வலுப் படுத்த கட்சி தொடர்ந்து பணியாற்றும்; மக்கள் பிரச்சனைகளில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவதிலும், உறவுகளை பேணு வதிலும் கட்சி கவனம் செலுத்தும்; மக்கள் நலனை காக்கும் பொருளாதார கொள்கைகள், மதச்சார்பின்மை மற்றும் சுயேட்சையான அயல்துறை கொள்கை ஆகியவற்றை வலியுறுத்தி கட்சி தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குறித்து

நாடாளுமன்றத்தில் இடதுசாரி எதிர்க்கட்சிகளின் பங்கினை திறம்பட ஆற்றுவது என்று இடதுசாரி கட்சிக ளால் ஏற்கெனவே வரையறுக்கப்பட் டுள்ள நிலைபாட்டை பின்பற்றுவோம் என்று மீண்டும் மத்தியக்குழு தெரிவிக் கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி யின் விளைவாக வேலைவாய்ப்புகளை இழந்துள்ள லட்சக்கணக்கான மக்க ளுக்கு நிவாரணம் அளிப்பதற்கான உட னடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நெருக் கடியின் காரணமாக பொதுமக்கள் மீது மேலும் சுமை ஏற்றும் நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளக்கூடாது. பணவீக்க விகிதம் குறைவதாக காட்டப் பட்டாலும், அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் தொடர்ந்து உச்சத்தி லேயே இருக்கின்றன. விலைவாசியை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியின் விளைவு களை நேரடியாக எதிர்கொண்டு பணி யாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஆதா ரம் வழங்குவதற்கு மத்திய அரசு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகளையும் நலத் திட்ட பணிகளையும் மேற்கொள்ள கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.

வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகப்படுத்துவது மற்றும் நிதித்துறை யை தாராளமயமாக்குவது ஆகியவற்றுக் கான மசோதாக்களை கைவிட வேண்டும் என நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான முறையில் எதிர்க் கும். மேலும் லாபம் கொழிக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற் பது, சில்லரை வணிகம் மற்றும் உயர் கல்வித்துறையில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பது போன்ற இந்த நாட்டிற்கு எந்தவிதத்திலும் பயன்தராத நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதிபட எதிர்க்கும். மக ளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்ற கட்சி வலுவாக வலியுறுத்தும்.

மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறைக்கு எதிர்ப்பு

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள், அலுவலகங்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாவோயிஸ்ட்டு களால் நடத்தப்பட்டுவரும் மிகக்கடு மையான வன்முறை தாக்குதலுக்கு எதி ராக கண்டனம் முழங்குமாறு கட்சியின் அனைத்து கிளைகள் மற்றும் இதர இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு மத்தியக்குழு வேண்டு கோள் விடுக்கிறது. மேற்குவங்கத்திற்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தை பாது காக்கவும் நாடு முழுவதும் கட்சி பிரச் சாரம் மேற்கொள்ளும். (ஐஎன்என்)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்களோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்

மு. மயூரன் சொன்னது…

உலக்கை போன வழிகளை விட்டுவிட்டு ஊசி போன வழிகளை இந்த அறிக்கை ஆராய்கிறது.

மக்களுக்கு அரிசி கிடைக்கவில்லை, சேவை கிடைக்கவில்லை, பருப்புக்கிடைக்கவில்லை என்று கவலைப்படும் இந்த் ஆறிக்கை, நந்திக்கிராமத்தில், சிங்கூரில், இன்று மேற்கு வங்கத்தில் மக்கள் மீது நடத்தப்படும் ஆயுத , கொலை தாக்குதலைப்பற்றி ஒரு சின்ன முனகலையும் முக்கவில்லை.

போதாக்குறைக்கு மேற்குவங்கத்தில் தாக்கினவர்களுக்கு கண்டனமா?

இந்தக்கட்சி எல்லாம் ஒரு இடது சாரிக்கட்சியா ?

வீடுபூந்து மக்களை வதைக்கும் காவல், இராணுவ, துணைப்படைகளுக்கு கண்டனம் செய்யக்கூட வக்கிலாத நிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி போய்விட்டது.

மேற்குவங்கத்தில் மக்களுக்கு பிரச்சினை இல்லாததாலா தாக்கினார்கள்?

உடனடியாக தாக்குதல்களை நிறுத்திவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதை விட்டுவிட்டு ஜார்ஜ் புஷ் கணக்கில் "பயங்கரவாத" புராணம் படிக்கும் கேடுகெட்ட கம்யூனிஸ்ட் கட்சியை கம்யூனிசம் மீது நம்பிக்கை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தக்கட்சி நாறி அழிந்து போகட்டும்.

விடுதலை சொன்னது…

முரளிதரன் அவர்களுக்கு தங்கள் கருத்துகளின் மொத்த சாரமும் எந்த அடிப்படையில் வந்தது என்பதை புரியவைத்தால் நல்லது. ஊடங்கள் ஊதும் செய்தியில் இருந்தா, அல்லது என்.ஜி.ஓ வகையான போலி அமெரிக்க ஆதரவு இடது சீர்குலைவாளர்களின் கருத்துகளில் இருந்தா என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்.

நந்திக்கிராமத்தில், சிங்கூரில், நடைபெற்ற சம்பங்களில் பாதிக்கப்பட்டது யார் ? சிபிஎம் தோழர்கள் 250பேர் கொல்லப்பட்டது மமதாவின் புரட்சிகர ஆட்சியை கொண்டுவரவா?

இப்போது நடக்கும் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் கடந்த 2 மாதத்தில் 40க்குமேற்பட்ட சிபிஎம் தோழர்கள் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டு உள்ளார்களே எதற்காக ?

விடுதலை சொன்னது…

அனானிக்கு தன்னுடைய வாழ்வு தன்னுடைய ஓப்புதலின் அடிப்படையில் கொல்லை யிடப்படுவதை உணர்ந்தாலும் நகைச்சுயையாகதான் இருக்கும்.