ஞாயிறு, 26 ஜூலை, 2009

அபத்தமான கற்பனைகளை நிறுத்திக் கொள்ளுமா ஊடகங்கள்?

“கம்யூனிஸ்ட் கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அவரை பதவியிலிருந்து நீக்க வியூகம் வகுத்து வருகின்றனர்” என்று துவங்கி, ஒரு முழுநீள கற்பனைச்செய்தியை புனைந்து ஞாயிறன்று ‘மாலைமலர்’ ஏடு வெளியிட் டுள்ளது. இந்த கற்பனையை வாந்தி எடுக் கும் விதமாக சன் நியூஸ் தொலைக்காட் சியும் பரபரப்பாக வெளியிட்டது.


மக்களவைத் தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக முடிவு செய்தது என்பதே உண்மை. மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும், மத்தியக் குழுவும் முழுமையாக ஆய்வு செய்து காரணங்களை கண்டறிந் துள்ளது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இதை நாட்டு மக்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே தெரி வித்துள்ளது.

ஆனால், தேர்தலில் ஏற்பட்ட பின்ன டைவுக்கு பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தே காரணம் என்றும், இதனால் அவ ருக்கும் சீத்தாராம் யெச்சூரிக்கும் மோதல் ஏற்பட்டது என்றும் தேசிய ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை உலவ விட்டன. “பிரகாஷ் காரத்தை மாற்ற வேண்டுமென்று மேற்குவங்க கட்சியினர் கொந்தளித்துக்” கொண்டிருப்பதாகவும், “பிரகாஷ் காரத் நீக் கப்பட்டால், அந்தப் பதவிக்கு கேரள மாநில கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமச்சந்திரன் பிள்ளையை கொண்டு வர பிரகாஷ் காரத் கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்” என்றும் ‘மாலைமலர்’ ஏடு எழுதியுள்ளது.

இந்த செய்திக்கு என்ன ஆதாரம் என்று ஒரு வரி கூட இல்லை.

மக்கள் நலன் காக்க அனுதினமும் போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு களங்கம் கற்பிக்க முதலாளித்துவ ஊடகங்கள் தினந்தோறும் இப்படிப்பட்ட அவதூறு சேற்றை வாரி இறைக்கின்றன.

மேற்குவங்க தேர்தல் குறித்து எழுதும் இந்த ஏடுகள், திரிபுராவில் சில தினங் களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி மீண்டும் மகத்தான வெற்றி பெற்றிருப்பது குறித்து செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. இதுதான் இந்த மீடியாக்களின் லட் சணம்.

அபத்தமான கற்பனைகளை செய்திகள் என்ற பெயரில் உலவ விடுவதை இனியாவது இந்த ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளுமா?

கருத்துகள் இல்லை: