கேரளத்தில் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டு, ஜனநாயகப் படுகொலை அரங்கேற்றப்பட்டு ஜூலை 31ம் தேதியுடன் அரை நூற்றாண்டு பூர்த்தியாயிற்று. கலாச்சார மறு மலர்ச்சியையும் அரசியல் எழுச்சி யையும் பின்னுக்குத் தள்ளும் நோக்கத் துடனேயே இருண்ட சக்திகள் இக்காரி யத்தை செய்தன. கேரளத்தின் பன்முகப் பட்ட வளர்ச்சிக்கு புதிய பாதை வகுத்த இஎம்எஸ் தலைமையிலான முதலாவது மந்திரி சபையை ‘விமோச்சன சமரம்’ என்ற பெயரில் மத்தியில் அதிகாரத்தில் இருந்த நேரு அரசு டிஸ்மிஸ் செய்தது. இது இந்திய அரசியல் வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகப் பதிந்தது.
நிலப்பிரபுக்களும், கல்வி வியாபாரிகளும், மத-சாதிய சக்திகளும் இவர்களின் எடுபிடிகளும் நடத்திய வன்முறைத் தாண்டவத்தின் முடிவாக மாநில மந்திரிசபைக் கலைக்கப்பட்டது. அத்துடன் காங்கிரசின் எதேச்சதிகார முகமும் அம்பலமானது. 1959 ஜூலை 31ல் அரங்கேறிய இந்த ஜனநாயகப்படு கொலை, கேரளத்தின் சமூக - அரசியல்- பொருளாதார அரங்கில் பின்னடைவின் தொடக்கமாக இருந்தது.
விமோச்சன சமரத்திற்குப் பிள்ளை யார் சுழி போட்டது அமெரிக்காதான். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆணிவேரை அறுக்கும் லட்சியத்துடன் தொடங்கப் பட்ட விமோச்சன சமரம் கேரளத்திற்கு மாறா களங்கமாகியது. வாக்கெடுப்பின் மூலம் முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசு அன்று கலைக்கப்பட்டிருக்காவிட்டால் மாநிலத்தின் முகத்தோற்றமே மாறி யிருக்கும்,
நரகத்திற்கு ஒப்பான வாழ்க்கையை நடத்திய ஏழை மக்களுக்கு இஎம்எஸ் அரசு நம்பிக்கையின் வெளிச்சத்தைப் பாய்ச்சியது. 28 மாதங்கள்தான் அதிகாரத் தில் நீடிக்க முடிந்தது என்றாலும் அந்த அரசு ஐக்கிய கேரளத்தின் அரசியல்- சமூக-பொருளாதார வரலாற்றை மாற்றி யமைத்தது. நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையால் நசுக்கப்பட்ட விவசாயிக்கு நிலத்தின் மீது உரிமையும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருக்க நிலமும் வழங்கப்பட்டது. விவசாயிகளை நில வெளியேற்றம் செய்யக்கூடாது என நிலச் சுவான்தாரர்களுக்கு அரசு உத்தரவு போட்டது. குத்தகை பாக்கி ரத்து செய்யப் பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டம் புது யுகத்தின் துவக்கத்தைப் பறைசாற்றியது. லட்சக்கணக்கான ஏழை மக்கள் முதன் முறையாக கவுரவத்துடனும் பெருமையுடனும் தலை உயர்த்தி நின்றனர். தொழிலாளர் களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக் கும் குறைந்தபட்ச கூலியை உத்தரவாதப் படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. தொழி லாளர் போராட்டங்களில் தலையிடக் கூடாது என போலீசுக்கு உத்தரவு போடப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர் புள்ளவர்களை அரசு வேலைகளில் நியமிக்கக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதிகாரத் தைப் பரவலாக்கும் நடவடிக்கை தொடங் கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் மட்டுமல்ல, நிலச்சீர்திருத்தத்துடன் கொண்டுவரப் பட்ட கல்வி மசோதாவும் பிற்போக்கு சக் திகளுக்கு ஆத்திரமூட்டியது. கேரளத்தில் வீசும் செங்காற்று மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று காங்கிரஸ் அஞ்சியது. அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் ஏகாதிபத்தியத்தின் உறக்கத்தை கெடுத் தன. அவர்கள் பணத்தை வாரி இறைத்து போராட்டத்தைத் தூண்டிவிட்டனர். போராட்டங்கள் குறித்த செய்திகளைப் பரப்புவதற்காக பத்திரிகையும் தொடங்கப் பட்டது. மக்கள் ஆதரவு கிட்டாத நிலை யில், மத-சாதிய சக்திகளை உசுப்பி விட்டு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த னர். இறுதியாக அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி அரசு கலைக்கப்பட்டது.
இதோடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அச்சாணி முறியும் என்று பிற்போக்குச் சக்திகள் கனவு கண்டன. அவர்களின் கனவை கேரளம் விரைவிலேயே சிதறடித்தது.
1957ல் அமைந்த முதலாவது கம்யூனிஸ்ட் அரசு இட்ட அடித்தளத்திலேயே பின்னர் வந்த எல்லா அரசுகளுமே செயல்பட வேண்டியதாயிற்று. கேரளத்திற்கு புதிய திசை வழியை அந்த அரசு காட்டியது. அடுத்தடுத்து இடதுசாரி தலைமையிலான அரசுகள் ஆட்சிக்கு வந்த சமயங்களில் மட்டுமே சாமானிய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன.
சிலர் இப்போதும்கூட விமோச்சனப் போராட்டக் கனவுகளில் மிதக்கிறார்கள். இடதுசாரி அரசுகள் அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் கலைப்பு அரசியல் அவர்களின் கனவாக இருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் இருக்கும் இச்சமயத்தில், இஎம்எஸ் அரசு கலைக்கப்பட்டதன் 50வது ஆண்டு பூர்த்தியாவது ஒரு தற்செயல் நிகழ்வே. விமோச்சனப் போராட்டக்காலத்தை நினைவுபடுத்தும் விதமாக ஏகாதிபத்திய- சாதி, மதச் சக்திகளும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஊடகங்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக இப்போதும் யுத்தம் நடத்துகின்றன. பொய்ப்பிரச்சாரங்களுக்கு எந்த கட்டு திட்டமும் இல்லை. வன்முறைத் தாண்ட வத்தால் தகர்க்க முடியாத இயக்கத்தை பொய்வழக்குகள், பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் பலவீனப்படுத்தலாம் என எண் ணுகிறார்கள். ஆனால், இவற்றையெல் லாம் எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் இடதுசாரி இயக்கத்திற்கு வலிமை உண்டு என்று விமோச்சனப்போராட்டத் திற்கு ஐம்பது ஆண்டு பூர்த்தியாகும் இச் சமயத்தில் கேரளம் பிரகடனம் செய்கிறது. இனியொரு விமோச்சனப் போராட்ட அரு வருப்பை கேரளம் சகித்துக்கொள்ளாது என்றும்அது முழங்குகிறது.
‘தேசாபிமானி’யிலிருந்து
தமிழாக்கம் : வீரா
சனி, 1 ஆகஸ்ட், 2009
சூரியனை இருள் மறைத்த ஜூலை 31
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக