செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சமூக இழிவு நீங்கிட சமர்புரிவோம்!

செப்டம்பர் 30ம் நாள் தோழர் சீனி வாசராவ் நினைவு தினம். அந்நாளை தீண்டாமை ஒழிப்பு - உழைக்கும் வர்க்க ஒற்றுமை நாளாகக் கடைப்பிடிக்க தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தீண்டாமைக் கொடுமைகளுக்கும், வன் கொடுமைகளுக்கும் முடிவு கட்டுவதின் மூலமே உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உருவாக்க முடியும்; உறுதிப்படுத்த முடி யும். கிராமப்புற விவசாயத் தொழிலாளர் களிலும் அணிதிரட்டப்படாத உழைப் பாளிகளிலும் மிகக் கணிசமானவர்கள் தலித்துகளாகவும், பிற்படுத்தப்பட்ட, மிக வும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த வர்களாகவும் உள்ளனர். இவர்களிடையே உருவாகும் ஒற்றுமை இந்திய உழைக்கும் வர்க்க ஒற்றுமையில் பிரதான முன் தேவையாக உள்ளது.

சாதியமைப்பின் கொடூரமான வடி வமான தீண்டாமை மற்றும் வன்கொடு மைகளுக்கு முடிவு கட்டுவது ஒரு அவசரப் பணியாக நம்முன் உள்ளது. இந்திய நாட்டிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் தொகையில் கால் பகுதியி னர் (25 சதம்) தலித்துக்கள், பழங்குடியினர் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்களுக்கு மனித உரிமைகள் மறுக் கப்படுவது இந்திய ஜனநாயகத்திற்கே பெரும் அவமானமாகும். நாட்டிற்கே தலைக்குனிவாகும்.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை யில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார ஒடுக்குமுறை. மற்றொன்று சமூக ஒடுக்குமுறை. இவை இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன. மிக வறிய பொருளாதார நிலை காரணமாக (மிகக் கணிசமானவர்கள் நிலமோ இதர உடை மைகளோ இல்லாதவர்கள்) தங்களது சமூக உரிமைகளைப் பெற எழுச்சி பெற முடியாமலும் ஒன்றுபட முடியாமலும் தலித்துகள் தவிப்பதும், மறுபுறம் தீண்டத் தகாதவர்கள் என இவர்களுக்கு முத் திரை குத்தி பொருளாதார உரிமை மற்றும் வாய்ப்புகள் பெற முடியாமல் தடுப்பது மான போக்குகள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன. தலித் மக்களின் விடு தலைக்கான போராட்டம் இந்த இருவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களேயாகும். மேற்கு வங்கம், கேரளம் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் செங் கொடி இயக்கம் அதற்கான வலுவான போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தோழர். பி.சீனிவாசராவ் தலைமையிலான அத்தகைய போராட்டங்கள் இன்றளவும் நமக்கு உத்வேகமளிக்கின்றன.

தலித் விவசாயத் தொழிலாளர்களின் அன்றைய நிலை எவ்வாறு இருந்தது என்பதை தோழர் பி.எஸ். தனுஷ்கோடி நினைவு கூர்கிறார்.

“பண்ணையடிமைகளான நாங்கள் ஒடுக்குமுறைகளுக்கு கொஞ்சம் எதிர்ப்பு தெரிவித்தால் கூட தொழுக்கட்டை கட்டி எங்களை தொழுவத்தில் போட்டுவிடு வார்கள். அடிவாங்கியவன் எதிர்த்து எச் சிலை முகத்தில் உமிழ்ந்து விடுவானோ என அஞ்சி வாயில் துணி வைத்து அடைப்பார்கள். செருப்பை வாயில் திணித்து விடுவார்கள். சாணிப்பாலை வாயில் ஊற்றி விடுவார்கள். சாணி உருண் டையை வைத்து அடைப்பார்கள். யாரும் எதையும் கேட்க முடியாது. வேலைக்கு தாமதமாக வரும் பெண்களுக்கும் சாட்டை யடிதான். அவள் உடலிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பார்கள். விவசா யத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள் ளிக் கூடம் போகக் கூடாது. பண்ணை யின் மாடுகளை மேய்க்க வேண்டும். மகன், மகள் திருமணம் என்றால் நிலப்பிரபுவின் சம்மதம் பெற வேண்டும்.”

இந்நிலையில் மாற்றம் காண செங் கொடி இயக்கம் வலுவாகவும், தீரமாகவும் போராடியது. களப்பால் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் மத்தியில் தோழர்.பி.சீனிவாசராவ் அன்று ஆவேசத்தோடு பேசியது இதோ:

“நாமும் மனிதர்கள் தான். நிலப்பிரபுக் களும் உங்களைப் போல் மனிதர்கள் தாம். உங்களுக்கும் இரண்டு கைகள் இருக் கின்றன. அவர்களுக்கும் இரண்டு கை கள் இருக்கின்றன. அவன் உன்னைச் சாட்டையால் அடித்தால் நீயும் அவ னைத் திருப்பி அடி. அதனால் என்ன வந் தாலும் பார்த்துக் கொள்ளலாம். விடிந்த பின்தான் நீ ஏர்கட்ட வேண்டும். சூரியன் உதித்த பின்பு தான் பெண்கள் வேலைக் குச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு கரையேறித்தான் பால் கொடுக்க வேண் டும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்க வேண்டும்.” இவை வெறும் வார்த்தைகள் அல்ல. எழுச்சிமிக்க போராட்டங்களுக் கான அறைகூவல். அத்தகையப் போராட்டங்கள் ஏராளம் நடந்தன.

44 பேரை பலி கொண்ட கீழவெண்மணி படு கொலை உள்பட ஏராளமான அடக்கு முறைகளை எதிர்கொண்டே இந்த இயக் கங்கள் நடந்தன. இதனால் கீழத் தஞ்சை யில் மிகக் கொடூரமான சில ஒடுக்கு முறைகள் ஒழிந்தன. தமிழ்நாட்டிற்கே வழிகாட்டும் கூலி உயர்வும் கிடைத்தது. ஆகவே, நிலம், கூலி போன்ற பிரச்சனை களில் வலுவான போராட்டங்களை உரு வாக்கிவரும் நமக்கு, தலித் மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதும் கொள்கைப் பூர்வமான கடமையே ஆகும்.

பாதை கடிதெனினும்

பயணத்தில் உறுதி


இன்றைய நிலை என்ன? அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் இன் றைய பல பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளிலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் நீடிக்கின்றன. எதிர்த்துக் குரல் கொடுத் தால் ஆதிக்க சக்திகள் வன்கொடுமை களை ஏவுகின்றனர். உத்தப்புரத்தில் செங் கொடி இயக்கத்தின் போராட்டங்களால் தமிழக அரசு தலையிட்டு சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தலித் மக்களுக்கு பொதுப் பாதையில் செல்ல உரிமை கிடைத்தது. ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடி யாத ஆதிக்க சக்திகள் வன்கொடுமைத் தாக்குதலை நடத்தின. தமிழ்நாடு அர சின் காவல்துறையே வன்கொடுமையில் இறங்கிய விபரீதத்தையும் இங்கு கண் டோம். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி யில் தலித்துகளுக்கு ஆலய நுழைவு உரி மையை செங்கொடி இயக்கம் போராடிப் பெற்றுக் கொடுத்தது. அதனைச் சகிக்காத ஆதிக்க சக்திகள் தலித் மக்களை நிந் திக்கும் செயலில் இறங்கியுள்ளன. இவ் வாறு வன்கொடுமை புரிவோரையும் நாம் சட்டத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வாதாடியும் போராடியும் வருகிறோம்.

இக்காலத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, ஆலய நுழைவு, இரட்டைக் குவளை ஒழிப்பு, மயான உரிமை, பொதுப் பாதை உரிமை என பல போராட்டங் களை செங்கொடி இயக்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக இயக்கங்களும் நடத்தி தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டு வதில் முன்நின்றன. ஆயினும் இப்பாதை யில் நாம் நெடும் தொலைவு முன்னேற வேண்டியுள்ளது. பாதை கரடு முரடானது என்றாலும் நமது பயணம் உறுதியானது என்ற குறிக்கோளுடன் முன்னேறுவோம்.

களம் இறங்குவோம்

செப்டம்பர் 30ல் நாகை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்களிலும், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் மயான உரிமை அல்லது மயானத்திற்கான பாதை உரிமைக்கான போராட்டங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் கிராமச் சாவடியில் நுழைவது, பொதுக்கழிப்பிட உரிமைக்கான போராட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை ஒழிப்புக்கான போராட் டத்திலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களம் இறங்குகிறது. இவை தலித் மக்களின் உரிமைக்கான போராட் டங்கள் மட்டுமல்ல - இந்திய ஜனநாயகப் போராட்டங்களின் மற்றும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கானப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியும் கூட.

ஜனநாயகத்திலும் மனித உரிமை யிலும் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டிய, ஆதரவு அளிக்க வேண்டிய போராட்டங்கள் இவை. பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தி, அண்ணா நூற்றாண்டு விழாவையும் நடத்தி அதன் நிறைவு விழாவை சிறப்பாக நடத்தியுள்ள தமிழக முதல்வரும் தமிழ்நாடு அரசும் தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முன்வருவார்களா? முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

பி. சம்பத்

கருத்துகள் இல்லை: