சனி, 26 செப்டம்பர், 2009

கி.வீரமணியின் போலி சமூக நீதி நாடகம்

சமூகநீதியின் அளவு கோல் என்ன?

“சமூக நீதியும், கழகத்தின் குரலும்” என்ற தலைப்பில் விடுதலை ஏடு (செப். 22) தலையங்கம் ஒன்றை தீட்டியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகநியமிக் கப்படுவதை பார்ப்பன ஊடகங்கள் எதிர்ப்பதாகவும் இதை எதிர்த்து சமூகநீதிக்காக போராடும் இயக்க மாம் திராவிடர் கழகம் தனது கடமை முத்திரையை பதிக்க களத் தில் இறங்குவதாகவும் இந்த தலை யங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கைக்காக மதுரையிலும் சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.


சென்னை திருவல்லிக்கேணி யில் 18.9.2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையிலும் இந்தப் பிரச்சனையை பிரதானமாக விவாதித்திருக்கிறார்.

நீதிபதி தினகரன் மீது பொய் யான புகார்களை எழுப்பியுள்ள தாகவும் ஒரு தாழ்த்தப்பட்டவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக் கப்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவதூறு பரப்பப்படுவ தாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.டி.தினகரனை அமர வைக்கும் வரை இந்தப் பிரச்சனையை திரா விடர் கழகம் உட்பட சமூகநீதி அமைப்புகள் விடப்போவதில்லை என்றும் ஓயப்போவதில்லை என் றும் அவர் கூறியுள்ளார்.

நீதிபதி தினகரன் மீது கூறப்பட்டுள்ள புகார் என்ன?


திருவள்ளூர் மாவட்டம் திருத் தணி வட்டத்திற்குட்பட்ட காவேரி ராஜபுரம் கிராமத்தில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்கள் நீர்நிலை, நீர்வரத்து, மேய்ச்சல், புறம்போக்கு நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள் ளன. இதில் நீதிபதி தினகரன் மற் றும் அவரது குடும்பத்தினர் மட்டும் சுமார் 550 ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்துள்ளதாகவும் இந்த ஆக்கிர மிப்பில் இரண்டு ஏரி, குளமும் அடங்கும் என்று புகார் எழுந்துள்ளது.

காவேரிராஜபுரத்தில் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ மற்றும் தலைவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை.

காவேரிராஜபுரம் நில ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி திருவள்ளூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதித்த காவல்துறை, பின்னர் அதை ரத்து செய்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற தலைவர்களை யும் ஊழியர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தது. ஆனால் புறம் போக்கு நிலத்தை வளைத்து போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

காவேரிராஜபுரத்தில் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள் பூர்வீகமானவை என்று நீதிபதி தினகரன் கூறியுள்ளார். ஆனால் இந்தக்கிராமத்தில் அவருக்கு பூர்வீக சொத்து எதுவும் இல்லை என்றும் 18 ஆண்டுகளுக்கு முன் னால்தான் அவர் இந்த கிராமத்தில் கால்பதித்தார் என்றும் அந்தக் கிரா மத்தைச் சேர்ந்த வி.எம்.ராமன் என் பவர் கூறியுள்ளார். (மெயில் டுடே).

மெயில் டுடே செய்தியாளர் எழுதியுள்ள கட்டுரையில், தின கரன் மற்றும் குடும்பத்தினரின் ஆக்கிரமிப்பால் நிலம் இழந்துள்ள பெரும்பாலானோர் தலித்துகள் தான் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தலித் முதியவர் கூறுகை யில், “எனது சிறுவயதில் இந்த நிலத்தில்தான் ஆடு, மாடுகளை மேய்த்துள்ளேன். புல் அறுத்துள் ளேன். ஆனால் இப்போது இந்த நிலத்தில் கால் வைக்கக்கூட எங் களை அனுமதிப்பதில்லை” என் கிறார். காவேரிராஜபுரத்தில் மட்டும் 440 ஏக்கர் நிலங்கள், தினகரன் குடும்பத்தாரால் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது என்றும், இது அந்தக் கிராமத்தில் நான்கில் ஒரு பகுதி என்றும் அந்த ஏடு கூறுகிறது.

பல்வேறு விவசாயிகளிடம் நிலத்தை விலை கொடுத்து வாங் கிய நிலையில், 313 ஏக்கர் நிலம் மட்டுமே பட்டா நிலம் என்றும் மீதமுள்ள நிலங்கள் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்கள் என்றும் கூறப்படுகிறது. காவேரிராஜபுரத்தில் வசிக்கும் மக்க ளில் பெரும்பாலோர் தலித்துகள் மற்றும் இருளர் என்ற பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்கள். தினக ரன் மட்டுமின்றி வேறு சில அர சியல்வாதிகளும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளும் கூட பெரு மளவு நிலத்தை ஆக்கிரமித்திருப் பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்தப்பகுதியில் உள்ள சாலைக்கு நீதியரசர் பி.டி.தினகரன் சாலை என்று பெயரிடப்பட்டிருப்ப தோடு, அடிக்கடி அந்தப்பகுதிக்கு அவர் வந்து செல்வார் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட் டிருந்த அந்த இடங்களில் குடி யிருப்போருக்கு பட்டா வழங்கக் கூடாது என்றும் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மதுரையில் அமைந்துள்ள உயர்நீதி மன்றக் கிளை, ஒரு ஏரியை தூர்த்து கட்டப்பட்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டிருப் பதோடு நீர்நிலைகளையும் ஆக்கிர மித்திருக்கிறார். இதைத்தான் பத்தி ரிகைகள் அம்பலப்படுத்தியிருக் கின்றன.

ஆனால் திராவிடர் கழகம், அந்தப் புகார் சமூகநீதிக்கு எதிரா னது என்று கூறுகிறது. நிலத்தை இழந்திருப்பவர்களும் தலித்துகள் தான். ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு, நிலம் பகிர்ந்து தரப்பட்டால் அதனால் பலம் அடைபவர்களும் தலித்துகள்தான்.

தினகரன், தலித் என்பதால் தாங்கள் போராடுவதாக கூறும் திராவிடர் கழகம், நிலம் இழந்த, நிலம் மறுக்கப்படும் தலித்து களைப் பற்றி கவலைப்படாதது ஏன்? இதுதான் “வசதியான” சமூகநீதி என்பதா?

நீதிபதிகள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்பதோடு மட்டுமின்றி, நீதிபதிகள் நியமனத் திலும் நம்பகத்தன்மையும், வெளிப் படைத்தன்மையும் இருக்க வேண் டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வரும் காலம் இது.

ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசாமி என்ற நீதிபதி, பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, வருமானத்திற்கு பொருந் தாத வகையில் சொத்து சேர்த்த தாக புகார் எழுந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டு களில் 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்பட்ட நிலையில், 108 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மக்களவையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது திராவிடர் கழகம் இவர் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி அவருக்கு வக்காலத்து வாங்கியது. இதே காரணத்தை காட்டி சில கட்சிகள் கண்டனத் தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றிபெறவில் லை. அப்போது ராமசாமிக்கு ஆதர வாக எம்.பி.க்களை திரட்டியதில் சுப்பிரமணியசாமிக்கும் பெரும் பங்கு உண்டு. அவர் எந்த சமூக நீதியின் அடிப்படையில் ராமசாமி யை ஆதரித்தார் என்று தெரிய வில்லை.

உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியாக இருக்கும் கே.ஜி.பால கிருஷ்ணன் ஒரு தலித் என்ப தால், தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க முயல்கிறார் என்று சாந்திபூஷன் என்ற மூத்த வழக் கறிஞர் கூறியிருக்கிறார். இத்த கைய விஷமத்தனமான விமர்ச னங்கள் கண்டிக்கத்தவை என்ப தில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், காவேரிராஜபுரத்தில் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும் பாலான இடங்களில், ஆக்கிரமிக் கப்பட்டுள்ள இடங்கள் நிலச்சீர் திருத்தத்தின் மூலம் உழைக்கும் மக்களான தலித் மக்களுக்கு வழங் கப்பட வேண்டியவைதான். இந்த ஆக்கிரமிப்பில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலமும் உண்டு. இதற்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள் எத் தனை?

திருச்சி மாவட்டம் திண்ணியத் தில் தலித் ஒருவரை தாக்கி, ஜாதி ஆதிக்கவெறியர்கள் அவரது வாயில் மலத்தை திணித்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றம் வந்த போது, முதல் தகவல் அறிக்கை யில் குளறுபடி இருப்பதாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறை யீடு எதுவும் செய்யவில்லை. இது சமூகநீதி ஆர்வலர்கள் போராடி யிருக்க வேண்டிய விசயம் இல் லையா?

மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகார் எழுந்தபோது, ராசா ஒரு தலித் என்பதால் இத்தகைய புகார் எழுப் பப்படுவதாக முதல்வர் கூறினார்.

மாஞ்சோலை தோட்டத் தொழி லாளர் போராட்டத்தின் போது நெல் லை தாமிரபரணி ஆற்றில் 17 தலித் துகள் அடித்து மிதக்கவிடப்பட்ட போது, அந்த மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டது. அவரை மாற்றினால் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோபப்படுவார்கள் என்று மறுப்புக்கான காரணம் கூறப்பட்டது.

உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக் கப்பட்டவர்களும் தலித்துகள்தான். இந்தப் பிரச்சனையைகையிலெடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராடிய போது சமூகநீதி அமைப்புகள் ஓடோடி வந்து ஆதரித்திருக்க வேண் டாமா? மாறாக தீண்டாமை கொடுமையை கைவிட மாட்டோம் என்று கூறி மலையேறியவர்களை காண அல்லவா பலரும் ஓடோடிச்சென்றார்கள். முதல்வர் சட்டமன்றத்தில், பாதை கேட்டவர்களுக்கு பாதை கிடைக்கும், பாதுகாப்பு கேட்டவர்களுக்கு பாதுகாப்பு கிடைக் கும் என்றார். அரசே திறந்து விட்ட பாதையில் தலித்துகள் தைரியமாக செல்ல முடிகிறதா? நீதி கேட்ட மக்களை காவல்துறை யினரே கொடூரமாக தாக்கிய நிலை யில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தின் மதுரை கிளை உத்தரவிட் டுள்ளது. இந்தப் பிரச்சனையில், விடுதலை ஏடு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுக மாக மலையேறிகளை அல்லவா ஆத ரித்தது.

வைக்கம் போராட்டத்தின் போது தந்தை பெரியார், தாழ்த்தப் பட்ட மக்களுக்காக ஆலயப்பிர வேசம் வேண்டுமென போராடினார். அவர்கள் வசதியானவர்களா என்று பெரியார் பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு சமூகநீதி அளவுகோல் கூட, சம்பந்தப்பட்ட வரின் பொருளாதார வசதி மற்றும் பின்னணியை வைத்தே அளக்கப் படுகிறது. சமூக நீதிக்கான அளவு கோலை புரிந்துகொள்ள முடிய வில்லை.

கருத்துகள் இல்லை: