செவ்வாய், 13 அக்டோபர், 2009

விலைவாசி குறைய வழி என்ன?

தற்போது அரிசி விலை கிலோ ரூபாய் 30, 40 என்றும், துவரம் பருப்பு விலை ரூ.90, 100 என்றும் இவை போன்ற மற்ற உணவுப் பொருட்களும் உணவுக்குத் தேவைப்படும் பொருட்களும் எகிறி நிற்கிற நிலையில் வருங்காலம் இதைவிட மோசம் என்றால், ஏழை, எளிய மக்களை யார் எவ்வாறு காப்பாற்றுவது?


உணவுபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்களுக்கு நம் நாட்டு வங்கிகள் குறைந்தவட்டியில் தாராளமாகக் கடன் வழங்குகின்றன. இந்த வகையில் சென்ற 2008-2009ம் நிதியாண்டில் அவர்களுக்கு 1.44 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஏராளமாக உணவுப்பொருட்களை வாங்கி, இருப்பு (பதுக்கி) வைப்பதால் விலைவாசி ஏறுகிறது! இதைத் தவிர்த்தால், அது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பயன் படுகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் நம் கண்ணைக் குத்த நம் விரலைப் பயன்படுத்து வதையாவது தடுக்கலாம்.!

அரசுத்துறை அல்லது பொதுத்துறையில் உற்பத்தி என்றால் அதன் லாபமோ நஷ்டமோ நாட்டையும் மக்களையும் சார்ந்தது. உற்பத்தியின் அடக்கத்தைப் பொறுத்து அரசே விலை நிர்ணயம் செய்யலாம். இதில் ‘கொள்ளை லாபம்’ என்பதற்கு வழியே இல்லை! மேலும் அரசு பார்த்து விலைவாசியைக் கட் டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.

இந்தப்போக்கில் நாட்டின் பொருளாதாரத்தையும் விலை வாசிகளையும் சூழ்நிலைக் கேற்ப, அரசு தன்கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும், உற்பத்தியை தனியார் கைகளில் விட்டு விடும்போது, அவர்கள் வைத் ததுதான் விலை என்றாகிவிடு கிறது!

தனியாரிடம் ஏன் ஒப் படைக்க வேண்டும்? எல்லாம் ஊழலுக்காகத்தான்! நிலம் கொடுத்து, நீர் கொடுத்து, மின் சாரம் கொடுத்து, உரிமம் (லை சென்ஸ்) கொடுத்து, ஊக்க மானியம் கொடுத்து, கோடி கோடியாய் கடனும் கொடுத்து, ஏழைப்பாட்டாளி வர்க்க உழைப்பு உறிஞ்சப்படுவதை கண்டுகொள்ளாமல் விட்டு, தனியாரிடம் அந்தத் தொழிலை ஒப்படைக்கிறார்கள் என்றால்... அதன் சகல நிலைகளிலும் 20 விழுக்காடு பணம் ஆட்சி யாளர்களுக்கும் அதிகாரிகளுக் கும் லஞ்சமாகக் கிடைக்கிறது.

இதை மறைக்க, “எல்லாவற் றையும் அரசே செய்ய முடியாது; செய்தாலும் அது சரிப்படாது. தனியார் துறையில் இருக்கும் நேர்த்தி அரசுத்துறையில் இருக் காது! நிர்வகிப்பதிலும் உழை ப்பதிலும் அரசுத்துறையில் மெத்தனம் ஓங்கும்” என்கிற மாய்மாலத்தை மக்களிடையே கருத்தேற்றம் செய்கிறார்கள்!

சீரகம், கடுகு, பூண்டு விற்கும் சில்லரை விற்பனைக் கடை முதல் கோதாவரிப் படு கையில் எண்ணெய் எடுப்பது வரை ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்கள் ஈடுபடாத தொழில் ஏதேனும் உண்டா? இந்தியாவில் மட்டுமல்ல, உல கில் பலநாடுகளில் அவர்களுக் குத் தொழில் நிறுவனங்கள் உண்டே! அவ்வளவையும் அவ் விரு சகோதரர்கள்- தனித்தனி யாகத் தானே நிர்வகிக்கிறார்கள்? அப்படியிருக்கும் போது ஒவ் வொரு இலாகாவுக்கும் அமைச் சராக இருக்கும் ஒருவர், தன் இலாகா சம்பந்தப்பட்ட நிறுவ னங்களையும் பணிகளையும் நிர்வகிக்க முடியாதா?

ஒருசில சூழ்நிலைகளின் போது நெருக்கடி முற்றி மக்களி டம் கோபக்கனல் தென்படும் போது, முதலாளிகளைப் பார்த்து வேண்டுகோள் விடுவார்கள்! விலைவாசி குறைப்புக்காக உதவாக்கரை உத்தரவுகள் மற் றும் சட்டங்களைப் போட்டு அதிர்வேட்டு விடுவார்கள்! காலப்போக்கில் அந்த அதிர் வேட்டு வெத்துவேட்டாகி விடும்.

வணிகத்துறையில் முதலா ளித்துவ தாராளமயம் புகுந்து, ஊக வணிகம் என்கிற வைர ஸைப் பரப்பிவிட்டது. இது பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் எச்1என்1 வைரஸைவிட ரொம்ப மோசமானது! ஒட்டல், உரசல், நெருக்கம், தொடர்பு என்று இருந்தால்தான் பன்றிக்காய்ச் சல் வைரஸ் பிறரைத் தாக்கும். ஆனால் ஊக வணிக வைர ஸூக்கு இவையெல்லாம் தேவையில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் வணி கப்பொருள் இருக்கும்; எங்கோ ஒரு மூலையில் வணிகன் இருப் பான். பொருட்களைப் பார்க்காம லேயே எவரும் வாங்கும் முன், வாங்க முடியாத அளவுக்கு விலை வைத்து, வலைத்தளம் (இண்டர்நெட்) மூலம் வாங்கி விடுகிறான். பின் அவன் உசிதப்படி லாபம் வைத்து, அதே வலைத்தளத்தின் மூலம் விற்று விடுகிறான். பொருளைப் பார்க் காமல் அதைக் கையாளாமல், கம்ப்யூட்டர் முன்பாக உட் கார்ந்து கொண்டே கோடி கோடி யாய் சம்பாதிக்கிறான். இதுதான் ஊக வணிகம்.

இந்த வியாபாரத்திட்டத் திற்கு, நம் மண்ணில் விளையும் உணவு தானியங்களையும் நம் வயிற்றை நிரப்பும் உணவுப் பொருட்களையும் பலிகொடுத் தால் விலைவாசி உயராதா? உழைத்துப்பிழைக்கும் சாதா ரண ஏழை எளிய மக்களின் கதி என்னாவது? இதை எண் ணிப்பார்த்து தற்போதைய உலக மயம், தாராளமயம், தனியார்மயம் என்கிற ‘டைனோசர்களின்’ பிடியில் சிக்காமல் ஒதுங்கி, முற்போக்கு மாற்றுக்கொள்கையைத் தேர்ந்து ஆட்சி நடத்துவதே மக்களைக் காக்க அரசுக்கு உள்ள ஒரே வழி!

கு.முத்துப்பெருமாள்

கருத்துகள் இல்லை: