வியாழன், 15 ஜூலை, 2010

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நந்தன் நடந்த பாதையை திறந்திடுக! தீண்டாமைச் சுவரை அகற்றப் போராட்டம்: 600க்கும் மேற்பட்டோர் மறியல் - கைது

சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்க ளுக்கும் சம உரிமை வழங் கும் அரசமைப்பு சாசனத் திற்கு விரோதமாக ஆலயத் தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட் டனர்.

சிதம்பரம் நடராசர் ஆல யத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழி யில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்ட தாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர்.

தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட் டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட் டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.

நகரில் உள்ள அம்பேத் கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார்.

தடுப்புச் சுவரை அகற் றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற் றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த் தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித் தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.

பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டி ருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உயர் அதி காரிகள் யாரும் பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப் பிடத்தக்கது. பேச்சுவார்த் தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படு வது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்.

இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர் களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தன சேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந் திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத் கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட் சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலை வர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கட லூர் மாவட்ட அமைப்பா ளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

“சுவரை அகற்றுவோம்”

நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத் தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அத னை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார்.

சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட் டம் நடத்துகிறோம்,” என்றார்.

கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறு கையில், “சாதிக் கொடு மைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறு சுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். புனிதமான நடராசர் ஆல யத்தில் தீண்டாமையின் கோர வடிவமாக சுவர் நீடிப் பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண் டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டா யம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: