புதன், 28 ஜூலை, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூர நாடகம்

இராக் நாடு பேரழிவு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளது என்ற பொய்யைப் பரப்பி இராக் மீது போர் தொடுத்து அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்தது என்பது வரலாறு. தனது நாட்டின் அயலுறவுக் கொள்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற் காக பொய்களையும் வதந்திகளையும் பரப்புதல், போலி நாடகங்களையும் அரங் கேற்றுதல் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஜப்பான் நாட்டின் பிரதமர் ஹடயோமா மேற்கொண்ட ஒரு முயற்சியை முறியடிப் பதற்காக தென்கொரியப் போர்க்கப்பல் ஒன்றை சுட்டு வீழ்த்தி விட்டு பழியை வடகொரியா மீது போட்ட அமெரிக்காவின் வஞ்சக நடவடிக்கை தற்போது அம்பல மாகியுள்ளது.

இது குறித்து கியூபப்புரட்சியின் நாயக ரான பிடல் காஸ்ட்ரோ தனது எண்ணங்க ளைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறு கிறார்:-

ஜூன் 1ந்தேதி இரவு வெனிசுலா தொலைக்காட்சியில் புகழ் பெற்ற பத்திரிகையாளரான வால்டர் மார்டினெஸ் வழங்கிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. வடகொரியா- தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளையும் ஏமாற்றும் விதத் தில் அமெரிக்கா செயல்பட்டுள்ளதை அவர் அந்நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தி னார். ஒகினாவா கடற்படை தளத்தை காலி செய்துவிட்டு அமெரிக்கா வெளி யேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்துடன் அமெ ரிக்கா இந்த நாடகத்தை அரங்கேற்றியுள் ளது. ஒகினாவா கடற்படை தளம் என்பது ஜப்பானின் இதயத்தில் செருகப்பட்ட ஈட்டியைப்போல கடந்த 65 ஆண்டுகளாக பெரும் ரணத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற கருத்து ஜப் பானிய மக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடு வேன் என்ற உறுதி மொழியை அளித்த தால் ஹடயோமாவின் கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து, அத்துடன் அவரால் ஜப்பானின் பிரதமராகவும் ஆகமுடிந்தது. ஆனால் அம்முயற்சியை தனது சதித்திட் டத்தின் மூலம் அமெரிக்கா இப்போது முறியடித்துவிட்டது.

உண்மையில் நடைபெற்றது என்ன என்பது குறித்து வியப்பளிக்கும் செய்தி யை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர் ஒரு அமெரிக்கப் பத்திரிகையா ளர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகா ணத்தைச்சேர்ந்த வெயின் மாட்சன் என்ற பெயர் கொண்ட இவர் தனது இணைய தளத்தில் இந்த சதித்திட்டம் தொடர்பான விபரங்களை பதிவு செய்துள்ளார். அமெ ரிக்க உளவுத்துறையிடமிருந்து திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பலான சியோனான் மீது மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டு வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 40 தென்கொரிய கடற் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடகொரியா தான் இத்தாக்குதலை நடத்தி யுள்ளது என்ற பொய்யான செய்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பரப்பப்பட்டது. தென்கொரிய தீபகற்பத்தில் போர்மூளுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது, அத னைப் பயன்படுத்திக்கொண்டு ஒகினா வா கடற்படை தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று கோரிவரும் ஜப்பானிய பிரதமர் ஹடயோமா மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதே அமெரிக் காவின் நோக்கம் என்பது தெளிவாகி யுள்ளது. அதாவது ஜப்பானுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் அடாவடித்தன மான முறையில் செயல்பட்டுவரும் வட கொரியாவிடமிருந்து ஜப்பானைக் காப் பாற்றுவதற்கு ஒகினாவாவில் அமெரிக்கக் கடற்படைத்தளம் நீடிப்பது அவசியம் என்ற கருத்தை ஜப்பானிய மக்கள் மத்தி யில் ஏற்படுத்துவதற்காகவே இந்த கோர நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஒகினாவா கடற்படைதளம் நீடிக்கலாம் என்ற முடிவை ஹடயோமா எடுத்ததன் மூலம் அமெரிக்காவின் சதித்திட்டம் வெற்றி பெற்று விட்டது. தென்கொரிய படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதனால் ஏற்பட்ட பதட்டமான சூழலில் அத்தகைய முடி வைத்தான் எடுக்க நேரிட்டது என்று ஹடயோமா தெரிவித்துள்ளார்.

ஒலி அலைகளைப் பயன்படுத்தி நீருக்கு அடியில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சக்திமிக்க கருவிகள் தென் கொரியக் கப்பலில் பொருத்தப்பட்டிருந் தன. வேறு ஒரு நீர்மூழ்கிக்கப்பல் அரு கில் இருப்பதையோ நீர்மூழ்கிக்குண்டு எதுவும் ஏவப்பட்டதையோ அக்கருவிகள் பதிவு செய்யவில்லை. குண்டுகளின் துகள்களை ஆய்வு செய்தபோது அந்த நீர்மூழ்கிக்குண்டு ஜெர்மனியில் தயாரிக் கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள் ளது. வடகொரியாவுக்கு குண்டுகள் எதையும் ஜெர்மனி விற்பனை செய்திருக்க வில்லை. எனவே குண்டுவீசித் தாக்கு தல் நடத்தியது வடகொரியா அல்ல என் பதை இந்த ஆதாரங்கள் நிரூபித்துள்ளன. கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு அருகா மையில் உள்ள கடற்பகுதியில் நான்கு அமெரிக்கக்கப்பல்கள் இருந்துள்ளன. எனவே இது அமெரிக்காவின் கைவரிசை தான் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள லாம். தனது நாடு தாக்குதலில் ஈடுபட வில்லை என்பதை வடகொரிய அதிபர் கிம் ஜோங்-இல், சீனத்தலைவர்களிடம் நேரடி யாக விளக்கியுள்ளார். சீனாவும் வடகொரியாவின் விளக்கங்களை ஏற்றுக்கொண் டுள்ளது என்பதுடன் இத்தாக்குதலில் அமெரிக்கக்கடற்படைக்கு தொடர்பு உள்ளது என்ற முடிவுக்கும் வந்துள்ளது. தனது வஞ்சக நோக்கங்களை நிறைவேற் றிக் கொள்வதற்காக பொய்களைப் பரப் புவதிலும் எத்தகைய ஈனத்தனமான நட வடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அமெ ரிக்க ஏகாதிபத்தியம் தயங்காது என்பதற் கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியலில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது என்பதுதான் உண்மை நிலை .

கி.இலக்குவன்


கருத்துகள் இல்லை: