செவ்வாய், 6 ஜூலை, 2010

எண்ணெய் கம்பெனிகள் கொள்ளை லாபம்

இந்திரா காந்தி, 1976இல் பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ போன்ற அந்நிய பெரும் எண்ணெய் நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். தேசியமயமாக்குவ தற்கு முன் இந் நிறுவனங்கள், நம் நாட்டு நுகர்வோரிடம் சர்வதேச விலைக்கு பெட் ரோலியப் பொருட்களை விற்று கொள்ளை லாபம் ஈட்டின.

‘இறக்குமதி விலை முறை’ என்று இதற்குப் பெயரிட்டிருந்தனர். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் லாபத்தை அதிகரித்திடும் வண்ணம், விலைகளை நிர்ணயித்து வந்தன. இது உலகில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். 1976இல் ‘இறக்குமதி விலை முறை’ நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் அரசு அதற்குப் பதிலாக ‘நிர்வாக விலை ஏற்பாடு’ ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, அந்நிய நிறுவனங்களிடமி ருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, உள்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட் ரோலியப் பொருட்களை உருவாக்கி, மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை, அதனை சுத்திக ரிப்பதற்கான செலவு ஆகியவற்றுடன் சிறிது லாபம் வைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய் யப்பட்டன. அவ்வாறுதான் இந்தியாவில் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

1991 இலிருந்து மன்மோகன் சிங் தலைமையில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத் தப்பட்டன. இதனை அடுத்து, நம் நாட் டைச் சேர்ந்த மற்றும் அந்நிய நாடுக ளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் நுழைவு அதிகரித்தது. இவர்கள் இத்த கைய ‘நிர்வாக விலை ஏற்பாட்டினை’ அரசு கைவிட வேண்டும் என்றும், மீண் டும் பழைய ‘இறக்குமதி விலை முறை’க்கே திரும்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

2002இல் பாஜக ஆட்சிக் காலத்தின்போது ‘நிர்வாக விலை ஏற்பாடு’ கைவிடப்பட்டது. கச்சா எண் ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்க ளுக்கு ‘இறக்குமதி விலை முறை’ மீண் டும் கொண்டுவரப்பட்டது. இதன் பொருள், நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் இனி சர்வதேச சந்தையில் உள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலைக்குச் சமமாக நிர்ணயிக்கப்படும். உண்மையில் இன்றையதினம் நாம் நம் முடைய ‘ஓஎன்ஜிசி’ மற்றும் ‘ஆயில் இந் தியா’ நிறுவனங்கள் மூலமாக மிகவும் மலிவான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறோம். அவற்றை மிகவும் குறைந்த செலவினத்தில் சுத்திகரிப்பும் செய்கிறோம். எனவே நம்நாட்டில் பெட் ரோலியப் பொருட்களின் உற்பத்திச் செல வினம் மிகவும் குறைவாகும். ஆயினும் சர்வதேச சந்தை விலைக்கு பெட்ரோ லியப் பொருட்களின் விலையை நிர்ண யம் செய்திட இந்நிறுவனங்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றன. உண்மையில் நாட் டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறு வனங்களும் அளவிடற்கரியவிதத்தில் கொள்ளை லாபத்தை ஈட்டியுள்ளன; ஈட் டிக்கொண்டும் இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்கையில், அவை நஷ்டத் தை அடைந்திருப்பதாகக் கூறுவது மிகப்பெரிய மோசடியாகும்.

2002க்குப் பின், ‘ரிலையன்ஸ்’ , ‘எஸ் ஸார்’ போன்ற நம்நாட்டு தனியார் நிறுவ னங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீது அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை மேலும் தளர்த்திட வேண்டும் என்று கோரி வந்தன. பாஜக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. கிரித் பாரிக் என்பவர் தலைமையில் குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மத்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு, மீண்டும் ‘இறக்குமதி சரிசமநிலை விலை’யை அமல்படுத்தியிருக்கிறது. இவ் வாறு நம் நாட்டு மக்கள், சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

மீண்டும் அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ நம்மைவிட்டுப் போயிருக்கலாம். ஆயினும் அவை நிர்ண யித்த ‘இறக்குமதி சரிசமநிலை விலை’ மீண்டும் திரும்பி வந்திருக்கிறது.

(ஐஎன்என்)

கருத்துகள் இல்லை: