தமிழக முதலமைச்சர் கலைஞர் 28.6.2010 அன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவருடைய கட்சியும் பங்கேற்கிற மத்திய அரசாங்கமும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப் பதை பற்றி கேட்டபோது, அவர்கள் உத்தே சித்திருந்த விலையை விட குறைவான அளவே உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித் துள்ளார். மத்திய அரசாங்கம் ஒரு பெரிய தொகையை உத்தேசித்திருப்பதாக சொன் னால், அதை விட சற்று குறைத்து உயர்த்தி னால் இவருக்கு அதில் வருத்தம் கிடையாது. ஒரு விலை உயர்வு மக்களின் மீது ஏற்படுத் தும் சுமை குறித்த அடிப்படையில் இவர் விலை உயர்வை பரிசீலிக்க மாட்டார். மத் திய அரசாங்கம் சொல்கிற விலை என்பதை அளவுகோலாக வைத்துக் கொண்டு முதல் வர் விலையேற்றத்தை மதிப்பிடுவாரா? அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 150 கோடி ரூபாய் கூடுதல் சுமை வருமாம். மக்கள் நலன் கருதி இவர் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டாராம். தமிழகத்தில் பேருந்துகள் மட்டும் தான் டீசலில் இயங்குவதாக கலைஞர் கற்பனை செய்து கொள்கிறாரா? ஆட்டோ, வேன், டாக்ஸி, லாரி, டிராக்டர் இவையெல்லாம் தண்ணீரில் ஓடுகிறதா? விலை உயர் வால் ஏற்படும் பாதிப்பு இந்த வாகனங்களை பயன்படுத்துவோருக்கு சுமை ஏற்படுத்தாதா?
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 27.6. 2010 பத்திரிகையில் அண்டை நாடுகளில் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் வாயு சிலிண்டர்களின் விலைகளை பட்டியலிட்டு தனக்குத்தானே பாராட்டிக் கொண்டிருக் கிறது. பொதுவாக இப்படி அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு தனக்குத்தானே சபாஷ் போட்டுக்கொள்கிற வழக்கம் தமிழக முதல்வருக்கு மட்டுமே உரித்தானது. ஒரு மாநிலம் அல்லது நாட்டின் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மட்டும் ஒப்பிட்டுக் காட்டி உலகத்தி லேயே தாங் கள் தான் சிறப்பானவர்கள் என்று பெருமை பேசுகிற ஒரு கபடத்தனத்தை மத்திய -மாநில அரசுகள் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்றன. தொழிலாளர் களின் சம்பளம் என்று வந்தால் தமிழக முதல் வர் கேரளாவை ஒப்பிட்டுப் பேச மாட்டார். ஏனென்றால் இந்தியாவிலேயே கேரளா வில்தான் தொழிலாளர் களுக்கான கூலி அதிகம். எனவே, ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்தோடு ஒப்பிடும்போது அந்த ஒப்பீட் டுக்கு தேவையான இதர அம்சங்களையும் கணக் கில் எடுத்துக்கொண்டு ஒப்பிட வேண்டும் என் பது பொருளாதாரத்தின் பாலபாடம். இது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆனால் இதுபற்றி வாய் திறக்கமாட்டார்கள். ஏனென் றால், அது அவர்களுக்கு எதிரானதாக அமையும்.
சம்பளத்தை ஒப்பிடுவதாக இருந்தால் அதை வாங்கும் திறனோடு ஒப்பிட்டுத்தான் சரியான மதிப்பீட்டிற்கு வர முடியும். ஐயா யிரம் சம்பளம் பெரிதா? பத்தாயிரம் சம்பளம் பெரிதா? என்று குறிப்பிட்ட ஊரில் உள்ள இருவரின் சம்பளத்தை ஒப்பிடலாமே தவிர எங்கோயிருக்கிற ஒருவரின் சம்பளத்தை இன்னொரு ஊரில் உள்ள ஒருவரின் சம்ப ளத்தோடு ஒப்பிட வேண்டுமென்றால் இரண்டுபேரும் வீட்டுக்கான வாடகை, உணவு, மருத்துவம், கல்வி, சுகாதாரம் ஆகி யவற்றுக்கு என்ன விகிதத்தில் செலவழிக் கிறார்கள் என்பதை வைத்துத்தான் எது சிறந்த சம்பளம் என்பதை நிர்ணயிக்க முடியும். உதாரணமாக பத்தாயிரம் பெறுகிற ஒருவர் மேற்கண்ட தேவைகளுக்காக ரூ. 9500 செலவழிக்கிறார் என்றும், ஐயாயிரம் சம்பளம் வாங்குகிறவர் மேற்கண்ட தேவை களுக்காக ரூ.4500 செலவழிக்கிறார் என்றும் வைத்துக்கொண்டால் ஐயாயிரம் ரூபாய் சம் பளம் என்பது தான் உயர்வானது. ஆனால், தமிழக அரசு பொதுவாக இப்படி ஒட்டு மொத்தமாக பரிசீலிக்காமல் தனித்தனி விவரங்களை எடுத்து மக்களை திசை திருப் பும் வேலையை தொடர்ந்து செய்து வரு கிறது. அதேபாணியில் மத்திய அரசாங்கமும் செய்து கொண்டிருக்கிறது.
27.6.2010 தேதியிட்ட பெட்ரோல் அமைச் சகத்தின் ஒப்பீட்டுப்பட்டியலில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் ஒப்பிட்டுக் காட் டப்படவில்லை. மண்ணெண்ணெய் விலை யும் கூட ரேசன் கடையில் விற்கப்படும் வறு மைக்கோட்டிற்கு கீழுள்ளோருக்கு விற்கப் படும் விலையே குறிப்பிடப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் மண்ணெண்ணெய்யின் விலை ரூ. 32.-ம், அதற்கு அதிகமாகவும் விற் கப்படுகிறது. அரசாங்கம் ஏன் இத்தகைய புரட்டு வேலைகளிலும், கபடத்தனத்திலும் இறங்க வேண்டும். நாளை ஒருவேளை அரிசி விலை குறித்து ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை 1 ரூபாய் என்று எழுதி ஒப்பிடு வார்களா?
இது உத்தேசித்ததை விட குறைவான உயர்வு என்று முதல்வர் பெருமைப்பட் டுக்கொள்கிறார். அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு பெட்ரோலிய அமைச்சகம் திருப் திப்பட்டுக்கொள்கிறது. இந்திய மக்களால் இந்த விலை உயர்வை தாங்கிக்கொள்ள முடி யும் என்று பிரதமர் உறுதிப்பட தெரிவித் திருக்கிறார். வாய்க்கும் கைக்கும் எட்டாம லிருக்க இந்திய மக்கள் ஒரு மாதத்தில் கூடு தலாக 30 ரூபாய் மண்ணெண்ணெய்க்கு செலவழிக்க முடியும். 35 ரூபாய் சமையல் எரிவாயுவிற்கு செலவழிக்க முடியும். தினசரி காய்கறி, உணவுப்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக் கிற இவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறார்கள்.
இந்தாண்டு பட்ஜெட்டில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் பெருமுதலாளிகளுக்கு தானம் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒவ் வொரு நிமிடத்திற்கும் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயாகும். பெருமுதலாளிகளுக்கு கடந் தாண்டு பட்ஜெட்டில் மூன்று லட்சம் கோடி விட்டுத்தரப்பட்டிருக்கிறது. இந்தியாவின் 110 கோடி ஜனத்தொகையில் ஒரு நூறு குடும் பங்களுக்கு ஒரு ஆண்டில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் விட்டுத்தருகிற அரசாங் கத்தால் 110 கோடி மக்களுக்கு ஓராண்டிற்கு அவர்களின் கணக்குப்படியே 53 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது தொழில்கள் பாதிக்கப்பட்டன. தொழி லாளர்களுக்கு வேலை பறிபோனது. பொது மக்கள் தலையில் கடுமையான சுமையேற் றப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் தொழில்களை பாதுகாக்க என்று இரண்டு முறை மீள் இயக்க நிதி என்ற பெயரில் மக்களின் சொத்து பலநூறு கோடி ரூபாய் களை முதலாளிகளுக்கு வாரி இறைத்தது. ஆனால், தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாக்கவோ, குறைக்கப் பட்ட சம்பளத்தை சரிகட்டவோ எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
தமிழக முதல்வர் அதற்கு அடுத்த நாள் பேட்டியில், தமிழ்நாட்டில் மாநில அரசின் வரி ஏற்கெனவே குறைக்கப் பட்டதாகவும், இதர மாநில அரசுகள் குறைத்தனவா என் றும் கேட்டிருக்கிறார். இடது சாரி அரசுகள் கடந்த காலத் தில் குறைத்துள்ளன. முதல் வர் அவர்கள் சொல்வது போல மாநில அரசுகளின் நிதி வருவாய் குறைந்துள்ள நிலையில், மேலும் இதை மாநில அரசுகள் குறைப்பது சாத்தியமல்ல.
மக்கள் இந்தச்சுமையை தாங்கமுடியும் என்று முதல்வர் நினைத்தால் மத்திய -மாநில அரசுகள் வரியை குறைத் துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
சுமை அதிகம், மாநில அரசுக்கு போதிய வருவாய் உள்ளது என்றால், மாநில அரசு தனது வரியை குறைத்துக்கொள்ளலாம். அதற்கு சாத்தியமில்லை என்பதை முதல் வரும் ஏற்றுக்கொள்கிறார்.
மக்களுக்கு சுமை, மாநில அரசும் தன் வருவாயைக் குறைக்க வாய்ப்பில்லை என் றால் முதல்வர் என்ன செய்ய வேண்டும். மத் திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.
பெருமுதலாளிகளுக்கு ரூ.5 லட்சம் கோடி யை விட்டுக்கொடுத்த மத்திய அரசு, ஏழை மக்கள் மீது சுமையேற்றுகிற போது முதல மைச்சர் அமைதியாக இருக்கிறார் என்றால் என்ன பொருள். தன் வர்க்க பாசத்தின் அடிப் படையில் அமைதி காக்கிறார் அல்லது நியா யம் என்று உணர்ந்த பிறகும் மத்திய அர சின் தயவும் தாட்சண்யமும் வேண்டி பெட் ரோலியப்பொருட்களின் விலை உயர்வை நியாயப்படுத்துகிறார் என்றே பொருள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இந்திய அரசு பெருமுதலாளிகளால் தலைமை தாங் கப்படுகிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என்று குறிப்பிடுகிறது. கடந்த காலங் களிலும் இந்த வரையறைக்கு ஒப்பவே அரசு தனது திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்துள்ளது. ஆனால், அப்போதெல்லாம் அரசுப்பொறுப்பிலிருந்தோர் ஏழைகளின் பெயரைச்சொல்லிக்கொண்டு பெருமுத லாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங் குவதை வழக்கமாகிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது தங்களுடைய முகமூடி களை கழட்டி விட்டு அப்பட்டமாக தாங்கள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை வெளிப்படுத்திக் கொண் டுள்ளனர்.
எனவேதான் திமுக தலைவருக்கு இது அப்படியொன்றும் அதிகமில்லாத விலை உயர்வாய் தெரிகிறது. இந்த உயர்வு மட்டு மல்ல. மத்திய பட்ஜெட்டில் பெருமுதலாளி களுக்கு தரப்பட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் அவருக்கு அப்படியொன்றும் பெரிதல்ல. அதனால் அவருக்கு கவலையில்லை. ஆனால், நம்மைப்பொறுத்தமட்டில் ஏழை களின் மீது சுமத்தப்பட்ட சுமையும், ஏக போகங்களுக்கு வாரியிறைக்கப்பட்ட நிதியும் மிக மிக அதிகம். எனவே, நாம் இதற்கெதி ரான தொடர்போராட்டத்தை நடத்த வேண் டிய நிலையில் உள்ளோம்.
க.கனகராஜ்
சனி, 3 ஜூலை, 2010
விலை அப்படியொன்றும் அதிகம் இல்லை; அதனால் எனக்கொரு கவலையில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக