திங்கள், 12 ஜூலை, 2010

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ

கியூபா முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நோயால் பாதிக்கப்பட்டது முதல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

அவரது உடல்நிலை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் காஸ்ட்ரோ, ஹவானாவில் உள்ள தேசிய அறிவியல் நிலையத்திற்கு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

83 வயதாகும் காஸ்ட்ரோ, புன்சிரிப்புடன் தேசிய அறிவியல் நிலைய அதிகாரிகளுடன் பேசும் படங்கள் இணையப் பக்கத்தில் வெளிவந்துள்ளன.

அப்படங்களைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல்கள் கூறின.

கருத்துகள் இல்லை: