புதன், 14 ஜூலை, 2010

எத்தனை வக்கிரமான மகிழ்ச்சி உங்களுக்கு?


-தீபங்கர் முகர்ஜி

இந்திய மக்களின் தேவை களில் 75-80 சதவீதப் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படு கிறது. எனினும், கச்சா எண்ணெய் சுத் திகரிப்பில் நமது நாடு தன்னிறைவுக் கும் மேலான நிலையை அடைந்து விட்டது. உள்நாட்டுத்தேவைகளை விடக் கூடுதலாக உற்பத்தி செய்யப் படுகிறது. 2009-2010ஆம் ஆண்டில் 28 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய் துள்ளது. 10 மில்லியன் டன் பெட்ரோ லியப் பொருட்களை இறக்குமதி செய் துள்ளது.

மே 2009ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அப்போது கச்சா எண்ணெய் சர்வதேச விலை ஒரு பேரலுக்கு 70 டாலராக இருந்தது. அதாவது, லிட்டர் ஒன்றுக்கு ரூ.21.43 ஆக இருந்தது. இன்று கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 77 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ.22.43 ஆக உள் ளது. ஒரு பேரல் என்பது உத்தேசமாக 160 லிட்டராகும். எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 70பைசா உயர்ந்துள்ளது. ஆனால், பெட்ரோலுக்கு ரூ.6.44 உயர்த்தியதை எவ்வாறு நியாயப்படுத் தப்போகிறீர்கள் திருவாளர் முரளி தியோரா அவர்களே?. கடந்த நான்கு மாதங்களில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.55 உயர்ந்துள்ளது. மண்ணெண் ணெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது.

ஜூன் 26, 2010 அன்று பெட்ரோ லியத் துறை அமைச்சரான நீங்கள், ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்தி ரிகைக்கு அளித்த பேட்டியில், “நாட் டின் நலனைப் பெரிதாகக் கருதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களை அரசு பேணுகிறது. நவரத்தினங் கள் மற்றும் மகாரத்தினங்கள் என்ற ழைக்கப்படும் நிறுவனங்களைத் திவாலாகும் நிலைமையிலிருந்து காப் பாற்ற அரசு பாடுபடுகிறது. மேலும், அரசு, நுகர்வோரின் நலனையும் காப்பாற்றுகிறது.” என்று கூறினீர் கள் உண்மைதானா? பெட்ரோலியத் துறையின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கையைப் பார்ப்போமா?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மிகப் பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனம்.

2008-2009, ஐஓசி அளித்துள்ள வரவு-செலவு அறிக்கையில் அதற்கு முன் இல்லாத வகையில் மொத்த விற்பனையின் அளவு ரூ.2,85,337 கோடியாகும். அனைத்து செலவு களையும் நீக்கிய பின்னர் நிகர லாபம் ரூ.2,950 கோடி ஆகும்.. அதுவும் விலை உயர்வுக்கு முன் பெட்ரோல், டீசல், பொது விநியோகத்திற்கான மண்ணெண்ணெய் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விற் பனையினால் ஆகும். உலகத்திலுள்ள 500 பெரிய நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கம்பெனி 116வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் 18வது பெரிய நிறுவனம் ஆகும். 2009-2010 நிதிநிலை அறிக்கையில் (2009 டிசம்பர் இறுதிவரை மட்டும்) வரி கழித்தது போக, இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4663.78 கோடியாகும். அதேசமயம், மொத்த விற்பனை அளவு ரூ.2,08,289.46 கோடியாகும்.

மூச்சைப் பிடித்துக் கொள் ளுங்கள். மார்ச் 31, 2010 ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைப்படி இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் ரூ.10,998 கோடியாகும். கையிருப்பு நிதி மற்றும் உபரி நிதியின் மதிப்பு ரூ.49,472 கோடிகளாகும்.

2009-2010ஆம் ஆண்டு இந்தி யன் ஆயில் கம்பெனி செலுத்திய எக்சைஸ் வரி ரூ26,050 கோடியாகும். மற்ற வரியினங்கள் ரூ.4049 கோடிக ளாகும். மேலும், இந்திய அரசுக்கு தனது பங்காதாயமாக 2007-2008ம் ஆண்டில் ரூ.656 கோடி அளித் துள்ளது. 2008-2009ம் ஆண்டில் ரூ.910 கோடி அளித்துள்ளது. 2009-2010ம் ஆண்டில் ரூ.3,000கோடிக்கும் அதிகமாக அளிக்கும்.

மற்ற இரு நிறுவனங்களான ஹிந் துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனி மற்றும் பாரத் பெட்ரோலியம் கம்பெ னிகள் முறையே ரூ.544 கோடி மற்றும் ரூ.834 கோடி(2009 டிசம்பர் வரை மட்டும்) லாபம் ஈட்டியுள்ளன.

தியோரா அவர்களே, கோடிகளைச் சம்பாதிக்கும் நிறுவனங்களைத் திவா லாகப் போகும் நிறுவனங்கள் என்று கூறுவதில் உங்களுக்குத்தான் எவ் வளவு வக்கிரமான மகிழ்ச்சி! உண் மையிலேயே மத்திய அரசு தான் திவா லாகியுள்ளது. மத்திய அரசுக்குச் சொந் தமான நிறுவனங்களையே தரக் குறைவாகக் கூறுவது, தனது மறை முகத் திட்டத்தை நிறைவேற்றுவதற் காக மட்டுமே.

இதோ ஒரு சுவாரஸ்யமான விஷ யம். திவாலான நிறுவனங்களையெல் லாம் அழைத்து ரே பரேலியிலுள்ள ராஜீவ் காந்தி பெட்ரோலியம் இன்ஸ் டிட்யூட்டுக்கு ரூ.250கோடி அன் பளிப்பு அளிக்கச் சொல்லியுள்ளனர்.

இந்தியன் ஆயில் கம்பெனியின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில், ரூ.65,000 கோடி மதிப்பிலான திட்டத் திற்கு இந்திய அணுசக்திக் கழகத் தில் முதலீடு செய்வதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. இந்திய அணுசக்திக் கழகத்துடன் இணைந்து அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் நுழைந் துள்ளது. மிக அதிகச் செலவு பிடிக்கும் இத்திட்டத்தில் மிகக் குறைவான லாபத்தையே அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் முரளி தியோரா, இதுவா திவாலாகும் நிறுவனம்?

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’இலிருந்து

தமிழில்: எஸ்.சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை: