திங்கள், 25 அக்டோபர், 2010

அரசநீதி

மதகாவோ நாட்டு அரசனுக்கும், போர்னி காஸ்கர் நாட்டு அரசனுக்கும் ஒரு தகராறு ஏற்பட்டு விட்டது. மதகாவோ அரசன் போர்னி காஸ்கர் அரசனுக்குப் பின் வரும் கடிதம் எழுதினான்:

“இந்த விசயம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டுமானால், அதற்கு முன் உங்கள் தூதரை என் தலைநகரிலிருந்து நீங்கள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.”

போர்னிகாஸ்கர் அரசனுக்கு இது அத்து மீறிய கோரிக்கையாக இருந்தது. அதனால் இவன் கோபமடைந்து மதகாவோ அரசனுக்குக் கடிதம் எழுதினான்.

“என் தூதரை நான் திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது. மேலும், உங்கள் கோரிக்கை யை நீங்கள் வாபஸ் பெறாவிட்டால் நான் என் தூதரை வாபஸ் வாங்கிக் கொள்வேன்”

இந்த மிரட்டலைக் கண்டு மதகாவோ அரசன் அஞ்சி நடுங்கினான். அவன் போர்னி காஸ்கர் அரசனின் காலில் விழுந்து அவனது முடிவை ஏற்றுக்கொண்டான்.

அமெரிக்க எழுத்தாளர் அம்புரோஸ் பீயர்ஸின் குட்டிக்கதை

கருத்துகள் இல்லை: