புதன், 24 நவம்பர், 2010

புதுச்சேரியில் இலவச வேட்டி -சேலை ஊழல்


இலவச வேட்டி -சேலை மற்றும் மிதிவண்டி வழங்கும் திட்டங்களில் ஊழல், முறைகேடு செய்த புதுச்சேரி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், முறை கேடுகளும் தாண்டவமாடு கிறது. மக்கள் நலத்திட்டங் களை செயல் படுத்துவதில் விதிமுறைகளை மீறி வருகிறது. இதனால் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வேறொரு திட்டத்திற்கு திருப்பி விடுவது பல்லாங்குழி ஆட்டம் போல் உள் ளது.

மாநில துணை நிலை ஆளுநர் இந்த ஆண்டு ஜூலை 29-ல் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையில் திட்டமிடப் பட்ட தொகைக்கும் கூடுத லாக ரூ. 1.74 கோடி எடுக் கப்பட்டுள்ளது. நிதித் துறைக்கு தெரியாமல் 2009-2010-ம் நிதியாண்டின் முடி வில் கடைசி தேதியில் பணம் பெறப் பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத விதி மீறல் கள் என எச்சரித்துள்ளார்.

இலவச வேட்டி - சேலைத்திட்டத்திற்கு தேவை யான துணிகள் கூட்டுறவு நெசவாலை கழகங்களிடம் இருந்து கடந்த காலங்களில் பெறப்பட்டது. ஆனால், தற் போது கூட்டுறவு நிறுவனத் தில் இருந்து துணிகளை கொள்முதல் செய்வதை ரத்து செய்து, வெளிச் சந் தையில் வாங்க சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி முடிவு செய்துள்ளார். அதன் படி நடப்பு ஆண்டிற்கு 3.50 லட்சம் குடும்பங்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ. 480 வீதம் இலவச வேட்டி -சேலை வழங்கிட தீர்மானிக்கப்பட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்திற்கு 10 நிறுவனங்களிடம் இருந்து ஏல ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு இருந்தன. முதல் இரண்டு நிறுவனங் களுக்கு உரிய சீல் இடப் பட்ட ஏல அறிவிப்பு ஒப்பந் தங்கள் ஏற்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் சீலி டப்பட்ட ஓப்பந்த அறிவிப் புகளை பரித்துக் கூட பார்க் கவில்லை. தலைமைச் செயலாளருக்கு வந்த புகாரின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரமற்ற துணி என கண் டறியப்பட்டுள்ளது.

அதே போல், இலவச சைக்கிள் திட்டத்திற்கும் தனியார் ஏஜென்சிடம் கொள் முதல் செய்ததால் சைக்கிளின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு திட்டங் களிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப் பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மீது துணை நிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்த ரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வி. பெருமாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்கள் நலத்திட்டங்கள் அமல் படுத்துவதில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட் டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து நவம்பர் 29 அன்று துணைநிலை ஆளுநர் மாளிகை உள் ளிட்ட மூன்று மையங் களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பெரு மாள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: