வெள்ளி, 26 நவம்பர், 2010

காங்கிரஸ் கட்சிக்கு மறக்கமுடியாத அடி


பீகார் மாநிலத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று மார் தட்டிய காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் முடிவு மறக்க முடியாத அடிதான்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவரது புதல்வர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பீகார் மாநிலத்தை சீரழித்து விட்டதாக சாடினார்கள். இந்தியாவிலேயே பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்க அக்கட்சிகளே காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பீகாரை வளமான பாதைக்கு கொண்டுசெல்லமுடியும் என்றும் வறுத்தெடுத்தனர்.

உண்மையிலே பீகார் மாநிலம் ஏழ்மை நிலை யில் இருப்பதற்கு அம்மாநிலத்தை 50 ஆண்டு கள் ஆண்ட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என் பதை அனைவரும் அறிவர். இதையெல்லாம் அம் மாநில மக்கள் மறந்திருப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்ததுதான் பரி தாபம். தாங்கள் பேச்சுக்கு மக்கள் எந்த அள விற்கு மதிப்பளிக்கிறார்கள் என்பது இப்போது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனித்து நின்று கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது போல் பீகாரிலும் அந்த பார்முலா எடுபடும் என்று ‘இளவரசர்’ ராகுல் எதிர்பார்த்தார். ஆனால் அந்த பார்முலாவிலும் பீகார் மக்கள் மண்ணை அள் ளிப் போட்டு விட்டனர். அதுவும் வட இந்தியா வில் இளம் தலைவர் ராகுல் காந்தியால் காங்கி ரஸ் கட்சி புத்தெழுச்சி பெற்று வருகிறது என்று ஊர் ஊராக அக்கட்சியினர் தம்பட்டம் அடித்து வந்த நிலையில் இந்த மரண அடி கிடைத் திருக்கிறது.

பீகார் மாநிலத் தேர்தலில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் சாதி அரசியலை அம்மாநில மக்கள் நிராகரித்திருப்பதுதான். யாதவ், குர்மி, தலித் என சாதி ரீதியாக மக்களை பிளவு படுத்தி அரசியல் நடத்திய கட்சிகளுக்கு மக்கள் செவி சாய்க்காமல் அரசியல் ரீதியாக வாக்களித்துள்ளனர். சாதி ரீதியாக மக்கள் வாக்களித்திருந்தால் யாதவ சமூகத்தை சேர்ந்த லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் படுதோல்வியை கண்டிருக்க முடி யாது. எந்தவிதக் கொள்கையும் இல்லாமல் அரசி யல் அதிகாரம் ஒன்றே குறிக்கோளாக செயல் படும் லாலு கூட்டணிக்கும் இந்த தேர்தல் நல்ல படிப்பினையை கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் இது பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. நிதிஷ்குமார் செல்வாக்கில் பாஜக ஆதாயம் அடைந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு கடந்த ஐந்தாண் டில் நவீன தாராளமயக் கொள்கைகளையே முழுமையாக அமலாக்கியது. எனினும் முந்தைய லாலு கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, நிலப்பிரபுக் களின் தனியார் படைகளது அட்ட காசம் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஷ் ஆட்சியில் ஒரளவு கிடைத்த நிவாரணம் தான் இந்த வெற்றிக்கு காரணம். காவல் நிலை யத்திற்கு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும், அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் நிச் சயம் இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தி யது மக்களிடம் ஒரளவு எடுபட்டுள்ளது.

அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு எதிராக வலுவான ஜன நாயக சக்திகள் இல்லாததும் இடதுசாரிக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவும் மதவாத பாஜக அடைந்துள்ள வெற்றியும் ஆரோக்கியமான அர சியலுக்கான அறிகுறி அல்ல

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அறிஞர் அண்ணா அவர்கள் ஆச்சாரியருடன் சேர்ந்து காங்கிரசை அழித்தார்.அதே போல பீகாரில் பி ஜே பி யுடன் சேர்ந்து நிதீசு குமார் காங்கிரசை அழித்துள்ளார்.அடுத்த தேர்தலில் அவருக்குப் பி ஜே பி ஆதரவும் தேவையிருக்காது.ராம் மனோகர் லோகியாவின் மாணவரான இவர் பி ஜே பி யை வைக்க வேண்டிய இடத்திலே வைத்துள்ளார். தமிழ் நாட்டிலும் காங்கிரசு எனும் காகிதப் புலி யாருடன் கூட்டணி வைத்தாலும் அழியப் போகிறது இந்த முறை. ஆட்டம் போடும் சோமாரிகள் காமராசரின் கால் தூசிக்குக் கூடச் சமமில்லாதவர்கள்.இவர்கள் காமராசர் ஆட்சியென்றெல்லாம் தமிழர்களை ஏமாற்ற முடியாது. தி மு க இவர்களைத் தூக்கியெறிவதே நல்லது.மற்றத் தமிழ்க்கட்சிகள் பார்ப்பனீய ந்டிகையின் காலடியை விட்டு மானத்தைக் காப்பாற்றி வர வேண்டியது தான்.

விடுதலை சொன்னது…

1925அன்றே பெரியார் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே என் முதல்வேலை என்றார்
1947அன்று காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடவேண்டும் என்றார்
1957 அன்று முதல் காங்கிரஸ் அல்லாத மாநில ஆட்சியை அதைத்து முதல் மரண அடியை கொடுத்தணர் கம்யூனிஸ்ட்கள் கேரளாவில்.

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

விடுதலை சொன்னது…

வெறும் 10 சதவித ஓட்டுக்களை மட்டுமே பெற்று நிதிஸ் வெற்றி பெற்றார் ஒட்டு மொத்ததில் மக்கள் தோற்றனர் .

அருள் அவர்களுக்கு சாதி மட்டுமா பணம் அதிகாரம் மதம் எல்லாம்தான் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி