வியாழன், 9 டிசம்பர், 2010

வேட்டையாடப்படுகிறார் ஜூலியன் அசாங்கே!



“ அன்டா கா கசம்

அபு கா ஹுக்கும்

திறந்திடு சீசேம்! ”

என்றெல்லாம் உச்சரிக்காமலேயே அமெரிக்காவின் ரகசிய மோசடி ஆவணங்களை வெளியில் கொண்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் அடைக்கலம் புகும் நாடுகளைப் பட்டியலிட்டால் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரிட்டனும்தான் இருக்கும்.

அவர்களையெ

ல்லாம் பாதுகாக்கும் வேலையைத்தான் அரசுகள் செய்யும். “தங்கள் சதி வேலையை அம்பலப்படுத்திவிட்டார் என்பதற்காக ஜூலியன் அசாங்கேயை முடக்கவே அவசர, அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள்” என்று விக்கிலீக்ஸ் இணையதள அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்வீடனில் ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதியன்று ஒரு கருத்தரங்கத்தில் அசாங்கே கலந்து கொண்டார். அதற்காக ஸ்டாக்ஹோம் நகரில் தங்கியிருந்த அவர் இரண்டு முறை பாலியல் பலாத்காரத்தில்

ஈடுபட்டார் என்று ஸ்வீடன் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்கள் அவர்களாகவேதான் அசாங்கேவைச் சந்தித்தனர் என்பதையும் காவல்துறையே கூறியுள்ளது. பலாத்காரம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அசாங்கேயின் தரப்பிலிருந்து கூறுகிறார்கள்.

நான்கு ஆண்டுகள் வரை அவரைச் சிறையில் தள்ளுவதற்கான ஏற்பாடுகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்கால வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் குறித்து ஏராளமான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெ

ளியிட்டு வருகிறது. இதில் தெரிந்த இராக்கியப் பொதுமக்களை அமெரிக்க ராணுவம் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ மிகவும் பரபரப்பாக்கியது. இதுதான் அமெரிக்காவின் கோபத்திற்கு இட்டுச் சென்று ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் நாடுகளில் அசாங்கேயை வேட்டையாடும் நிலைமை உருவானது. கைது செய்தி வெளியானவுடன் அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. தி ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகையில் வாசகர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

ஜூலியன் அசாங்கே ஆஸ்திரேலியாவின் கதாநாயகன்.

ஒரு ஊடகம் எதைச் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவர் இவ்வளவு காலமாகச் செய்து வந்தார். ஊழல்வாதிகள் மற்றும் பொய்யர்களை அவர் அம்பலப்படுத்தினார். 2000த்தின் துவக்கத்தில் விக்கிலீக்ஸ் இருந்திருந்தால் உளவுத்துறை தகவல்கள் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய நாடகங்கள் அம்பலமாகியிருக்கும் என்கிறார் கிரிஸ் என்ற வாசகர். அமெரிக்க மக்களிடம் விக்கிலீக்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது என்று அசாங்கே குறிப்பிட்டிருந்தார். இதுதான் அமெரி

க்க அரசுக்குக் கோபம் வந்ததற்குக் காரணம் என்று வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.பிரிட்டனின் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசைக் குறை கூறியுள்ளார்கள். ஆஸ்திரேலியக் குடிமகனான அசாங்கே, கைது செய்யப்படுமளவுக்கு எந்த ஆஸ்திரேலியச் சட்டங்களை மீறியுள்ளார் என்ற கேள்விகளை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்புகிறார்கள். கைது நியாயமற்றது என்றும், அவருக்கான பிணைத்தொகையைக் கட்ட தயார் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூறியுள்ளனர்.


விக்கிலீக்ஸ் பற்றி பிடல் காஸ்ட்ரோ
“விக்கிலீக்ஸ் இணையதளம் பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கான நோக்கம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை வெளியிடும் ஆவணங்களை சந்தேகிக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் பெரிய, பெரிய முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.”


நெருக்கடிகள்


விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு நிதியுதவி செய்து வந்த ஜெர்மனி நிறுவனம் ஒன்றை குறிவைத்துள்ளார்கள். கணக்குகளை ஒப்படையுங்கள் என்று ஜெர்மனியின் அரசு மூலம் நெருக்கடி தருகிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் விக்கிலீக்சின் வங்கிக்கணக்கு மூடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்தும் பே பால் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை மூலமாக விக்கிலீக்ஸ் கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு தடை விதித்துள்ளார்கள்.


பணி தொடரும்..

“எங்கள் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாங்கேயைக் கைது செய்திருந்தாலும் செயல்பாடுகள் பாதிக்கப்படாது. தொடர்ந்து பல்வேறு ரகசிய செய்திகளை எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம்” - விக்கிலீக்ஸ்


இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தோம்..

“விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் மகிழ்ச்சி தெரிவித்தார். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்
.

கருத்துகள் இல்லை: