கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்ற செம்மொழித் தமிழ் பழமொழியை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஆ.ராசாவை காப்பாற்றுவதற்கு பயன் படுத்தியிருக்கிறார் (முரசொலி 7.12.2010). முதலமைச்சர் சொல்வ தைத்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த 17 நாட்களாக சொல்லி வருகின்றன.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது என்று மத்திய அரசின் தலைமை கணக் குத் தணிக்கை அதிகாரியே மதிப்பீடு செய் திருக்கிறார். இதுபற்றி தீர விசாரித்தால்தான் மெய் (உண்மை) வெளிவரும் என்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்கின்றனர். செம்மொழித் தமிழ் பழ மொழியை செயல்படுத்த விடாமல் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருப்பது திமுகவும் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தானே!
தீர விசாரித்து மெய்யை அறிய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்ததல்ல. மலையளவு நடந்துள்ள ஊழலின் முனை தெரியும்போதே பிரதமர் மன்மோகன் சிங் குக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி கடிதம் எழுதியிருக்கிறார். இன்று நேற்று அல்ல ,2008 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ம் தேதி முதல் கடிதமும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
* முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் உரிமம் வழங்குவதும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதும் முற்றி லும் தன்னிச்சையானப் போக்காகும்; ஊழ லுக்கு வழிவகுக்கும்.
* இத்தகைய திட்டம் போலி நிறுவனங் களை ஊக்குவிப்பதாகும். உரிமங்களையும் அலைக்கற்றைகளையும் குறைந்த விலைக்கு பெற்றவர்கள், தங்களின் பங்குகளையும் நிறுவனங்களையும் கொள்ளை லாபத்திற்கு விற்க வழிவகுக்கும்.
* அலைக்கற்றை ஒதுக்கீட்டின் விலை யை 1650 கோடி ரூபாயாக நிர்ணயிப்பது நாட் டின் அரிய வளத்தை தாரைவார்ப்பதற்கு சம மாகும். மேலும் 2001 ம் ஆண்டின் விலையை 2008 ம் ஆண்டில் பயன்படுத்தவே கூடாது என்று 29.2.2008 அன்று எழுதிய கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டிருக்கிறார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா பொறுப்பிலுள்ள தொலைத்தொடர்பு அமைச்ச கத்தின் கொள்கை அரசுக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை 18.11.2008ல் எழுதிய இரண்டாவது கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டின் விலை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்ற இந்த அமைச்சகத் தின் ஊகத்திற்கு ஏற்ப விதிமுறைகள் உரு வாக்கப்படவில்லை. குறைந்த விலைக்கு உரி மங்களை பெற்றவர்கள் கொள்ளை லாபத் திற்கு விற்று விட்டார்கள் அல்லது விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 1537 கோடி ரூபாய்க்கு 13 வட்டங்களுக்கு உரிமங்களை யும் அலைக்கற்றையையும் பெற்று, அவற்றை ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் எடிசலாட் நிறு வனத்திற்கு 6000 கோடி ரூபாய்க்கு விற் றுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் 4500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கவனிக்கவேண்டிய முக்கிய அம் சம் என்னவென்றால், ஸ்வான் டெலிகாம் ஒரு பைசா செலவில்லாமல் வாங்கி விற்பது என்ற கைமாற்று மூலமே லாபத்தை அடைந்துள்ளது.
இதேபோல் யுனிடெக் என்ற நிறுவனமும் 23 வட்டங்களுக்கான உரிமங்களையும் அலைக்கற்றைகளையும் 1651 கோடி ரூபாய்கு வாங்கி, டெலிநார் என்ற நார்வே நிறுவனத் திற்கு கைமாற்றியதில் பெற்ற தொகை 6120 கோடி ரூபாய். இதிலும் அரசுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் பல நிறுவனங்களும் இதே முறையில் ஆதாயமடைந்துள்ளன. இப்போது (18.11. 2008) கிடைக்கின்ற தகவல் படி அரசுக்கு மொத்தம் 60ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுவரை இல்லாத அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதால், வழங்கப் பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வளவு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்கு பொறுப்பானவர் களைக் கண்டறிய பொருத்தமானதும் சுயேச் சையானதுமான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இரண்டு ஆண் டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட வில்லை. அதுமட்டுமல்ல இந்த கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூட எழுதவில்லை என்பதுதான் வேதனை.
கடந்த மக்களவைத் தேர்தல் காலத்தில் (2009) ஆ.ராசாவின் ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு பிரச்சனை எழுப்பப்பட்டதும் நினைவிருக்கும். மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதே ஊழல் குற் றச்சாட்டில் சிக்கியுள்ள ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கக்கூடாது என்ற கருத்து பத்திரிகைககளில் பரவலாக வெளி வந்ததும் அனைவரும் அறிந்த விஷயம்தான்.
தொலைத்தொடர்புத் துறையின் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியது. புதிதாக உருவான 122 நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றை ஒதுக்கியதால் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயும், சிடிஎம்ஏ ஆபரேட் டர்கள் இரட்டை தொழில் நுட்பத்தை பயன் படுத்த அனுமதி அளித்ததன் மூலம் 36 ஆயி ரம்கோடி ரூபாயும், ஜிஎஸ்எம் ஆபரேட்டர்கள் தங்களுக்கு ஒதுக்கிய 6.2 மெகா ஹெர்ட்ஸ் ஸை விட கூடுதல் அலைக்கற்றையை ஆக் கிரமித்ததால் ஏற்பட்ட 30 ஆயிரம் கோடி ரூபாயும் என மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரம்கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கிடைத்த தகவல் அடிப்படையில் 31.5.2010 அன்று மீண்டும் சீத்தாராம் யெச்சூரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளையும் தற்போ துள்ள கொள்கையையுமே பின்பற்றுகிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் 24. 5.2010 அன்று தெரிவித்த கருத்தை அந்தக் கடிதத் தில் யெச்சூரி மறுத்திருக்கிறார். இந்த சட்டத் தின் பிரிவு 11 (1) (ஏ)-ன் படி தொலைத் தெடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்து ஆலோசனை செய்வது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகளில் அரசு மாற்றம் செய்யலாம். ஆனால் மீண்டும் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை அமைச்சர் ராசா மீறி யிருக்கிறார். எனவே அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது. இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல், வெளியேறுதல் தொடர் பான விதிமுறைகளை சரியாக பின்பற்றாத தால்தான் ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவ னம் உரிமம் பெற்ற சில மாதங்களிலேயே அவற்றை விற்க முடிந்துள்ளது.
2001 ம் ஆண்டு விலைக்கே இப்போதும் விற்பது எதார்த்தமாகாது என்று ஒழுங்கு முறை ஆணையம் கூறியதையும், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகா ரிகளின் ஆலோசனைகளை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக அமைச்சரே முடிவெடுத் துள்ளார் என்று அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
உரிமம் கோரும் நிறுவனங்கள், ஒதுக்கீடு விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை 2007 அக்டோபர் முதல் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 25 என மாற்றியது ஏன் என்று தில்லி உயர்நீதிமன்றம் 2009 ஜூலை 1, நவம்பர் 24 ஆகிய தேதிகளில் நடந்த விசா ரணையில் கேள்வி எழுப்பியிருப்பதோடு ஆட்டம் தொடங்கிய பின் விதியை மாற்றுவது போன்றது இது என்றும் கூறியுள்ளது. இத னை சீத்தாராம் யெச்சூரி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் ஒரு சில மணிநேர அவகாசத்தில் பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதும் குறிப் பிட்ட நபர்கள் ஆதாயம் அடைவதற்கு வழி வகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கட்டத்தில் தான் (31.5.2010) அமைச் சர் ராசாவை பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த முறை கேட்டில் தொடர்பு இருப்பதாக பூர்வாங்க ஆதாரம் உள்ள அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த சூழ்நிலையில் மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையிலும், உச்சநீமன்றத்தி லும் ஆ. ராசாவுக்கு எதிராக சுட்டு விரல் நீண் டதால் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
நாட்டையே உலுக்குகின்ற, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயி ரம்கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? எல்லா பக்கங்களிலிருந் தும் குற்றச்சாட்டுக் கணைகள் புறப்பட்டு வந்து, பிரதமர் உட்பட பலர் மீதும் தாக்குகிற போது தப்பித்துக் கொள்ளத்தானே நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணையை ஏற்க முடியாது என பிடிவாதம் பிடிக்கிறது திமுக வும் அங்கம் வகிக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற செம்மொழித் தமிழ் பழமொழியை உண்மை யாக முதலமைச்சர் கருணாநிதி நம்புகிறார் என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொள்ளுமாறு பிரதமருக்கு பரிந்துரைசெய்ய வேண்டும்.
இல்லையென்றால் முதலமைச்சர் கலைஞரின் வாதம் பொய்... பொய்... பொய் என் றாகிவிடும்.
-மயிலை பாலு
புதன், 8 டிசம்பர், 2010
கலைஞரின் வாதம் மெய்யா? பொய்யா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக