சனி, 11 டிசம்பர், 2010

கான்கன் பருவநிலை மாற்ற மாநாடு பணக்கார நாடுகளுக்கு பயப்படும் இந்தியா


மெக்சிகோவில் நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில், வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இந்தியா மேற்கொண்டுள்ள நிலைபாட்டை இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் கடுமையாக எதிர்த்துள்ளன.

புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பருவநிலை மாற்றம் தீ விரமடைந்து வருகிறது. இது உலகையே அச்சத்தில் ஆழ்த் தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை உள் ளிட்ட உலக நாடுகளின் அமைப்புகளது கவனத்தை ஈர்த்துள்ள இந்தப்பிரச்சனையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள், இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவருகின்றன.

குறிப்பாக, தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே அதிக அளவு கரியமில வாயுக் கழிவை வெளியிட்டு வருகின்றன. இந்த கழிவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதே, புவி வெப்ப மடைவதற்கு முக்கியக் காரணம் என கண்டறி
யப்பட்டுள்ளது. எனவே வளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியிடும் கரியமில வாயுக்கழிவின் அளவை கணிசமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வளர்முக நாடுகள் வலியு றுத்தி வருகின்றன. ஆனால் வளர்ச் சியடைந்த நாடுகள் அதை ஏற்க மறுத்து வருகின்றன.

பருவநிலை மாற்றம் தொடர் பாக கடந்த ஆண்டு கோபன் ஹேகன் நகரில் 12 நாட்கள் ஐ.நா. சபை சார்பில் உலக உச்சிமாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது மெக்சிகோவின் கான்கன் நகரில் ஐ.நா. சபையின் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்று வரு கிறது. கோபன்ஹேகன் மாநாட் டை போலவே, கான்கனிலும் கரிய மில வாயுக்கழிவின் அளவை குறைப்பது தொடர்பாக வளர்ச்சி யடைந்த நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும் இடையே முரண்பா டும் மோதலும் நீடிக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

இம்மாநாட்டில் இந்தியா சார் பில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பங் கேற்றுள்ளனர்.

கடந்த மாநாட்டில் வளர்ச்சிய டைந்த நாடுகள் தங்களது கரியமில வாயுக்கழிவின்அளவை கணிச மாகக் குறைத்துக்கொள்ள வேண் டும்; வளர்முக நாடுகள் தங்களது கழிவின் அளவை கட்டுப்படுத்துவ தற்கான தொழில்நுட்பங்களை வளர்ச்சியடைந்த நாடுகள் செய்து தரவேண்டும்; அந்தத் தொழில் நுட் பங்களுக்கான நிதி உதவியையும் கணிசமான அளவிற்கு வளர்ச்சி யடைந்த நாடுகள் தர வேண்டும் என்று இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்முக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களது கரியமில வாயுக் கழிவின் அளவை பெருமளவிற்கு குறைத்துக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாக அறிவித்ததால் முந்தைய கோபன்ஹேகன் மாநா டும், அதைத்தொடர்ந்து நடை பெற்ற அமைச்சர்கள் மட்டத்தி லான பேச்சுவார்த்தையும் தோல்வி யடைந்தன.

இந்தப்பின்னணியில் கான்கனில் நடைபெறும் தற்போதைய மாநாட் டில் புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து, மூழ்கும் அபாயத்தில் சிக்கியுள்ள சிறு தீவு நாடுகளும் அவற்றின் பெயரைச் சொல்லி வளர்ச்சியடைந்த நாடுகளும், கரியமில வாயுக்கழிவின் அளவை குறைப்பது உள்ளிட்ட மிக முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக உலகின் அனைத்து நாடுகளும் சட் டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப் பந்தத்தை ஏற்றுக்கொள்ளவேண் டும் என்று கூறியுள்ளன. ஆனால் உலகிலேயே மிக அதிக அளவில் கழிவை வெளியிட்டு புவியின் வெப் பநிலை அதிகரிக்க அடிப்படைக் காரணமாக இருக்கும் அமெரிக்கா, எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில், சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வளர்முக நாடுகளால் ஏற்க முடியாதது என்று இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிலைபாடு மேற்கொண்டன.

ஆனால், இந்தியாவின் அதிகா ரப்பூர்வ இந்த நிலைபாட்டை மாநாட்டில் உரத்துக்கூறவேண்டிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒவ்வொரு நாளும் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். கோபன் ஹேகன் மாநாட்டிலும் இந்தியா வின் நிலைபாட்டை, முதலில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஆத ரவாக மாற்ற முயற்சித்த ஜெய்ராம் ரமேஷ், கான்கன் மாநாட்டிலும், சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்க இந்தியா தயா ராக இருக்கிறது என்றும், உலக நாடுகள் அனைத்தும் இதை ஏற் றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது இந்தியாவின் அடிப்படை யான நிலைபாட்டிற்கு எதிரானது மட்டுமின்றி, உலக அரங்கில் வளர்ச் சியடைந்த நாடுகளின் சூழ்ச்சிக ளுக்கு எதிராக அணிசேர்ந்துள்ள வளர்முக நாடுகளின் ஒற்றுமைக்கே உலை வைக்கும் என்று உலக சுற்றுச்சூழல் - அரசியல் நோக்கர் கள் கூறியுள்ளனர்.


சிபிஎம் கண்டனம்


கான்கன் பருவநிலை மாற்ற மாநாட்டில் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தன்னிச் சையாக மேற்கொண்டுள்ள நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கான்கனில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்ற மாநாட்டில், கரியமில வாயுக்கழிவு வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பாக சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்க இந்தியா தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மேற்கொண்டுள்ள நிலைபாடு, இந்தியாவின் அடிப்படை நிலைபாட்டிலிருந்து முற்றிலும் முரண் பட்டுச் செல்வதாகும். இத்தகைய சட்டப்பூர்வ மாக கட்டப்படுத்தும் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியளித்துள்ளது.

இந்தச்சூழலில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளஅறிவிப்பை, தனிப்பட்ட ஒன்றாக பார்க்க முடியாது. அது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகளில் நடந்துகொள்வதைப்போலவே,. மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவின் நலன்களுக்கு முழுமையாக உதவி செய்யும் விதத்தில் அந்நாட்டுடன் மிகவும் நெருங்கி பணியாற்ற இந்தப்பிரச்சனையிலும் முயற்சிக்கிறது; அது நமது நாட்டின் அடிப்படை நலன்களுக்கு எதிராக இருக்கும் போதிலும் கூட.

பருவநிலை மாநாட்டில், கரியமில வாயுக்கழிவு வெளியேற்ற அளவு தொடர்பாக சட்டப்பூர்வமாக கட் டுப்படுத்தும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள் வதில்லை என்ற இந்தியாவின் நிலைபாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை: