புதன், 15 டிசம்பர், 2010

தீண்டாமை ஒழிப்பில் பி.ராமமூர்த்தி


ஒரு வைதீகமான தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் பி.ராமமூர்த்தி. 1936ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தா லும் அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் னமே கம்யூனிஸ்டாக மாறியிருந்தார். அப் படி உருமாறிக் கொண்டிருந்த காலத்தில் தான் காங்கிரசில் ஹரிஜன இயக்கம் நடந்து வந்தது. பிறப்பால் பிராமணரான இவர் அதில் தீவிரமாகப் பங்கேற்றார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் தர்மகர்த்தா தேர்தலில் அந்தப்பகுதியில் வசித்த செருப்புத் தைக்கும் தொழிலாளர்களை வாக்களிக்க வைப்பதில் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றது அன்று பரபரப்பான சம்பவமாகும்.

இந்து அறநிலையச் சட்டத்தின்படி தர்மகர்த்தா பதவிக்கு தேர்தல் நடத்தப் பட்டது. அதன்படி தென்கலை வைஷ்ண வர், 18 வயதிற்கு உட்பட்டவர், வருடத் திற்கு 4 அணா சந்தா செலுத்துபவர், கோவிலைச் சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை யிலான பகுதியில் வசிப்பவர் தேர்தலில் வாக்களிக்கலாம். இதைப்படித்த பி.ராம மூர்த்தி திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலா ளர்களை - அந்தத் தாழ்த்தப்பட்ட மக் களை- வாக்களிக்கும்படிச் செய்ய முடிவு செய்தார். அவர்களில் 200 பேருக்கு தோளில் சங்கு சக்கர சூடுபோட்டு, அவர் கள் சார்பாகச் சந்தா செலுத்தி அவர் களை வாக்காளர்களாகப் பதியும்படி செய்தார். இதைக்கண்டு அதிர்ந்துபோன வைதீக வைணவர்கள் நகர சிவில் நீதி மன்றம் போனார்கள். அங்கே தீர்ப்பு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் கிடைத் தது. வைதீகர்கள் உயர்நீதிமன்றத்துக்குப் போனார்கள். அங்கேயும் அந்தத்தீர்ப்பு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இந்தியாவி லேயே இப்படியொரு வழக்கு நடந்து, இப் படியொரு சாதகமான தீர்ப்பு கிடைத்தது இதுவே முதல்முறையாகும். இது இயல் பாக ஒரு கேள்வியை எழுப்பியது. கோவில் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள் வாக் களிக்கலாம் என்றால் அவர்கள் ஏன் கோவிலுக்குள் வரக்கூடாது என்பது அந்தக்கேள்வி.

இந்த வழக்கு மற்றும் தீர்ப்பின் முக் கியத்துவத்தை உணர்ந்த காந்திஜி தனது ‘ஹரிஜன்’ பத்திரிகையில் இதை வர வேற்று உற்சாகமாக எழுதினார். 1935 ஜன வரியில் வெளிவந்த அந்தத் தலை யங்கத்தில் தீர்ப்பின் சில முக்கிய பகுதி கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் நீதி பதி எழுப்பிய இந்தக் கேள்வி அதி நியாய மானது- “செருப்புத் தைப்பவர் கோவி லின் உட்புறத்தில் நுழைவதில்லை, அவர் கோவிலுக்கு வெளியே இருந்து வழிபடுகிறார். அவருடைய பணம் கோவி லின் பணப்பெட்டிக்குச் செல்கிறது. தர்மகர்த்தாவை தேர்ந்தெடுக்கும் உரி மையை அவர் பெற்றிருக்கிறார். ஒரு மனி தன் தன்னுடைய உரிமையை ஒரு சில வருடங்களுக்குப் பயன்படுத்தவில்லை என்ற சாதாரண காரணம் மட்டும் நிரந் தரமாக அவர் ஒருபோதும் தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறுவதற்குக் காரணமாகுமா?” தாழ்த்தப்பட்டோரின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் அவர் பாதம் கோவி லுக்குள் படக்கூடாது எனும் பிராமணிய வாதிகளின் வாதம் இப்படியாக நீதிமன்ற வளாகத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதே காலத்தில் “கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்” எனப்பட்டதை உருவாக்கி அதற்குத் தலைவரானார் பி.ராமமூர்த்தி. இது இரண்டு விதங்களில் முக்கியமானது, ஒன்று, இந்தக் கள்ளி றக்குவோர்கள் சாணார்கள் எனப்பட்டு கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்டோர் போல் நடத்தப்பட்டதை அறிவோம். இரண்டு, அப்போது காங்கிரசானது கள் எதிர்ப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதற்காக தென்னை - பனை மரங்களை வெட்ட வேண்டும் என்றெல்லாம் காங்கிர சார் பேசி வந்தார்கள். இந்தச்சூழலில் அந்த அடித்தட்டு மக்களுக்காகச் சங்கம் அமைத்தார் கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி. அதாவது வைதீகத்திற்கு எதிராகவும், காங்கிரசுக்கு எதிராகவும் இதுவிஷயத் தில் ஒருங்கே செயல்பட்டார். கூடுதல் கூலி கேட்டு இந்தத் தொழிலாளர்கள் தீவிரமான வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள்.

கள்ளிறக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அவர் களைக் காங்கிரஸ் தலைவர் ராஜாஜியி டம் அழைத்து வந்தார் பி.ராமமூர்த்தி. அந்த காந்தியவாதிக்கோ இது மிகவும் அருவருப்பான விஷயமாக இருந்தது. “இன்று கள்ளிறக்கும் தொழிலாளர்களின் ஸ்டிரைக் நடக்கும், நாளை விபச்சாரி களின் ஸ்டிரைக் நடக்கும்” என்று ஆத்தி ரத்தோடு கூறினார் ராஜாஜி. இதற்கு இப்படி பதிலடி கொடுத்தார் ராமமூர்த்தி- “நீங்கள் ஒரு கிரிமினல் வக்கீல், இப்படித் தான் குதர்க்கமாகப் பேசுவீர்கள். கள் குடிப்பது தப்பு என்றால் மக்களிடம் பிரச் சாரம் நடத்துங்கள், அதற்காக அந்தத் தொழிலாளர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசாதீர்கள்”. உணர்வுப்பூர்வமான தொழிற்சங்க இயக்கமானது எப்படி இது வரை அருவருப்பாகக் கருதப்பட்ட அடித் தட்டு மக்களையும் கைதூக்கிவிடும், அவர்களது நியாயமான குரலை எதிரொ லிக்கும், பிராமணியத்தை அதிர வைக் கும் என்பதற்கு இது இன்னுமொரு உதார ணம்.

-அருணன்

காலந்தோறும் பிராமணியம் - பாகம் 5 நூலிலிருந்து

டிசம்பர் 15: பி.ராமமூர்த்தி நினைவுநாள்

கருத்துகள் இல்லை: