செவ்வாய், 4 ஜனவரி, 2011

பூமி வெப்பமடைவதால் இந்தியாவில் பருவநிலை மாறுகிறது பயிர் விளைச்சல் கடும் பாதிப்பு: 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை


பூமி வெப்பமடைவதால் இந்தியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களின் விளை வாக ஒவ்வோராண்டும் பயிர் விளைச்சல் மிக மோசமான அளவில் பாதிப்புக்குள்ளாகிய தால் நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ள னர்.

கடந்த பத்தாண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள னர் என்பது அரசின் மதிப்பீடாகும். ஆயினும் விவசாயிகளின் வறிய நிலை குறித்து கிராமங்களுக்கே சென்று ஆய்வு நடத்தி வரும் பத்திரிகையாளர் பி.சாய் நாத், இந்த மதிப்பீடு மிகவும் குறைவானதாகும் என்கிறார். ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகளின் நிலைகுறித்து ஆய்வு செய்து வரும் சாய்நாத், ‘இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக் கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்’ என்று குறிப்பிடுகிறார். பல மாநிலங் களில் விவசாயிகளின் தற் கொலைகள் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுவதில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

‘வறுமை கிராமப்புற இந்தியாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளது’ என்று கூறும் சாய் நாத், ‘இதுநாள்வரை கல்லூரி வரை தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்பி வந்த விவசாயி கள், தற்போது பள்ளி களுக்கே அனுப்ப முடியாமல் திண்டாடு கிறார்கள்’ என்கிறார்.

ஆயினும் இந்தியாவின் பொருளாதார நிலை என்ன? இங்கிலாந்தில் இருப்பதைவிட அதிகமான அளவிற்கு டாலர் பில்லியனர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் 60 கோடி பேர் ஏழைகள். நாட்டின் செல்வம் மக்கள் மத்தியில் பரவலாகச் செல்லவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பயிர் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்த நிலங்களையும் இழந்து மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர்.

நாட்டின் வடக்கே இமய மலையும் நாட்டின் மற்ற மூன்று பகுதிகளிலும் உள்ள கடல்களும் நாட்டினை கடந்த காலங்களில் மிகவும் வளமை யாக வைத்திருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் அவற்றை நம்பிச் செயல்பட முடியாத அளவிற்கு விவசாயிகளைக் கொன்று குவித்து வருகின்றன.

வடமேற்கேயுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளாக இருந்த வறட்சி இந்தக் கோடையில்தான் முடி வுக்கு வந்தது. ஆனால் நாட்டின் பிறபகுதிகளில் எப்போதும் பெய்திடும் பருவமழை கடந்த பத்தாண்டுகளில் மூன்று முறை ஒழுங்காகப் பெய்யத் தவறிவிட்டது.

இதன்விளைவு, விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பு; தங்கள் குழந்தைகளை திரும ணம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக விற்கும் கொடுமை; மேலும் கிராமப்புற மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்து வரும் அவலநிலை; இதன் காரணமாக நகர்ப்புற ஏழைகளின் எண் ணிக்கை நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் 2 கோடி மக்கள் பட்டினிப்பட்டாளத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள குழந்தை களில் பாதி, குறைந்த எடையுடன் இருக்கின்றன.

கிராமப்புறப் பொருளாதாரம் நிலைகுலைந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக் கிறார்கள். பொருளாதாரம் 9 விழுக்காடு அளவிற்கு வளர்ந் திருப்பதாக ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொண்டாலும், உணவுப் பணவீக்கத்தின் அளவு 16லிருந்து 18 விழுக் காடு அளவிற்குச் சென்றுள்ளது. இதன் காரணமாக அத்தி யாவசியப் பொருள்களைக்கூட சாமானியமக்கள் வாங்கமுடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. (ந.நி.)

கருத்துகள் இல்லை: