புதன், 5 ஜனவரி, 2011

ஊழலுக்கு எதிராக சாத்தான் ஓதும் வேதம்!

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திருமதி சோனியா காந்தி ஊழலுக்கு எதிராகசண்டமாருதம்செய்துள்ளார். ஊழலை ஒழித்திட அவர் முன்வைத்த ஆலோசனைகளில் சில:


* அரசியல் மற்றும் நிர்வாகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்போருக்கு எதிராக உள்ள ஊழல் வழக்குகளை விசாரித்திட விரைவு நீதிமன்றங்கள்.

* அரசு நிதியில் மட்டுமே தேர்தல்கள் நடத்திடுவது.

* பொருட்கள் அல்லது சேவை வசதிகளை அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை.

* எளிமை மற்றும் சிக்கனத்தை கடைப் பிடித்தல்.

தேசம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பெரும்பான்மையான ஆண்டுகள் காங்கிரஸ் தான் ஆண்டு வந்துள்ளது. ஊழலை ஒழித் திட காங்கிரஸை எவரும் தடுக்கவில்லை. எனினும் ஊழலின் இராஜநடை தொடர்ந்து வந்துள்ளது. ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளாக உள்ள காங்கிரசும் பாஜகவும் ஊழல்களில் சாதனைகளைப் படைப்பதில் போட்டி போட்டே வந்துள்ளனர். எனவே சோனியா காந்தியின் முழக்கம் சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒரு வர் கமல்நாத். இவர் தற்சமயம் சாலை வசதி அமைச்சராக உள்ளார். இப்பதவியில் முன்பு இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு! இவரின் மீது பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சிக் கும் நல்ல கருத்து இல்லை எனவும், அத னால்தான் அவர் அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை எனவும் பரவலாக பேசப்படுகிறது. தற்சமயம் அம்பல மாகியுள்ள நீரா ராடியாவின் உரையாடல்களும் அதனை வெளிப்படுத்துகின்றன.

கமல்நாத்தின் பணம் கொட்டும் இயந்திரம்

கமல்நாத்தின் ஊழல் வரலாறு என்ன? இதோ நீரா ராடியாவிற்கும் முதலாளிகள் சங் கத்தின் புரவலராக இருந்த தருண்தாசுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் களை கவனியுங்கள்.

நீரா ராடியா: கமல்நாத்திற்கு சிறிது அதிர்ச்சி தான்! (பழைய பதவியில்) அவர் சிறிது அதிகமாக ஆடிவிட்டார் என்பதை அவரிடம் கூற வேண்டியத் தேவை உள்ளது!

தருண்தாஸ்: உங்களுக்கும் எனக்கும் இடையே அளவில் கூறுகிறேன்! கமல் நாத்தின் பெயரை தரைவழிப் போக்குவ ரத்திற்கு நான்தான் பரிந்துரைத் தேன்! அவர் செயல்வீரர்! பணியையும் செய் வார்! தனது 15 சதவீதத்தையும் பெற்றுக் கொள்வார்! நீங்கள் தேசிய சேவையை யும் செய்யலாம்! பணமும் பார்க்கலாம்!

நீரா ராடியா : ஆம்! இப்பதவி கமல்நாத் திற்கு இன்னமும் ஏடிஎம் (பணம் கொட்டும் இயந்திரம்) தான்!

எந்தப்பணியாக இருந்தாலும் 15 சதவீதம் கையூட்டுப் பெற்றுக்கொள்வது கமல்நாத் திற்கு கைவந்த கலை என்பதை இந்த உரை யாடல்கள் வெளிப்படுத்துகின்றன. தற்போ தைய துறை கமல்நாத்திற்கு பணம் கொட்டும் இயந்திரம் என்றே நீரா ராடியா கூறுகிறார். அதனை தருண்தாசும் ஆமோதிக்கிறார்.

இந்த தருண்தாஸ் யார்?

ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல் போன்ற ஏகபோக செல்வந்தர்கள் அங்கம் வகிக்கும் முதலாளிகள் சங்கத்திற்கு புரவலராக இருந் தவர். நினைத்த நேரத்தில் பிரதமரை சந்திக் கும் செல்வாக்கு படைத்தவர். அவர் கமல் நாத்தை 15 சதவீதம் ஊழல் பேர்வழி என அழைக்கிறார். அவர் வகிக்கும் பதவியை பணம் கொட்டும் இயந்திரம் என்பதை ஆமோ திக்கிறார்.

புலி சைவமாகுமா?

இந்த உரையாடல்கள் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிராக “சண்டமாருதம்” செய்துள்ள சோனியா காந்தி கமல்நாத் மீது நடவடிக்கை எடுப்பாரா? ஊழலை ஒழிப்பதில் உண்மையிலேயே சோனியா காந்திக்கு அக்கறை இருக்குமா னால் தருண்தாஸ் கூற்றை தீர விசாரிக்க வேண்டும். தருண்தாஸ் கூற்று உண்மை எனில் கமல்நாத் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் சோனியா காந்தி இதனை செய்வார் என எதிர்பார்ப்பது புலி சைவமாகும் என எதிர்பார்ப்பது போலத்தான்! காங்கிரஸ் எனும் இயந்திரத்தின் உயிர்நாடியே முதலாளி கள் தரும் பணம்தான்! கமல்நாத் மீது கைவைத்தால் தேனிக்கூட்டை கலைத்தது போல இன்னும் பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பது சோனியா காந்திக்கு தெரியும்.

ஊழல் என்பது முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்துவந் துள்ளது. எனினும் தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு ஊழல் விசுவரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக தொலைத்தொடர்பு, கனிமவளங்கள், மின் உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி ஆகிய துறைகளில் அரசின் கொள் கைகள் ஆளும் வர்க்கங்களின் கொள்ளை இலாபத்திற்காக மாற்றப்படுகின்றன. இதற்காக ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்கிறது. இந்த ஊழல் பணம் சுழற்சியில் மீண்டும் தேர்தலில் விளையாடுகிறது.

எனவே ஊழல் என்பது ஏதோ ஒரு சில தனிப்பட்ட அரசியல்வாதிகளின் கொள்ளை என்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் இன்றைய வெளிப்பாடான தாராளமயக் கொள்கைகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. தாராளமயக் கொள்கைகளை வலுவாக அமலாக்கி வருவது காங்கிரஸ் கட்சி! அக்கட்சிக்கு தலைமை தாங்குவதுசோனியா காந்தி. எனவேதான் கமல்நாத் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்கஇயலாது!

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தோடு இணைந்துள்ளது. அதற் காக மக்களை திரட்டிட இடதுசாரிகள் முனைப்புடன் செயலாற்றுகின்றனர். அதற் கான அரசியல் தகுதியும் திறமையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடது சாரிகளுக்கு மட்டுமே உண்டு.

-அ.அன்வர் உசேன்

கருத்துகள் இல்லை: