வெள்ளி, 7 ஜனவரி, 2011

மாவேயிஸ்ட் ,மம்தா பானர்ஜி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் சேர்ந்து மேற்கு வங்க அரசை கலைக்க கூட்டு சதி
நாட்டில்
தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் யக்கத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயுள்ள உறவுகளை ஒப்புக் கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரே ஒரு சுய சரிதை எழுதியிருக்கிறார். இப்போதா வது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரும். மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, மாநிலங்களவை உறுப்பினர் சியாமள் சக்கர வர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக் களவை உறுப்பினர் பிரபோத் பண்டா, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் டானிஷ் அலி ஆகியோர் வியாழன் அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் செய்தியாளர்களுக் குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

வியாழனன்று (ஜனவரி 6) காலை நாங்களும், எங்களுடன் புரட்சி சோச லிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் மனோ கர் துர்க்கி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மக்களவை உறுப்பினர் நரஹரி மஹதோ, தெலுங்கு தேசக் கட்சி மக்க ளவை உறுப்பினர் நானியா நாகேஸ்வர ராவ் ஆகியோரும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித் தோம்,

மாவோயிஸ்ட்டுகளுக்கும் திரிணா முல் காங்கிரசுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து சமீபத்தில் ஊடகங் களில் வெளியான செய்திகளின் நகல் களையும், திரிணாமுல் காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் கபிர் சுமன் என் பவர் வங்கமொழியில் எழுதிய சுய சரி தையின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனையும் அவரி டம் கொடுத்தோம்.

உண்மையில் கபிர்சுமன் எழுதிய சுய சுரிதையானது மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான கிஷன்ஜிக்கு சமர்ப்பணம் செய்யப் பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் கபிர் சுமன், திரிணாமுல் காங்கிரசின் கொல் கத்தா தலைமை அலுவலகத்தில் மாவோயிஸ்ட் தலைவர்கள் ராஜா சர்க்கேல், பிரசுன் சட்டோபாத்யாயா ஆகியோருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மேற்படி இரு மாவோயிஸ்ட்டுகளும் தற்சமயம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கின்றனர். மேற்படி கூட்டத்தில் தற்போதைய மத்திய அமைச்சர்களாக உள்ள மம்தா பானர்ஜி மற்றும் சௌகதா ராய் ஆகியோரும் பங்கேற்றதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் நந்தி கிராமத்தில் எப்படித் தலையிடுவது என விவரமாக விவாதிக்கப்பட்டதாக அந் நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக் கூட்டம் குறித்து பின்னர் கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தின் நந்திகிராமம் மண்டலக் குழு செயலாளர் மதுசூதன் மண்டல் என்பவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மேலும், ப.சிதம்பரம் மேற்குவங்க முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை, ‘ஹர்மத்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந் தச் சொல்லை, மாவோயிஸ்ட்டுகள்தான் மார்க்சிஸ்ட் ஊழியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை மாவோயிஸ்ட்டுகள் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டிகளின் போது பயன்படுத்தி இருப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புல னாய்வு அமைப்புகளிடம் உள்ள வீடியோ பதிவுகளை ஆராய்ந்தால் இதனைத் தெரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாவோ யிஸ்ட்டுகள் இருந்து வருகிறார்கள் என்று நாட்டின் பிரதமர் அடிக்கடி கூறி வரும் அதே சமயத்தில், தாங்கள் எப்படி மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்தும் ‘ஹர்மத்’ என்ற சொல்லைப் பயன்படுத் துகிறீர்கள் என்று சிதம்பரத்திடம் கேட் டோம்.

இவ்வாறு திரிணாமுல் காங்கி ரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே பிணைப்பு இருப்பது உறு தியாக உள்ளது. மாவோயிஸ்ட்டுக ளுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி மட்டுமல்ல, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடு களின் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அக்கூட்டத்தில் இடது முன்னணியை அகற்ற, காங்கிரசு டன் மட்டுமல்ல, பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பலர் பேசி யுள்ளனர்.

மாவோயிஸ்ட் - திரிணாமுல் காங்கி ரஸ் உறவு என்பதை மேற்கு வங்க மாநில தேர்தலுடன் மட்டும் பார்க்க வேண்டாம். இது நாட்டின் பாதுகாப் பிற்கே மிகவும் ஆபத்தான ஒன்று. இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும் என்று ப.சிதம்பரத்திடம் தெரிவித்தோம்.

இதுகுறித்துப் பின்னர் ப.சிதம்பரம் பதிலளிக்கையில், நீங்கள் சொல்லியுள்ள விவரங்கள் உண்மையில் மிகவும் கடு மையானவை; இவற்றின் மீது மிகுந்த ஆழமான அக்கறையுடனும் எவ்விதப் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக் கிறேன் என்றார்.

அவர் தன் வாக்குறுதியை நிறைவேற் றுவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரியும் மற்ற தலைவர்களும் கூறினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டிருப் பதாக மேற்கு வங்க முதல்வர், அவருக் குக் கடிதம் எழுதியிருக்கிறாரே, பின் அவர் பாரபட்சமின்றி நடந்து கொள்வ தாக தெரிவித்தார் என்று கூறுகிறீர்களே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அவ் வாறு ப.சிதம்பரம் கூறினார்’’ என்று சீத்தாராம் யெச்சூர் பதிலளித்தார்.

‘‘மாவோயிஸ்ட்டுகள் - திரிணாமுல் காங்கிரசார் நடத்திய கூட்டத்தில் அயல் நாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறினீர்களே. அது தவறா?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘கலந்து கொள்வது தவ றல்ல, எங்கள் அலுவலகத்திற்கும் பலர் வந்திருக்கிறார்கள். அவர்கள் விவாதித்த அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.’’ என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ந.நி.)

கருத்துகள் இல்லை: